CD-EVILSPEAK-Q-19
R2735 (col.1p1): –
தேவன் அன்பாகவே இருக்கிறார். அவர் நம்மேல் வைத்திருக்கும் அந்த தெய்வீக அன்பை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற முக்கிய காரணத்திற்காகவே, நமக்கு எல்லா வாக்குத்தத்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அன்பு நமக்குள் வளர்ச்சி அடைய வேண்டுமானால், அதாவது ஆண்டவர் நம்மேல் காட்டின அன்பின் அளவிலும், சாத்தானின் சுய நலத்திற்கும் அவனுடைய சட்டத்திட்டங்களுக்கு முற்றிலும் எதிராகவும் அவருடைய அன்பின் பிரமாணங்களும் வளர வேண்டும் என்றால் முதலில் சுத்த இருதயம் நமக்குள் இருக்க வேண்டும். சரியான முறையில் இப்படிப்பட்ட வளர்ச்சியடைவதற்கு நல்ல மனசாட்சி மிக அவசியம். ஏனெனில் சிலருக்கு கெட்ட மனசாட்சிகளும் உண்டு. நம்முடைய விழுந்துபோன நிலையில் இருக்கும் மற்ற அவயவங்கள் குணப்படுவதை, உயர்ந்த நிலையில் சிந்திக்க வைப்பதற்கு சில ஒழுங்கு முறைகளை ஏற்படுத்த வேண்டும். ஒருவருடைய மனசாட்சி மணி நேரங்களை சரியாக குறிக்கப்பட்டிருக்கும் கடிகாரத்தைப் போலிருக்கிறது. ஆனால், அது சரியான நேரத்தை காட்டுவதற்கு அதற்குள் இருக்கும் முக்கிய வில்விசையை (main spring) முதலில் ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும். அதாவது அந்த கடிகாரம் சரியாக ஓடுவதற்கு அதற்குள் இருக்கும் வில்விசையை சரியாக ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும். அதே போல தேவனுடைய வார்த்தைகளில் உள்ள அன்பின் பிரமாணத்தோடு இசைவாக இருக்கும் புதிய பரிசுத்தமான சித்தங்களை நாம் அனுமதித்தால் நன்மை இன்னதென்றும், தீமை இன்னதென்றும் சரியாக உணர்த்தப்படுவோம்.