CD-EVILSPEAK-Q-1
யாக் 3:8-10 – “நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது. அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. அதினாலே நாம் பிதாவாகிய தேவனை துதிக்கிறோம். தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருத்து புறப்படுகிறது. என் சசோதரரே, இப்படியிருக்கலாகாது.”
R2443 (col. 1 P5 – col.2 P1): –
ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் தங்களுடைய நாவினால் சபிக்கிறார்கள் என்று அப்போஸ்தலனாகிய யாக்கோபு எந்தக் கோணத்தில் கூறுகிறார்? மேலும், அனைவருக்கும் இவ்வளவு வெளிப்படையான எச்சரிப்பு தேவையா? நிச்சயமாக எந்தக் கிறிஸ்தவனும் தங்களுடைய சகோதரர்களை எந்தவிதமான பிரதிக்கினையோடு அல்லது முன்திட்டமிட்டு, பக்தியற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி சபிக்கமாட்டர்கள். ஆனால் நம்முடைய நாவு மற்றவர்களைக் காயப்படுத்தி, சபிப்பதற்கு மற்ற வழிகள் ஏதும் உண்டா? உபயோகத்தில் இருக்கும் “curse” என்ற ஆங்கில வார்த்தையின் பொருள், கடந்த நூற்றாண்டில் சற்று மாற்றப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பொதுவாக, “curse” என்ற வார்த்தைக்கு “காயப்படுத்துவது” என்ற பொருள் முழுமையாக தொலைந்துபோனது. அதற்குப் பதிலாக “ஆணையிடுதல்” மற்றும் “பக்தியற்ற பேச்சுகள்” என்று பொருள்படுத்தப்பட்டது. ஆணையிட்டு சபித்தலைக் குறிக்கக்கூடிய வெவ்வேறு வார்த்தைகள் கிரேக்க மொழியில் பயன்படுத்தப்பட்டது. (அநாத்தீமா மற்றும் அநாத்தீமாட்டிஸோ என்ற வார்த்தைகள் புதிய ஏற்பாட்டில் பத்து முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.) மேலும், பகிரங்கமாக கூறக்கூடிய சாபங்களைக் குறிப்பதற்கும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது. (அதாவது காட்டாரா மற்றும் காட்டாராயோமாய் என்ற வார்த்தைகள் – எதிராக பேசுதல், தீமையாக பேசுதல் அல்லது பேச்சின் மூலமாக காயப்படுத்துவதை பொருள்படுத்தும்) இரண்டாவதாக சொல்லப்பட்ட வார்த்தையை அப்போஸ்தலனாகிய யாக்கோபு பயன்படுத்துகிறார். ஒரே நாவினால் நாம் தேவனை துதிக்கிறோம் அதே நாவினால் நம்முடைய சகோதரர்களை தவறாகவோ அல்லது காயப்படுத்தியோ, புறம் கூறுகிறோம் என்று பொருள்படும்படி அவர் கூறுகிறார். “உங்களை சபிப்பவர்களை (தீமையாக பேசுபவர்களை) ஆசீர்வதியுங்கள்” என்று நம்முடைய ஆண்டவர் இதே வார்த்தையை பயன்படுத்துகிறார். “ஆசீர்வதிக்க வேண்டியதேயன்றி சபியாதிருங்கள்” என்று அதே வார்த்தையை பவுலும் தேவனுடைய ஜனங்களுக்கு எச்சரிப்பாக கூறுகிறார். மேலும் “இனி ஒருபோதும் கனிக்கொடுக்கமாட்டாய்” என்று இயேசு இதே வார்த்தையைக் கூறி சபித்தார் என்று வாசிக்கிறோம். வருங்காலத்தில் அது வளர்ச்சி அடையாமல், சாதகமற்ற சூழ்நிலையில் இருக்கும் என்பதை முன் அறிவித்தார். இப்படியாக நியாயப்பிரமாணத்திற்கு கீழ் இருந்த யூதர்கள், சாபத்திற்கு கீழ் இருந்ததாக பவுல் அறிவிக்கிறார். நியாயப்பிரமாணம் தீமையானது அல்ல, ஆனால் மாம்சத்தில் அபூரணமாக இருந்த இஸ்ரயேல் ஜனங்கள் அதன் தீர்ப்பின் (சாபம்) கீழ் வந்துவிட்டார்கள். “கிறிஸ்து நமக்காகச் (முன்னே யூதர்களுக்கு) சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு (தீர்ப்புக்கு) நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்….” (கலா 3:10-13) என்றும் பவுல் அறிவித்தார். இதே காரியத்தை கீழ்க்காணும் வசனத்திலும் காணலாம்.
“இந்த பூமி முள்ளும் குறுக்கையும் முளைப்பிக்கும்” என்று இந்த பூமியை சபித்தபோது, அந்த நிலம் பயிரிடுவதற்கு ஏற்றதாக இருக்கவில்லை. மாறாக, அதன் களைகள் பிடுங்கப்பட்டு சுட்டெரிக்கப்பட்டபின் அது விளைச்சலுக்கு ஆயத்தமாக இருக்கும்.” – மத் 5:44, ரோம 12:14, மாற் 11:21, எபி 6:8.
இந்த உண்மையான வார்த்தையையும், அதை பயன்படுத்தின முக்கியமான நோக்கத்தையும் நம்முடைய சிந்தைக்குமுன் கொண்டுவந்து பார்க்கும்போது ஓரளவுக்குச் சரியாக மொழிப்பெயர்த்திருந்தாலும், இக்காலத்து பொதுவான கல்வி அறிவின்படி பயன்படுத்தப்பட்ட விதமானது – அந்த வார்த்தையின் முக்கியமாக அர்த்தம் மறைந்தேவிட்டது என்று தெரிகிறது. (அதேபோல, “தீமை” என்ற வார்த்தையின் விரிவான அர்த்தமும் தொலைந்துவிட்டு, நிலையான ஒழுக்ககேடு, தவறு, தீமை, துன்மார்க்கம் என்று பொருள்படுத்துகிறது. ஆனால் விரும்பப்படாத எந்தக் காரியத்திற்கும் அல்லது நன்மை அல்லாதவைகளும் – தீமை என்று பொருள்படும்)