CD-EVILSPEAK-Q-12
மத் 12:34-37 – “விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய், அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.”
R1937 (col.p2,3): –
நாம் சபை என்றும், இக்காலத்தில் மாம்சத்தில் இருக்கும் நம்மை, இரண்டாம் வருகையில் வந்திருக்கும் மணவாளன் பார்வையிட்டு கொண்டிருக்கிறார் என்பதையும் (மத் 22:11) உணர்ந்திருக்கிறோம். ஆகவே இந்த நியாயத்தீர்ப்பும், தெரிந்து கொள்ளுதலும். நடக்கக்கூடிய கோட்பாடுகளை நாம் மிக துல்லியமாக கவனிக்கவேண்டும்.
நம்முடைய இருதயம் மற்றும் வாயும் விசேஷித்த கவனிப்பின் கீழ் அல்லது ஆழ்ந்த சோதனையின் கீழ் வைக்கப்பட்டிருப்பதை நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகள் குறிப்பிடுகிறது. இருதயத்தின் சோதனை தனிப்பட்ட குணங்களையும், வாயின் வார்த்தைகள் அந்த குணங்களின் முன்னுரையை குறிப்பிடப்பட்டுள்ளது – “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.” (நீதி 4:23,24) சரியான வார்த்தைகள் வெளிப்படுத்த சரியான மன நிலை தேவைப்படுகிறது என்ற காரியம் தெளிவாக குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், ஒவ்வொரு மனுஷனின் அனுபவத்தின்படியும் இருதயத்தின் நிறைவால் வாய்பேசும்” என்று எழுதியிருக்கிறது. ஆகவே நம்முடைய ஆண்டவரின் எதிர்பார்ப்புக்கு தக்கதாக, நம்முடைய வார்த்தைகள் நியாயத்தீர்ப்பின் கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். தேன் தடவப்பட்ட வார்த்தைகள் வஞ்சகத்திற்கு போடப்படும் முகமூடியாக இருக்கிறது என்றும் சுயநலமான காரியங்களுக்கு தேவையான மாற்றங்கள் ஏற்படும்போது அந்த முகமூடிகள் வெகு சீக்கிரத்தில் கழன்றுவிடும் என்றும் நம்முடைய ஆண்டவர் குறிப்பிடுகிறார். நம்முடைய முழு வாழ்க்கையிலும் செயல்படுத்தப்படும் நடத்தை நம்முடைய இருதயத்தின் உண்மையான காரியங்களின் முன்னுரையாக இருக்கிறது.