CD-LOVE-Q-4
R2648[col.1 P4]: –
இயற்கை அன்புக்கும். கடவுளுடைய அன்பிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை நாம் காணலாம். எல்லா மனிதரிடமும் குறைந்தபட்சம் இயற்கையான அன்பு காணப்படுகிறது – சுய அன்பு, குடும்பம் மற்றும் நண்பர்களிடம் கொண்டுள்ள அன்பு. நம்முடைய ஆண்டவர் இந்த அன்பைப் பற்றி பேசுகிறாரா? இது தேவனுடைய அன்பு இல்லை என்று குறிப்பிடுகிறது. “உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே” (லூக்கா 6:32) எனவே கடவுளின் அன்பு. இயல்பான மனுஷனிடம் காணப்படும் பொதுவான அன்பை விட வித்தியாசமானது மற்றும் “கர்த்தர் உங்கள் இருதயங்களைத் தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக” (2 தெசலோனிக்கேயர் 3:5) என்று பவுல் கூறுகிறது போல, நாம் அதை இயக்க வேண்டும், அதை வளர்க்க அல்லது உருவாக்க வேண்டும். தெய்வீக வார்த்தையின் வழியாக, இந்த அன்பில் நாம் நடத்தப் படவேண்டும். இது வீழ்ச்சியுற்ற மனிதனுடைய இயல்பான அன்பிலிருந்து வேறுப்பட்ட தேவனுடைய அன்பின் தன்மைக்கு நம் கவனத்தைக் கொண்டு வருகிறது. அதே வேளையில். இயல்பான மனுஷனின் அன்பைச், சிறப்பாக பயிற்றுவித்தாலும், சுய நலமானதாகவே காணப்படுகிறது. நண்பர்களின் சார்பாக தேவன் நம்மீது உயர்ந்தவகையான அன்பை காட்டினார். நாம் பாவிகளும், அந்நியர்களும், துன்மார்க்க செயல்களால் எதிரிகளாக, இருக்கையில், தேவனுடைய அன்பான திட்டத்தின் கீழ் கிறிஸ்து நமக்காக மரித்தார். “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” என்று இயேசு கூறினார். ஆனால் அவருடைய எதிரிகளுக்காகத் தம் ஜீவனைக் கொடுப்பது, நிச்சயமாக அன்பின் மிக உயர்ந்த வகையாகும் – சுயநலமற்ற, பரத்திற்குரிய அன்பு (யோவான் 15:13, ரோமர் 5:7) இத்தகையான தகுதி மிஞ்சிய, தியாகமான அன்பு, விழுந்துபோன மனுக்குலத்திற்கு எந்தவிதத்திலும், அறிந்திராத முற்றிலும் வேறுப்பட்டதாகும்.
R3233[col.2 P1-3]: –
ஒரு வார்த்தையில், நட்பின் இரண்டு நிலை உள்ளன – இயல்பான நட்பு, இதில் இயற்கையான குணங்களைப்போன்ற மனிதர்கள் ஒன்றுசேர்க்கப்படுவார்கள். மற்றொன்று ஆவிக்குரிய நிலை – இதில் நாகரீக பண்புகளைப் போலல்லாமல், ஆவிக்குரிய நம்பிக்கை, நோக்கங்கள் மற்றும் குறிக்கோளில் ஒத்திருப்பார்கள். இவர்கள் மாம்சத்தை அல்ல, புதிய கட்டாகிய, புதிய அன்பு. இவர்களின் இருதயத்தை, கிறிஸ்துவின் ஐக்கியத்திலும் இன்னும் அன்பிலும், நெருக்கமாய்ப் பிணைக்கிறது. கிறிஸ்து இயேசுவுக்குள்ளான இந்த புதிய சிருஷ்டிகள், மாம்சத்தின்படி அல்ல, ஆவியின்படி ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்கிறார்கள். மாம்சத்தின் பலவீனம் என்னவாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவருடைய ஆவியிலும் அல்லது புதிய சிந்தையிலும், நன்மையான, உண்மையான, உன்னதமான, தூய்மையான – மிக உயர்ந்த உணர்வுகளும், உயர்ந்த அபிலாஷைகளும் உள்ளது. இவர்கள் புதிய நிலைப்பாட்டின் நோக்கத்தில் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். இது தேவனோடும், அவர்களின் நட்போடும் இசைந்து, உலகம், மாம்சம் மற்றும் சாத்தானின் தாக்குதல்களோடு விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராடுவதில், ஒருவருக்கொருவர் மற்றவர்களின் பலத்தை உணர்ந்துக் கொள்ளும் போது, அவர்களின் வல்லமை அதிகரிக்கிறது. கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக இந்த புது சிருஷ்டிகளுக்கும். பழையவைகள் கடந்து, எல்லாம் புதிதாக மாறினவைகளுக்கும். இடையில் உள்ள அன்பையோ, நட்பையோ. மொழி அல்லது பேனாவினால் சரியாக வெளிப்படுத்த முடியாது. எனினும், ஒரு பெற்றோர் தம்முடைய குழந்தைகள் மேல் வைத்திருக்கும் அதே அன்பை மற்றவரின் குழ்ந்தைகளிடமும் கொண்டிருக்கவேண்டும் என்று பொருள் அல்ல. ஒருவர் தனக்கே உரிய பெரிய பொறுப்புகள் இருப்பதை உணரவேண்டும். பரிசுத்தவான்களும் கூட அதே அளவில் நேசிக்கப்படுவார்கள் என்று இது குறிப்பிடவில்லை. நம்முடைய ஆண்டவர், அவருடைய சில சீஷர்களை விசேஷமாக நேசித்தார் என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் பூரணமானது அபூரணத்தை மாற்றும்போது, எல்லா “சகோதரர்களும் “பரிபூரணமாக இருப்பார்கள். அனைத்து அண்டை சகோதரர்களும் பிரியமானவர்களாக இருப்பார்கள். அதுவரையில், எவ்வாறாயினும், நாம் அனைவரையும் நேசிக்க வேண்டும். ஆனால், இயல்பான கடமைகள் மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சியிலும், “ஒரு வித்தியாசத்தை காண்பிக்கவேண்டும்” – யுதா 22