CD-LOVE-Q-14
E264(p2): –
முத்திரை என்பதற்கு ஒரு பணியமர்வு அல்லது நியமனம் அல்லது ஒரு குறிப்பை குறிப்பதாகும். இந்த உலகத்தின் பிள்ளைகள் சில குறிப்புகளால் வேறுபடுத்தப்படலாம். தேவனுடைய பிள்ளைகள், கிறிஸ்துவுக்குளான புது சிருஷ்டிகள் மற்ற குறிப்புகள் அல்லது பண்புகளினால் வேறுப்படுத்தப்படலாம். ஒரு வகுப்பாரின் ஆவி (மனம், நோக்கம், விருப்பம்) உலகத்தினுடையது. மற்றொரு வகுப்பாரின் ஆவி (மனம், நோக்கம், விருப்பம்) தேவனுடையது. தேவனிடத்தில் உண்மையாக அர்ப்பணிக்கப்பட்ட தருணத்திலிருந்து, அதற்கான ஆதாரத்தை வார்த்தைகள், சிந்தனைகள் மற்றும் நடத்தையில், முத்திரையாக அல்லது குறிப்புகளாக குறிக்கப்படுகிறது. புதிய சிந்தை கிருபையிலும், அறிவிலும், அன்பிலும் வளரும்போது, இந்த குறிப்புகளும் இன்னும் தெளிவாக வளருகிறது. மற்றொரு வார்த்தைகளில் சொல்லபோனால், சகல காரியங்களையும் தேவனுடைய சித்தத்திற்கு அல்லது பரிசுத்த ஆவிக்கு ஒப்புக்கொடுத்து, நம்முடைய மனித ஆவியை அல்லது சித்தத்தை கலைந்துவிட்டால், தேவனுடைய ஆவி (சிந்தை) நம்முடைய ஆவியாகும் (சிந்தை). ஆகையால், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தை நமக்குள்ளும் இருக்க, நாம் அறிவுறுத்தப்படுகிறோம் – தேவனுடைய சித்தம் மட்டுமே செய்யக்கூடிய ஒரு சிந்தை. எனவே நம்முடைய புதிய சிந்தை அல்லது ஆவி பரிசுத்தமானது அல்லது தேவனால் வழிநடத்தப்பட்டது. நம்முடைய உடன்படிக்கையை மீறக்கூடிய எதுவுமே செய்யக்கூடாதென்று, அப்போஸ்தலர் இந்த பகுதியில் அறிவுறுத்துகிறார் நம்முடைய புதிய சிந்தைக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் எதையும் அல்லது கடமை தவறுவதற்கு நம்முடைய மனசாட்சியை கட்டாயப்படுத்தக்கூடிய எந்த செயலையும் செய்யக்கூடாது – கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாக, நம்முடைய மனசாட்சியை காயப்படுத்தும் எதையும் செய்யக்கூடாது. உங்களுடைய தெய்வீக புத்திரசுவிகாரத்தை முத்திரையிடும். பரிசுத்த ஆவியை, தேவனுடைய சிந்தையைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
“நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்” – (எபேசியர் 1:13,14)
பழங்காலத்தில் பல்வேறு காரியங்களுக்காக முத்திரைகள் பயன்படுத்தப்பட்டது. (1) கையொப்பம் இடுவதற்கும். ஒரு காரியத்தை உறுதி படுத்துவதற்கும் முத்திரைகள் பயன்படுத்தப்பட்டது. (2) மத்தேயு 27:66, வெளி 10: 4,20:3 வசனங்களில் சொல்லப்பட்டது போல, இரகசியமாக, ஊடுருவலுக்கு எதிராக பாதுகாக்க முத்திரைகள் பயன்படுத்தப்பட்டது.
தேவனுடைய ஜனங்கள் “வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பரிசுத்த ஆவியினால் முத்திரை போடப்பட்டார்கள்” என்று (1)ல் சொல்லப்பட்ட அர்த்தத்தில் சொல்லப்படுகிறது. சிலர் எண்ணுகிறபடி நாம் பரிசுத்த ஆவியானவருக்குள். அதாவது சமமான தேவர்களில் மூன்றாவது தெய்வத்தினால், முத்திரை போடப்பட்டோம் என்று அப்போஸ்தலர் கூறவில்லை. “நாம் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பரிசுத்த ஆவியினால் முத்திரைப்போடப்பட்டோம்” என்று அவர் அறிவிக்கிறார். பரிசுத்த ஆவி பிதாவிடத்திலிருந்து வருகிறது . அவர் கிறிஸ்துவின் வழியாக முத்திரையாக இருக்கும் பரிசுத்த ஆவியியைக் கொண்டு முத்திரைப் போடுகிறார். இது அப்போஸ்தலரால் உறுதிப்படுத்தப்படுகிறது. (அப்போஸ்தலர் 2:33) மற்றும் நம்முடைய ஆண்டவராம் இயேசுவின் பதிவுகளை பொறுத்த வரையில் முழு இசைவாக உள்ளது. இவரே புத்திரர்களின் வீட்டில் முதலாவது முத்தரிக்கப்பட்டவர்.” அவரைப் (இயேசு) பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார்…” (யோவான் 6:27) என்று வாசிக்கிறோம்.
“பரிசுத்தமான ஆவி”, “சத்திய ஆவி”, போன்ற தேவனுடைய பரிசுத்தமான தாக்கங்களை குறிப்பிடும் மற்றவார்த்தைகளை விவரிப்பதை போல, “வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆவியும்” விவரிக்கப்படத்தக்கது. முத்திரிக்கப்படுதலுக்கும். தேவன் நமக்கு தந்திருக்கும் வாக்குத்தத்தத்திற்கும் தொடர்பு இருப்பதாக இது காட்டுகிறது. இது முத்திரையிடப்பட்டவர்களோடு” தேவனுடைய உடன்படிக்கையின் உயர்த்தரமான ஆதாரம் அல்லது மேம்பட்ட சான்றாகும். தேவன் தம்மை உண்மையாக நேசிப்பவர்களுக்கு (யாவருக்கும் மேலாக) “மிக பெரிதும் விலையேறப் பெற்ற வாக்குத்தத்தங்களை” ஒதுக்கிவைத்திருக்கிறார். தேவன் அனுமதிக்கும் அன்பு மற்றும் பக்திக்குரிய சோதனைகளை விசுவாசத்தோடு சகித்ததற்குபின் அவர் வாக்களித்த ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்வார். அதே நிரூபத்தின் பின்னர், இதே முத்திரையைப் பற்றி அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார். அங்கு இந்த வாக்குறுதி, “மீட்கப்படும் நாளுக் கென்று” அடையாளப்படுத்தப்படுகிறது. (எபேசியர் 4:30) மற்றொரு வார்த்தைகளில் சொல்லப்போனால். மீட்கப்படும் நாளுக்கென்று வாக்களிக்கப்பட்ட ஆவியின் முத்திரை நாம் (சபை) “ஆவியின் முதற்பலன்களைக் கொண்டிருக்கிறோம்” என்ற கருத்தை, வெளிப்படுத்துவதற்கான மற்றொரு வடிவமாகும். ஆண்டவருக்கும் நமக்கும் இடையில் உள்ள உடன்படிக்கையின் பந்தத்தில் நாம் சோர்வடையாமலிருந்தால், முழுமையான வாக்குறுதியை நாம் பெறுவோம் என உறுதியளிக்கப்படுகிறது. புத்திரசுவிகாரம் மற்றும் வாரிசுக்கான உடன்படிக்கையின் தேவனுடைய அடையாளம், நம்முடைய நெற்றிகளில் போடப்படும் வெளிப்படையான அடையாளம் அல்ல. அல்லது பூமிக்குரிய விவகாரங்களில், உலகின் வாழ்வு வளத்திற்கு தேவனுடைய ஆதரவுக்கான அடையாளமும் வெளிப்படையானது அல்ல. சுகமளிக்கும் வரங்கள், அல்லது அந்நிய மொழியில் பேசுவது போன்ற அற்புதமான “வரங்களைப்” பெற்ற அநேகர், ஆவியின் முத்திரையையும் சாட்சியையும் இல்லாதிருந்தார்கள். – அப்போஸ்தலர் 8:13,21, 1 கொரிந்தியர் 13:1-3. முத்திரிக்கப்பட்டவர்களின் இருதயத்தில் பரிசுத்த ஆவியின் அடையாளம் உள்ளது. ஆகவே இதை வேறொருவரும் அறியாததும், பெற்றுக்கொள்ளுபவர் மட்டும் அறிந்துக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. (வெளி 2:17) மேலும், அனுதின வாழ்க்கையில் அவர்களிடம் வெளிப்படக்கூடிய நற்பண்புகளாகிய ஆவியின் கனிகளை மட்டுமே மற்றவர்கள் உணரமுடியும். “உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே. அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்” (2 கொரிந்தியர் 1:21,22) இந்த புத்திரசுவிகாரத்தின் முத்திரை, அன்பின் ஆவியாகும். இது அப்பா பிதாவே, உமது சித்தம் செய்ய பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லத்தக்க பிதாவோடும், அவருடைய எல்லா பரிசுத்தமான ஒழுங்குகளோடு ஈடுசெய்கிறது. இந்த சுவிகாரப்புத்திரரின் அடையாளத்தை அல்லது முத்திரையைப் பெற்றிருப்போர், பிதாவின் சித்தத்தைச் செய்ய மட்டும் முற்படாமல், அதை “துக்கத்தோடு அல்ல” மன மகிழ்ச்சியோடு செய்வார்கள்.- (1 யோவான் 5:3) புத்திரர்களாக முத்திரிக்கப்படுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவி, முதற்பலன்களை உடைய அல்லது வரவிருக்கும் சுதந்தரத்தின் மேல் மெய்யார்வம் கொண்டிருப்பதே, ஆவியின் சிறந்த முற்போக்கான “சாட்சியாகும்.”- இன்றைய வாழ்வில் கிறிஸ்தவ அனுபவங்களின் இது சிறந்தப் பகுதியாகும். அனுபவத்தின் இந்த நிலையைப் அடைவதற்கு முன், அபிஷேகம் செய்யப்பட்ட நம்முடைய கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலே வருவதன் மூலம் அபிஷேகத்தின் பங்கை நாம் பெறவேண்டும். சத்திய ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுவதன் மூலம், தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வதற்கும், அதைச் செய்வதற்கும் நம்முடைய ஆவியை பரிசுத்தமாக்க வேண்டும். நாம் நீதியின் ஊழியத்தை செய்வதற்கு ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டபின் இந்த அனுபவம் வருகிறது. நாம் கருவிலிருந்து கடந்து, தேவன் நம்மை புத்திரர்களாக கருத்தில் கொண்டு, நம்மை முத்திரித்திருக்கிறார் என்பதை பேசுவதற்கு இது ஒரு ஆதாரமாக இருக்கிறது. எல்லா விசுவாசிகளும், இந்த அபிஷேகம் மற்றும் தேவனுடைய பரிசுத்த ஆவி, சத்திய ஆவியின் ஜெநிப்பித்தலின் தாக்கத்தின் கீழ் வருவதற்கு முயல வேண்டும். ஆகையால், ஆவியினால் புத்திரராக ஜெநிப்பிக்கப்பட்டவர், பிதாவால் ஏற்றுகொள்ளப்பட்டு முத்திரைப் பெறுவதற்கு பிதாவுக்குள்ளான ஒற்றுமை நிறைந்த அந்த நிலையை அடைய முயல வேண்டும். இந்த நிலைப்பாட்டை அடைந்துவிட்டால், இந்த முத்திரையை மங்காதபடிக்கும். அழித்து விடாதபடிக்கும் எச்சரிப்பாக இருக்கவேண்டும் – இந்த விலைமதிப்புள்ள பொக்கிஷத்தை மூடிவிடவோ, அணைத்துவிடவோ கூடாது – இந்த அன்பின் மற்றும் மகிழ்ச்சியின் ஆவியை மற்றும் பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தையும், கூட்டுறவையும், பாரமான, இருளான, துக்கமுள்ள ஆவியாக மாற்றிவிடக்கூடாது. ஆனால் அதைப் பெற்ற அனைவரும், அதை எப்போதும் பிரகாசமாகவும், புத்துணர்வோடும் காத்துக்கொள்ள, தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.