CD-LOVE-Q-25
“அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள், ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும் மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார். சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி,” (லூக்கா 7:41-43)
R2201[col.1 P4-7]: –
மரியாளின் மனப்பான்மையைப் பெற்றிருக்கும் யாவரும். ஆண்டவரின் பாதங்களை கழுவி, அபிஷேகிக்க முடியும் என்ற சிந்தனை எவ்வளவு ஆறுதலளிக்கூடியதாக உள்ளது. அர்ப்பணிக்கப்பட்ட சீஷர்களில் சிறியவருக்கு எதைச் செய்கிறீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று நம்முடைய ஆண்டவரின் சொந்த உதடுகளே அறிவித்தது. ஆசீர்வதிக்கப்பட்ட சிந்தனை, நம்முடைய ஆண்டவர் இன்னும் மாம்சத்தில் இருக்கிறார். அவருடைய சரீர அங்கங்களாக இருக்கும் உண்மையுள்ள புது சிருஷ்டிகள், ஆண்டவராக மதிக்கப்படுகிறார்கள். இவர்கள் இன்னும் மாம்சத்தில், கிறிஸ்துவுக்காக படும்பாடுகள் தொடருகிறது. மற்றும் கடைசி நபர் மகிமைப்படும் வரையில் இது முடிவுப் பெறாது. கொலோசேயர் – 1-24. மேலும், வேதவாக்கியம் நற்செய்தியைக் கொண்டுள்ளது கிறிஸ்துவே சரீரமாகிய சபைக்கு தலையானவர். இதற்காகவே கடந்த பதினெட்டு நூற்றாண்டுகளுக்குள் வளர்ச்சியின் செயல் நடைமுறையில் உள்ளது. இப்பொழுது சரீரத்தின் இறுதி அங்கத்தினர் இங்கே இருக்கிறார்கள் “அவரின் பாதங்கள்”. பாத அங்கத்தினர் வகுப்பாரில் பலர் சோர்வடைந்து, களைப்புற்றவர்களுக்கு, அன்று ஆண்டவரின் பாதங்களுக்கு ஆறுதல் அளிக்கப்பட்டது போல இவர்களுக்கும் ஓய்வும், புத்துணர்வும். ஆறுதலும் தேவைப்படுகிறது. இயேசுவின் பாதங்களை பொறுத்தவரை, மரியாளின் மிகுந்த அன்பு நிரூபிக்கப்பட்டது போல, இப்பொழுது, கிறிஸ்துவின் அடையாளமான பாதங்களைப் பொறுத்தவரையில் சோதனை வருகிறது. வேதபாரகர்கள், வேதவல்லுனர்கள் மற்றும் பரிசேயர்களை ஒப்பிட்டுகையில், ஆண்டவர் தம்முடைய நாட்களில் செல்வாக்கற்றவராக இருந்ததுப் போல, பாத அங்கத்தினர்களும் இன்று செல்வாக்கற்றவர்களாக இருக்கிறார்கள். ஆண்டவரை அதிகமாக நேசிப்பவர், தாங்கள் பெற்ற பாவமன்னிப்பை நன்கு உணர்ந்துக் கொண்டவர்கள் மட்டுமே, அவருடைய “பாத அங்கத்தினரை” நேசித்து, இந்நாளிலும் அவர்களுக்கு ஊழியம் செய்ய விரும்பி, அவர்களோடு ஐக்கியப்பட்டிருப்பார்கள். சீமோன், நிக்கோதேமு போன்ற மற்றவர்கள் நன்கு அறிந்திருந்தாலும், கணிசமான ஆர்வமிருந்தாலும், தற்போதைய நசரேயனுடைய சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படுவார்கள். “உங்கள் தேவன் இராஜரீகம் பண்ணுகிறார்” என்று சியோனுக்கு நற்செய்தியை சுவிசேஷமாக அறிவிக்கும் அவருடைய பாதங்களை கண்டு வெட்கப்படுவார்கள் – ஆயிர வருட யுகம் விடிந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்துவின் ஆட்சி துவங்கிவிட்டது. (ஏசாயா 52:7) சுவிசேஷம் அல்லது அதன் ஊழியர்களை நிமித்தம் வெட்கப்படுகிறர்வர்கள், ஆண்டவரும். பிதாவாகிய தேவன் நிமித்தம் வெட்கப்படுகிறவர்களாக இருப்பார்கள். இவர்கள் உலகத்தை ஜெயிப்பவர்களாக அங்கீகரிக்கப்படாமல், அதற்கு பதிலாக இந்த உலகத்தினாலும் அதன் ஆவியினாலும் ஜெயிக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள், சீஷர்களுக்குரிய சிறப்புரிமைகளிலும், முழு அறிவிலும் முன்னேறி செல்ல, தகுதியற்றவர்களாக காணப்படுவார்கள். மரியாளைப் போல, அதிக அளவிலான ஆவியைப் பெற்றவர்கள் வெகு சிலர். ஒருவருக்கொருவர் உதவி செய்யக்கூடியவர்கள் வெகு சிலர். ஆறுதலான வார்த்தைகள், உதவிகரமான ஆலோசனைகள் மற்றும் உற்சாகம் என்னும் பரிமளதைலத்தை ஒருவர் மீது ஒருவர் ஊற்றுவது வெகு சிலர். இவ்வாறு உதவக்கூடியவர்கள், “தலையின்” மேலும் பொதுவாக சரீரத்தின் மேலும், இன்னும் பாத அங்கங்கள் மேலும் உண்மையான அன்பினால் நிறைந்திருப்பர். மரியாளின் சொந்த குறைபாடுகளின் புரிந்துக்கொள்ளுதல் மற்றும் அதற்கான ஆண்டவரின் இரக்கம் மற்றும் கிருபையினால் அவளுக்கு கொடுக்கப்பட்ட பாவமன்னிப்பே, அவர்களுடைய அன்பின் ரகசியமாக இருந்தது. இவர்கள் மட்டுமே தங்களுடைய அழைப்பையும், தெரிந்துக்கொள்ளுதலையும் உறுதிச்செய்யக்கூடியவர்கள் என்று சரீரத்தின் அன்பான, உதவிசெய்யக்கூடிய அங்கத்தினரின் உணர்வுகளை பற்றி அப்போஸ்தலர் அறிவித்து, “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.” (2 கொரிந்தியர் 5:14,15) என்றும் கூறுகிறார்.
R3561[col.2 P1]: –
அதிகமாக அன்பு செலுத்துவோம். சிலுவை சுமக்கும் நம்முடைய ஆர்வத்தின் வழியாக அன்பை வெளிப்படுத்துவோம். எந்த நேரத்திலும் நம்முடைய ஆர்வம் குளிர்ச்சியடைந்தால், “சிலுவை சுமக்காமல் கீரீடம் இல்லை” என்பதை நினைவில் கொள்ளுவோம். “அவரோடுக் கூட பாடுகள்பட்டால், அவரோடுக் கூட ஆளுகையும் செய்வோம். அவரோடுக் கூட மரித்தால் அவரோடுக் கூட உயிர்த்தெழுவோம்” என்ற அப்போஸ்தலர் பவுலின் வார்த்தையை நினைவில் கொள்ளலாம். ஆயினும் மரணத்தின் பயமோ அல்லது கிரீடத்தின் மதிப்புயர்வுகள் நம்முடைய நோக்கத்தை என்றுமே கட்டுப்படுத்தக்கூடாது. தேவன் நமக்கு செய்தவைகளை பற்றிய மதிப்பீடுகள். அவருக்காக நம்முடைய அன்பு, மற்றும் அவரைப் பிரியப்படுத்த விரும்பும் காரியங்களைச் செய்வதற்கான விருப்பம் ஆகியவை, நம்முடைய ஆண்டவர் மேலுள்ள பக்தியின் முக்கிய உந்து விசையாக இருக்கவேண்டும். இவ்வாறாக, நாம் பதிலளிக்கூடிய அன்பை காட்ட வேண்டும். ஆண்டவராம் இயேசு சபையின் தலையாக நீண்ட காலத்திற்கு முன்பு மகிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், அவருடைய “சரீரத்தின் அவயவங்களாக” இன்னும் நம்மை அவர் கண்டுணருகிறார். ஆகவே, இவர்களில் சிறியவருக்கு நாம் எதை செய்தாலும். அவர்கள் சிலுவை சுமப்பதற்கு நாம் எப்படிப்பட்ட ஒத்தாசை செய்தாலும், அவருக்காக நம்முடைய அன்பை வெளிப்படுத்துகிறோம் என்று அவர் நம்மை பாராட்டுவார். எந்த அளவுக்கு மற்றவர்களின் சிலுவையை சுமப்பதற்கு நாம் உதவி செய்கிறோமோ, அந்த அளவுக்கு அவரிடத்தில் நாம் அன்பு செலுத்துகிறோம் என்றும் அதை அவருக்கே செய்தோம் என்று எண்ணி, அவர் நம்மை பாராட்டுவார்.