Q-6
1 தீமோத்தேயு 6:10 “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது, சிலர் அதை இச்சித்து விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக்குத்திக் கொண்டிருக்கிறார்கள்.”
R2355 [col. 1 P4]
கிறிஸ்தவரின் நிதானம் அவருடைய வியாபாரத்திற்கும் நீட்டிக்கப்படவேண்டும். அவரது குறிக்கோள்களிலும், இலட்சியங்களிலும், பணம் சம்பாதிப்பதிலும் மற்றும் பணத்தை சேமிப்பதிலும் மிதமாகவும் கட்டுப்பாட்டுடனும் இருக்கவேண்டும். ஆண்டவரின் அழைப்பின் கீழ் அவர் தேடும் செல்வங்கள் பூமிக்குரியவை அல்ல, மாறாக பரத்திற்குரியது என்பதை அவர் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். மேலும் ஆண்டவர் கூறுவது போல, “ஐசுவரியவான் தேவனுடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிப்பது அரிது” அப்படியானால், கிறிஸ்தவ மிதவாதமானது, முதலில் பரலோக இராஜ்யத்தையே தேடும், அதை அடையவது மாபெரும் ஐசுவரியமாக இருக்கும் என்றும், பூமிக்குரிய நல்நிலை, ஐசுவரியம் மற்றும் வசதிகள் ஆகிய அனைத்தையும் அதற்கு ஈடாகக் கொடுத்து வாங்கினாலும் கூட அவையாவும் அதற்கு மலிவானவையே என்றும் ககுதிடும்.