CD-LOVE-Q-24
R3545[col.2 P5] through R3546[col.1 P2]: –
ஆவியின் கனிகள் சில நேரங்களில், சத்தியத்தின் சேவையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. உதாரணமாக. சத்தியத்தை பரப்புவது. சத்தியத்தை பேசுவது, இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், சத்தியத்தில் அறிவுக்கும் சிலரை கொண்டுவருதல், சத்தியத்தை வெளியிடுவதற்காக பணம் செலவழித்தல் – இவை அனைத்தும் ஆண்டவர் எதிர்பார்த்திட்ட கனிகள் என்று சிலர் கருதுகின்றனர். அப்படி இல்லை, கனிகள் இன்னும் மேன்மையானதும், இவைகளை காட்டிலும் மதிப்புவாய்ந்ததுமாக இருக்கிறது. அதை ஆவியின் கனிகள் என்று அப்போஸ்தலர் விவரிக்கிறார். திராட்சை எல்லா கிளைகளிலும் ஊடுருவிருக்க வேண்டும். திராட்சைப் பழம் ஒவ்வொரு கொடியிலும் இருக்க வேண்டும். இந்த ஆவியின் கனிகள் – சாந்தம், தயவு, பொறுமை, நீடிய பொறுமை, சகோதர அன்பு, மற்றும் அன்பு என்று கணக்கிடப்படுகிறது. இவைகள் நமக்குள் நிரம்பியிருந்தால், நம்முடைய கர்த்தரும், இரட்சகருமானவரைப் பற்றிய அறிவில், நம்மை கனியற்றவர்களாக இருக்கவொட்டாது என்று அப்போஸ்தலர் கூறுகிறார். சில குறிப்பில், இந்த கனிகள் அனைத்தும் ஒன்று. அதாவது, சரியான கிறிஸ்தவ பொறுமையின் உள்பொருள் – அன்பு. நம்பிக்கை, விசுவாசம் மகிழ்ச்சி ஆகியவற்றின் உள்பொருள், நம்முடைய பிதாவுக்கான அன்பு மற்றும் அவருடைய வாக்குத்தத்தங்களில் வெளிப்படுத்தப்பட்டது போல அவருடைய அன்பின் மேல் நம்முடைய நம்பிக்கை. ஆகவே இந்த கனிகளின் பெயர்கள். ஆவியின் கிருபைகள் ஒரே வார்த்தையாகிய அன்பு என்று வெளிப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கொடிகளிலும் காணப்படவேண்டிய கனிகள் இவைகளே. ஒரு கொடியாக அதன் இடத்தை தக்க வைத்து கொண்டால், படிப்படியாக மகிமை அடையலாம். இவைகள் இன்று, மற்ற காரியங்களைச் செய்து, தேவனுடைய தெய்வீக ஆய்வில் தேர்ச்சி பெறுவோம் என்று எண்ணி, நம்மை நாம் வஞ்சித்துக் கொள்ள வேண்டாம். மற்ற காரியங்கள், நற்கிரியைகள், சத்தியத்தின் தேடல், சத்தியத்தை பகிர்ந்துக்கொடுத்தல், போன்றவைகள், நம்முடைய இருதயத்தின் இந்த கனியின் விளைவுகளானதால், ஒரு அளவுக்கு தான் பிதாவினால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதை குறித்து அப்போஸ்தலர் ஆற்றலுடன் கூறிகிறார் – “எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்கு கொடுத்தாலும் அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.” குறிப்பாக ஆண்டவருடைய ஊழியத்தை பார்த்தால், இதே சிந்தை உண்மையாக உள்ளது. நாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் அறுவடைய வேலையின் செலவழித்து, நம்முடைய பணம் எல்லாவற்றையும் புத்தகங்களை அச்சிடுவதற்கு செலவழித்தாலும் அல்லது வேறு வழிகளில் கர்த்தருடைய ஊழியத்திற்காக நாமே செலவு செய்தாலும், நம்முடைய இருதயங்களில் இவைகள் அன்பின் விளைவுகளாக இராவிட்டால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. அப்படியானால், பரிசுத்த ஆவியின் கனிகள். சாந்தம், தயவு, பொறுமை…. அன்பு போன்ற குணங்களை நம் இருதயங்களில் பேணி வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையும், நாம் கர்த்தருக்கு பிரியமானவர்களாக இருப்பதற்கு” அதிக கனிகளை” ஏராளமாக கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையும் இருக்க வேண்டும். ஆகையால், இந்த கனிகளின் வெளிப்பாடு, சந்தேகத்திற்கு இடமின்றி, பல வழிகளில் காணப்படும். ஒருவேளை, ஏழைகளுக்கு அன்னாதானம் கொடுக்கலாம். நாம் சுட்டெரிக்கப்படும்படியாக நம்மை இரத்த சாட்சியாக மரிப்பதற்கு வழி நடத்தக்கூடிய சத்தியத்தை அறிவிப்பதில் நம்முடைய விசுவாசம். நீதியின் கொள்கையின் மேல் நம்முடைய விசுவாசம். ஆண்டவரின் மேலுள்ள அன்பு மற்றும் நம்பிக்கை போன்றவைகளுக்காக நம்முடைய சரீரம் சுட்டெரிக்கப்படுதல் அல்லது நம்முடைய எல்லா பொருட்களின் இழப்பும் உண்மையில் மகிழ்ச்சிக்குரியது.