CD-KNOWLEDGE-Q-6
A13[p1]:
தேவனுடைய நோக்கங்களின் வெளிப்பாடுகளைப் பற்றி படிப்பதே, மிக மேன்மையான எந்தக் காரியத்திலும் மேலான கிரியையாக இருக்கிறது. “இதை காண தூதர்களும் ஆசையாக இருக்கிறார்கள்.” தங்கள் நிமித்தமல்ல, நமது நிமித்தமே இவைகளைத் தெரிவிதார்களெனென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது.; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தை பிரசங்கித்தவர்களைக் கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருந்தார்கள்.” (1 பேதுரு 1:12) தேவனுடைய ஞானமானது, வருங்காலத்திற்கான தீர்க்கதரிசனங்களையும் இக்காலத்தைக்குறித்தும், கடந்தகாலத்தைக்குறித்தும் அறிவுறுத்துகிறது. ஆனால் தேவனுடைய பிள்ளைகளில் சிலர் தங்களுடைய அறியாமையில், தேவனுடைய வார்த்தைகளைப் படிப்பதை நிராகரித்து விட்டு “ஒரு மனுஷன் இரட்சிக்கப்படுவதற்கு மத்தேயு 5ம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களே போதுமானது” என்ற முடிவுக்கு வருகிறார்கள். மேலே சொல்லப்பட்ட காரியங்களை சுட்டிக்காட்டி தேவன் கடுமையாக கண்டிக்கிறார். வருங்காலத்தை குறித்து அறிந்து கொள்வதற்கு ஆர்வமுள்ளவர்களை, திருப்திபடுத்துவதற்காக மட்டுமே தேவன் தீர்க்கதரிசனங்களைக் கொடுக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதன் உண்மையான பொருள் என்னவெனில் உடன்படிக்கை செய்த தேவனுடைய புத்திரர், தகப்பனுடைய திட்டங்களைப் புரிந்துகொண்டு, அந்த திட்டத்திற்கு இசைவாக தன்னால் முடிந்த வரைக்கும் செயலாற்றவும், தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து, நடந்து கொண்டிருப்பவைகளையும், நடக்கப்போகிறவைகளையும் புரிந்துகொள்வதே அவருடைய நோக்கமாக இருக்கிறது. இப்படியாக தேவனுடைய வேலைகளில் ஆர்வம் காட்டுபவர்கள், நிச்சயமாக நல்ல ஆவியோடும், புரிந்து கொள்ளுதலோடும், ஊழியம் செய்யும் ஒரு ஊழியக்காரனாக மட்டும் அல்லாமல், தேவனுடைய புத்திரராகவும், சுதந்தரராகவும் செயல்படுவார்கள். ஆகவே தேவனுடைய வார்த்தைகளைக் கவனத்தோடு படித்து அறிந்து கொண்டால் மட்டுமே நம்முடைய விசுவாசம் உறுதிப்பட்டு, பரிசுத்தத்தில் வளர்ச்சி அடைய முடியும்.
A20 (P2) through A 21(P1):
மனிதர்களை காண்பதை, விட்டுவிட்டு நல்ல நோக்கத்தோடு வசனங்களை தேடுவதில் நேரத்தை செலவழித்து பயனடைவதற்கு தேவன் நம்மை அழைக்கிறார். (ஏசா 1:18) இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டவர்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ள பரலோக ஆசீர்வாதங்களைக் காண்பார்கள். விசுவாசமில்லாமலும் நீதிமானாக்கப்பட்ட நிலையைப் பெறாமலும், தெளிவான சத்தியத்தைப் புரிந்து கொள்வது கூடாத காரியம். ஏனெனில் “நீதிமானுக்காக வெளிச்சமும்…. விதைக்கப்பட்டிருக்கிறது….” (சங். 97:11) என்று சங்கீதக்காரன் கூறுகிறார். ஆகவே தேவனுடைய பிள்ளைக்கு கொடுக்கப்படும் விளக்கின் வெளிச்சம் அவனுடைய பாதையிலிருக்கும் இருளை முழுமையாக அகற்றும். “உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” (சங்.119:105). ஆனால் இந்த வெளிச்சம் “நீதிமான்களுடைய பாதைக்கு” மட்டுமே வெளிச்சமாக இருக்கும். பரிபூரணமான நாளைப் போய், இந்த பாதை சேரும் வரைக்கும், அதிகதிகமான வெளிச்சத்தை பிரகாசிக்கும். (நீதி 4:18) உண்மையில் ஒருவரும் நீதிமான் இல்லை, ஒருவராகிலும் இல்லை.” (ரோம 3:10) ஆனால் “விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்ட வகுப்பார்” என்று குறுப்பிடப்படுபவர்கள் மட்டுமே நீதிமான்கள் என்று எண்ணப்படுகிறார்கள். இவர்கள் மட்டுமே இந்தப்பாதையில் நடக்க சிறப்புரிமை பெற்றவர்கள். இந்தப்பாதையில் நாளுக்கு நாள் சத்திய வெளிச்சம் அதிகரித்து, தேவனுடைய திட்டங்களின் வெளிப்பாடுகளை மட்டுமல்ல, இனிவரும் காரியங்களையும் அறிந்து கொள்ள வழிவகுக்கிறது. உண்மையில், ஒவ்வொரு விசுவாசியின் பாதையும் வெளிச்சமாகவே இருக்கிறது. இருப்பினும் இந்த வாக்கியத்தின் விசேஷித்த செயல்பாடுகள் என்னவெனில் – இந்த வெளிச்சத்தில் நடப்பவர்களை “நீதிமானாக்கப்பட்ட வகுப்பார்” என்று அழைக்கப்படுகிறார்கள். கடந்த காலத்திலிருந்த முற்பிதாக்கள், தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் மற்றும் கடந்த காலத்து பரிசுத்தவான்கள் அந்தப் பாதையில் நடந்தார்கள். மேலும் இக்காலத்தில் அதிகரிக்கும் வெளிச்சத்தில் நடந்து கொண்டிருக்கிறோம். இந்த நாளைக் காட்டிலும் வரும் காலத்தில் (பரிப்பூரணமான நாள் வரைக்கும்) இந்த வெளிச்சம் அதிகரித்து கொண்டிருக்கும். இது ஒரே தொடர் பாதையாக இருக்கிறது. மேலும், குறித்த காலங்களில், வெளிச்சம் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பது – தேவனுடைய தெய்வீகத் திட்டமாக இருக்கிறது.
ஆகவே இவ்வாக்குத்தத்தம் நிறைவேறுதலுக்காக காத்திருக்கும் – “நீதிமான்களே மகிழ்ந்து களிகூறுங்கள்”. ஆவிக்குரிய வாழ்க்கையைக் குறித்து கவலைப்படாதவர்களும், குறைந்தளவு விசுவாசமுள்ளவர்களும் இனிவரக்கூடிய வெளிச்சத்தை காணாதவர்களாக இருப்பதினால் தொடர்ந்து அவர்கள் இந்த பாதையில் நடக்காமல் இருளில் அமருவதற்கு தேவன் அவர்களை அனுமதிக்கிறார்.
R 1719 (last P):
பார்த்தபடி நாம் கிறிஸ்துவுக்குள் விசுவாசம் வைத்திருக்கிறோம், தேவனுடைய வார்த்தைகளின் ஆழமான விசுவாசம் கொண்டிருக்கின்றோம். இந்த விசுவாசத்தை ஆராய்ந்து, மெய்ப்பித்து விட்டோம். இவைகளை நம்முடைய இருதயத்திலும், சிந்தையிலும் ஆழமாக பதித்து விட்டோம். ஆகவே கிறிஸ்துவுக்குள் இருக்கும் இந்த விசுவாசம் நம்முடைய வாழ்க்கையை ஊக்குவிக்கும் வல்லமையாக ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட விசுவாசம் உள்ளவர்கள் உலகத்தின் புதிதான காரியங்களை உணர்சிவசமாக தேடமாட்டார்கள். மேலும் மனிதர்களின் வீணான தத்துவங்கள், தேவனுடைய வார்த்தைகளை எவ்வளவு திறமையாக மேற்கொள்கிறது என்ற ஆராய்ச்சியில் எப்போதும் தங்களுடைய நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்கள் இந்த உலகத்தையும், சாத்தானையும், மாம்சத்தையும் முழுமையாக ஜெயிக்க தங்களுக்குள் போதுமான அளவு விசுவாசம் இல்லை என்பதை பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறார்கள்.
R2411(COL.1 P5)
இதற்குத் தேவையான முக்கிய பாடம் – விசுவாசத்தின் மூலம் நாம் தேவனுடையவர்களாக்கப்பட்டு, வளர்ச்சி அடைவதற்காக, பள்ளியில் நுழைகிறோம். மேலும் அறிவின் வளர்ச்சியினால் மட்டுமே நம்முடைய விசுவாசம் வளரமுடியும். (உலக அறிவை பற்றியோ, கல்வியை பற்றியோ இங்கு குறிப்பிடப்படவில்லை). அதாவது நாம் தேவனை அறியும் அறிவையும், அவருடைய திட்டங்களையும், அவருடைய குணங்களையும் அவருடைய வழிமுறைகளையும் அறியக்கூடிய அறிவில் நாம் வளரவேண்டும். ஆகவே நம்முடைய போதகரின் வார்த்தைகளையும், பொதுவான நடத்தை பற்றியும், அவருடைய பராமரிப்பைப் பற்றியும், தனிப்பட்ட முறையில் அவர் கொடுத்த கட்டளைகளையும் கவனத்தோடு படிக்கவேண்டும். இவை அனைத்திற்கும் அவருடைய வார்த்தைகளின் மூலமே நாம் விளக்கம் காண வேண்டும். முதலில் நாம் எதை எல்லாம் விசுவாசித்தோமோ, “தேவனுடைய நன்மைகள் மற்றும் ஞானத்தைக் குறித்து சொல்லப்படுகிறது” அவைகளை நாம் அறிவாக பெற்றுக்கொள்கிறோம். மேலும் அகலத்திலும், நீளத்திலும், ஆழத்திலும், விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு வாழவும், நம்முடைய இரட்சகரின் அன்பை அதிகமாக புரிந்து கொள்ளவும் இந்த அறிவு நம்மை வழி நடத்தும்.