CD-KNOWLEDGE-Q-20
2பேது 1:2,3 “தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது. தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவ பக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி….”
இந்த வார்த்தைகளுக்கு தொடர்பாக நமக்குள் எழும் முதல் கேள்வி என்னவெனில் – “இவைகள் யாரிடம் விண்ணப்பிக்கப்பட்டது? இந்த கட்டளைகள் பாவிகளுக்கு கொடுக்கப்பட்டதா? பாவிகள் இப்படிப்பட்ட வழியில் மட்டுமே தேவனை அணுக முடியுமா? இல்லை. இந்த வசனத்திற்கு முன்னதாக எழுதப்பட்ட வசனத்தின்படி, இயேசுவின் இரத்தத்தின் மேல் உள்ள விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்தக் கட்டளைகள் கொடுக்கப்படுகிறது.
கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளாக வேண்டும் என்பதை இது காட்டுகிறது. நீதிமானாக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, முழுமையாக தங்களை அர்ப்பணித்த விசுவாசிகளாக இருந்தாலும் சரி, “இந்த ஆசரிப்பு கூடாரத்தில்” நாம் தொடர்ந்து வளர்ச்சி அடைவதற்கு விசுவாசத்தோடு முடிவு பரியந்தம் நிலை நின்று “முதலாம் உயிர்த்தெழுதலில்” பங்கடைய வேண்டும். ஒவ்வொரு வருடமும் புதிய ஜீவனுக்குள் புதுப்பிக்கப்பட்டு வளர்ச்சி அடைய வேண்டும். ஆனாலும் இந்தக் கருத்து கிறிஸ்துவின் நாமத்தை பேருக்காக பயன்படுத்தக்கூடிய அநேகருடைய அனுபவத்தில் எதிரிடையாகவே தோன்றுகிறது. ஆகவே “நான் முதல் முதலில் ஆண்டவரை அறிந்துகொண்டபோது இருந்த ஆனந்த பாக்கியம் எங்கே? ஆத்துமாவை உயிர்ப்பிக்கும் இயேசுவின் பார்வையும் அவருடைய வார்த்தைகளும் எங்கே?” என்று பாடல் வரிகளை அநேகர் பாடுகிறார்கள்.
கிருபை மற்றும் சமாதானமும் மாறி மாறி, கூட்டப்பட்டும் கழிக்கப்பட்டும் வருகிறது என்ற பிரபலமான சிந்தனைகள் கிறிஸ்துவ வகுப்பின் மத்தியில் பரவி உள்ளது. முதலில் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள். அதற்குப்பின் அதை தொலைத்து விடுகிறார்கள். மீண்டுமாக அதை பெறுகிறார்கள். அதற்குப்பின் அதை தொலைத்து விடுகிறார்கள். இப்படியாக, அவர்களின் வாழ்க்கையில் தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் “கிருபையும் சமாதானமும் உங்களுக்குள் பெருகக்கடவது” என்று அப்போஸ்தலன் குறிப்பிட்ட வார்த்தைகளை சிலர் மட்டுமே புரிந்துகொள்ள முடிகிறது. மற்றவர்கள் இதைப் புரிந்துகொள்ளாமல் தவறாக நடைமுறைப்படுத்துவதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. அநேக கிறிஸ்தவர்கள் அடிப்படையாக தங்களுடைய இரட்சகர் மேல் கொண்ட விசுவாசத்தினால் கண்டடைந்த சமாதானத்தையும், கிருபையயும் தக்கவைத்துக்கொள்வதற்கு தேவையான அறிவில் குறைவுள்ளவர்களாக இருப்பதே இதற்கு காரணமாக இருக்கிறது. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுவதைப் போலிருக்கிறார்கள் (1கொரி 3:1). “காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்க வேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். பாலுண்கிறவன் குழந்தையாய் இருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.” (எபி 5:12-14)
ஒரு பாடத்தில் உள்ள ஒரு தவறு, அநேக பாடங்களில் அநேக தவறுகளுக்கு வழி நடத்திவிடும். இந்தக் காரியத்திலும் இவ்வாறாகவே நடந்து வருகிறது. விசுவாசிகள் மட்டுமே தப்பித்துக்கொண்டு வீழ்ச்சிக்கு தண்டனையாக நித்திய ஆக்கினை என்ற அடிப்படை போதனை அநேக தேவனுடைய ஜனங்களின் முயற்சிகளை தவறாக வழி நடத்தப்பட்டு, நியாயத்தீர்ப்புகள் உருகுலைந்து விடுகிறது. முக்கியமாக ஒரு தனிப்பட்ட நபர் தன்னை தான் நித்திய ஆக்கினையிலிருந்து விடுவித்து கொள்ள முதலில் சிந்திப்பார். அதற்கு பின் இயற்கையாகவே தன்னால் முடிந்தவரைக்கும் மற்றவர்களை தப்புவிக்க உதவி செய்வார். இந்த நோக்கத்தையே மையமாக கொண்டு “பாவிகளை இரட்சித்து”, “கிறிஸ்துவுக்கு குழந்தைகள்” என்ற நிலையில் கொண்டுவருவதற்கு முதன்மையாக கவனம் செலுத்துவது ஆச்சரியம் அல்லவே. ஆனால் குழந்தைகளாக மாறினபின் தேவனுடைய அறிவில் வளர்ச்சி அடைந்து கிறிஸ்துவுக்குள் பூரணபுருஷராக மாறுவதற்கான காரியங்களுக்கு மிக குறைவான கவனம் செலுத்தப்படுகிறது. குழந்தைகளாகவே தொடர்ந்து பாலான ஆகாரத்தை கொண்டு போஷிக்கப்பட்டு, பலமான ஆகாரத்தை உண்ணுவதற்கு பழக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஏதோ ஒரு சமயத்தில் அவர்கள் பலமான ஆகாரத்தை புசிக்க முயற்சிக்கும் போது அவைகளினால் பலப்படுவதைக் காட்டிலும், அவைகள் தொண்டையில் சிக்கி திணருகிறார்கள்.
ஆகவே விசுவாசிகள் நடக்கவேண்டிய சரியான வழிமுறைகளை அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார். அதில் அவர்கள் படிப்படியாக வளர்ச்சி அடைந்து கிறிஸ்துவ வளர்ச்சியில் பூரணப்பட்டு, அவர்கள் பெற்ற கிருபையையும், சமாதானத்தையும் பெற்றுக்கொள்ளலாம். இதன் துவக்கம் சரியானதாக இருந்தாலும் சரி, “வேதத்தின் வார்தையினால்” உண்மையாக ஜெநிப்பிக்கப்பட்டு, “ஒரு தரம் பரிசுத்தவான்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட மகா பரிசுத்தமான விசுவாசத்தில்” வளருவதே அத்தியாவசியமாக இருக்கிறது. உலகப்பிரகாரமாக சோதித்து அறியக்கூடிய அறிவினால் அடையக்கூடிய விசுவாசம் அல்ல. இவர்கள் விசுவாசம் “மகா பரிசுத்தத்தை” விட்டு வெகு தூரத்தில் உள்ளது. இப்படிப்பட்ட விசுவாசம் தங்களுடைய சொந்த தீர்ப்பினால் ஏற்படக்கூடியதாக இருக்கிறது. எது சத்தியம் என்றும் எது தவறு என்றும், மோசேயின் சாட்சி மற்றும் தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலரகள், ஆண்டவராம் இயேசுவின் சாட்சிகளில் என்ன தவறுகள் உண்டு என்று அலசி ஆராய்ந்தபின் வரும் விசுவாசமாகும். இவர்களின் விசுவாசம் வீழ்ச்சியையும், ஈடுபலியையும் அதற்கு தேவையான சகலத்தையும் ஒத்துக்கொள்வதில்லை. இதன் விளைவாக ஈடுபலியை அடிப்படையாக கொண்டிருக்கும் உயிர்த்தெழுதலை முற்றிலுமாக மறந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட விசுவாசம் “மகா பரிசுத்தமான விசுவாசம்” அல்ல. இப்படிப்பட்ட காரியங்களின் மேல் விசுவாசம் உள்ளவர்கள் அப்போஸ்தலர்களால் குறிப்பிடப்பட்டவர்கள் அல்ல. அவர்களிடம் கிருபையும் சமாதானமும் என்றுமே பெருகுவதில்லை. ஆயினும், நம்முடைய வாசகர்கள் மட்டுமே ஆவியோடும், புரிந்துகொள்ளுதலோடும், கீழே சொல்லப்படும் பாடல் வரிகளை முழுமனதோடு பாடமுடியும்.
“என்னுடைய நம்பிக்கை இயேசுவின் இரத்தம் மற்றும் அவருடைய நீதி மட்டுமே, இயேசுவின் நாமத்தை தவிர நான் வேறு எதன் மேலும் சாயமாட்டேன். கிறிஸ்து என்னும் கன்மலையின் மேல் நான் நிற்பேன், மற்ற எல்லா இடங்களும் புதை மணலாம்”.
நம்முடைய ஆண்டவரும், இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நீதியின் மேல் விசுவாசம் வைப்பதே நாம் கட்டப்பட வேண்டிய உண்மையான அஸ்திபாரமாகும். பாவத்திற்கான அவருடைய பலி ஆதாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் ஒரே முறை கொடுக்கப்பட்டதும், முழுமையான ஈடுபலியாகவும், இருக்கிறது. இதனால் காலப்போக்கில் அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் அறிவை பெற்று, புது உடன்படிக்கையின் கீழ் சுத்திகரிக்கப்பட்டு, கிருபையின் அடிப்படையில் நித்திய ஜீவனை பெறுவார்கள் என்ற உண்மையான விசுவாசம் வேண்டும். இப்படிப்பட்ட அஸ்திபாரத்தில் கட்டப்பட்டவர்களுக்குள் கிருபையும் சமாதானமும் பெருகும்.
A346: –
இந்தக் காரியங்களை பற்றிய அறிவும் நெருங்கி இருக்கும் சகல ஆதாரங்களும், உடன்படிக்கை செய்த தேவனுடைய பிள்ளைகளிடம், விசேஷமாக திவ்விய சுபாவத்தை பரிசாக பெற விரும்பும் அனைவரையும் அதிகமாக ஊக்குவிக்கப்பதாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய தலையை உயர்த்தி, மகிழ்ந்து, தங்களுடைய மீட்பு சமீபமாக இருப்பதை அறிந்து, சகல பாரமான தடைகளையும் தள்ளிவிட்டு, தாங்கள் துவங்கின ஓட்டத்தை பொறுமையோடே ஓட வேண்டும். சுயத்திலிருந்து நம்முடைய கவனத்தை நகர்த்திவிட்டு, இப்படிப்பட்ட பலவீனங்கள் அனைத்தும் இயேசுவின் ஈடுபலியினால் மூடப்பட்டது, என்பதை உணர்ந்து, நம்முடைய பலிகளும், சுய வெறுப்பும், நம்முடைய இரட்சகரும் ஆண்டவராம் இயேசுவால் மட்டுமே தேவனால் அங்கீகரிக்கப்பட்டது என்று அறிந்துகொள்ள வேண்டும். மேலும், அவருடைய வார்த்தைகளில் சொல்லியிருக்கிறபடி நாம் “ஜெயிப்பவர்களாக” வெற்றிபெற போதுமானது. இது அவருடைய குணங்களிலிருந்தும், தெய்வீக திட்டத்திலும் நாம் பங்கு பெறுவதற்கான விதிமுறைகளினால் பெறும் அறிவிலிருந்து கிடைக்கக்கூடிய பெலனாகும். ஆகவே “தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது. தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துப் பங்குள்ளவர்களாகும் பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” (1பேது 1:2-4) என்று பேதுரு குறிப்பிடுகிறார்.
ஆனால் பரலோக பரிசை அடைய ஓடும் ஒவ்வொருவருக்கும் தேவன் வாக்களித்த இந்த அறிவையும், இந்த பெலத்தையும் கொடுக்கும் முன் அவர்களின் உடன்படிக்கையில் உண்மையாக நிலைநிற்கிறார்களா? என்பதை நிச்சயமாக சோதிப்பார். உடன்படிக்கையின் போது நீங்கள் உங்கள் முழு நேரத்தையும், முழு திறமைகளையும், தேவனுக்கு அற்பணித்தீர்கள். இப்போது கேள்வி என்னவெனில் –
தேவனுக்கென்று நீங்கள் இப்போது எவ்வளவு கொடுத்திருக்கிறீர்கள்? உடன்படிக்கையின் போது நீங்கள் வாக்களித்தபடி உங்களுடையதெல்லாம் மனப்பூர்வமாக கொடுக்க முன்வந்திருக்கிறீர்களா?
மற்றவர்கள் தேவனுடைய திட்டகங்களை ஏற்றுக்கொள்ளவும் அவருடைய மேன்மையான வேலைகளை செய்வதற்கும் உங்களுடைய விருப்பங்களையும், திட்டங்கள் அனைத்தையும் விட்டு விட மனதாய் இருக்கிறீர்களா?
எல்லா விதமான சமுதாய கட்டுகளிலிருந்தும் பூமிக்குரிய சிநேகிதத்தை இழந்தாலும் இவைகளை செய்யமுன்வருகிறீர்களா?
சுயத்தை வெறுத்தாலும் செய்த உடன்படிக்கைக்கு உண்மையாக இருக்க விரும்புகிறீர்களா?
நீங்கள் உங்களை முழுமையாக அரிப்பணிக்கவில்லையா? அல்லது பாதியை மட்டும் அரிப்பணிப்பதற்கு நீங்கள் எண்ணங்கொண்டிருந்தீர்களானால், உங்கள் சோதனையின் நாட்களில் விசுவாசத்தின் பரிட்சைகளுக்கு நிலை நிற்பதற்காக நீங்கள் தேவனுடைய வார்த்தைகளையும், புதைந்திருக்கும் பொக்கிஷங்களையும் ஆராய்வது மிகவும் கசப்பான வேலையாக தோன்றும்.