Q-1
“1 பேதுரு 5:5-6 “அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள், நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துக்கொள்ளுங்கள், பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆகையால், ஏற்றக்காலத்தில் தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.”
1 பேதுரு 3:4 “அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது, அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.”
சங் 147:6 “கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார், துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.”
சங் 149:4 “கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார், சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.”
F 90[P1]
புது சிருஷ்டியாக அழைப்பு கொடுக்கப்படும் யாவருக்கும் – “மனத்தாழ்மையை” ஒரு காப்பீட்டு கட்டணமாக தேவன் தெளிவாக குறிப்பிட்டிருப்பதை இந்த வசனங்கள் காட்டுகிறது. ஆகவே – “ஏற்றக்காலத்தில் தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.” என்று பேதுரு குறிப்பிடுகிறார். கிறிஸ்து இயேசு தன்னைத் தாழ்த்தி, அதாவது சிலுவையின் மரணபரியந்தம் கீழ்ப்படிந்தவராக இருந்தது போல, நாமும் அவருடைய மாதிரியை பின்பற்றும்படி பவுல் நமக்கு எழுதுகிறார். ஆகையால் தேவன் அவரை எல்லாவற்றிருக்கும் மேலாக உயர்த்தினார். ஆகவே – “பெருமையுள்ளவார்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” என்று பேதுரு குறிப்பிடுகிறார். ஏனெனில், சகோதரரே நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள் மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. உலகத்தில் பலவீனமானவைகளையும், விசுவாசத்தில் ஐசுவரியவான்களையும், அடிப்படையில் மனத்தாழ்மையுள்ளவர்களையும் தேவன் தெரிந்து கொண்டிருக்கிறார். தேவனை முழு மனதோடு நம்புவதற்கு கற்றுக்கொண்ட புதுசிருஷ்டிகள், அவருடைய கிருபை மட்டும் போதும் என்று எண்ணி, அதனால் பலப்பட்டு, தேவன் அழைப்பில் வெற்றிப்பெற்று உயர்த்தப்படுவார்கள்.
E 254 [P2]
நாமும் முழு மனுக்குலமும் விரும்பும் காரியம் – ஆரோக்கியமான உள்ளம். ஆனால் பொதுவாக உலகத்தாரின் மனநிலைகளும், உடல் நிலைகளும் குணமடையும் காலம், குறிப்பாக ஆயிரவருட ஆட்சியில், பரம வைத்தியரின் கரங்களில் உள்ளது. அந்தக் காலமும், அந்தக் காலத்தின் ஆசீர்வாதங்களும், விடுதலையும் தேவன் குறித்த காலம் வரும் வரையில் செயல்படாது. இதற்கு இடையில், சுவிசேஷ யுகத்தில் அழைக்கப்பட்ட சபை, அவருடைய ஆண்டவர் மூலமாகவும், அவருடைய வார்த்தைகளின் மூலமாகவும், அவருடைய பரிசுத்த ஆவியைப் பெறும். அதாவது குமாரன் பெற்றிருக்கும், அதே பிதாவின் சிந்தையை இவர்களும் பெறுவார்கள். இவ்வாறாக, தேவ ஆவியை பெற்ற ஒவ்வொரு அங்கத்தினர்களும், இந்த முழுமனுக்குலத்தின் பொதுவாக பிரச்சனைகளையும், உபத்திரவங்களையும், இயற்கையான மனச்சோர்வுகளையும் நீக்குவதற்கு தாங்கள் பெற்றச் சிறப்புரிமையை முழுமையாக பயன்படுத்துவார்கள். “அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது, உங்களில் எவனானாலும் தன்னைக் குறித்து எண்ணவேண்டியதற்கு (மாம்சத்திற்குறியவைகளை அல்ல, ஆவிக்குரியவைகளை) மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்” (ரோமர் 12:3) என்று அப்போஸ்தலன் மூலமாக தேவனுடைய வார்த்தைகள் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. அநேகரை ஜெயித்து, தாங்கள் பெற்ற தாலந்துகளுக்கு ஏற்றவாறு, செயல்பட்டு, நல்ல ஆவியை இருதயத்தில் வளர்த்து, தங்களுக்குள் பெருமையை கீழ்ப்படுத்தி, தங்களுடைய மேட்டிமையான எண்ணங்களைக் கட்டுப்படுத்தி, “ஆவியில் எளிமையானவர்கள் பாக்கியவான்கள், பரலோகராஜ்யம் அவர்களுடையது…” என்ற எஜமானனுடைய வார்த்தைகளின்படி முழுமையாக வாழ்வதற்கு, அநேக காரியங்களில் போராட வேண்டியதாக இருக்கிறது. அப்போஸ்தலர்களுடைய வார்த்தைகளையும் இதை வலியுறுத்துகிறது. “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” (யாக் 4:6) “…ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள், பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்…. ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.” (1பேது 5:5,6)
A83 [P2]
மேலும், அநேக அடிகளையும், உபத்திரவங்களையும் பொறுமையோடு சகித்து, செப்பனிடப்பட்டு, நமக்காக நம்முடைய ஆண்டவர் தன்னுடைய ஜீவனை கொடுத்ததை மனதில் வைத்தவர்களாக, எந்தவிதமான சுயநலத்திற்கும் இடமில்லாமல், அவருடைய குணங்களை நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய ஆண்டவரை மாதிரியாகக் கொண்டு நாம் பிரதிபலித்து, அவரை போல் மறுரூபமாக வேண்டும். சுயநலமான எந்த நோக்கத்திற்காகவும் நாம் அவருடைய சித்தத்தை நமக்குள் நிறைவேற்றாதபடிக்கு, நாம் மிகவும் மனத்தாழ்மையுள்ளவர்களாக தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்கவேண்டும். இப்படியாக, நாம் அவருடைய பலத்த கரங்களுக்குள் அடங்கியிருந்தால், நம்முடைய தலையாகிய கிறிஸ்துவை உயர்த்தினது போல நம்மையும் நிச்சயமாக உயர்த்துவார். (1பேது 5:5,6. பிலி 2:8,9)
R 1920[col. 2P2-4]
மிக குறைவான தாலந்துகளை பெற்றிருக்கும், வலுவற்ற கருவிகளையும் அவர் ஆண்டவரின் பணியில், பயன்படுத்துவதினால், அவர்களை மிகவும் உயர்ந்தநிலைக்கு உயர்த்தப்பட்டு, அதிகமான ஆசீர்வாதங்களைப்பெறுகிறார்கள். ஆனால் சில நேரங்களில் அதே ஆசீர்வாதம் அவர்களுக்குள் பெருமையையும், வீண் புகழ்ச்சியையும் வளரக்கூடிய சாபமாக மாறிவிடுகிறது. இது ஒரு கேடான மாம்ச சிந்தைக்குரிய இயல்பாக இருக்கிறது. நம்முடைய எதிராளி மிகவும் தந்திரமாக இந்தக் காரியத்தை அவனுக்கு சாதகமாக பயன்படுத்திவிடுகிறான். அதற்குப்பின், பொருளாதாரத்தில் குறைவுள்ளவர்களுக்கு மட்டும் அல்ல, அறிவிலும், ஞானத்திலும் குறைவுள்ளவர்களுக்கு மட்டும் அல்ல, தேவனுடைய வார்த்தைகளில் குறைவுள்ளவர்களுக்கு தேவன் கொடுத்த வசனங்களே அவர்களுக்கு தடுக்கலின் கல்லாக மாறிவிடுகிறது. “தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது…” (லூக் 6:20) என்ற ஆண்டவரின் வார்த்தைகளை அவர்கள் மறந்துவிட்டிருக்கலாம் அல்லது “ஆவியில் எளிமையுள்ளவர்கள்” என்ற வசனத்தை மறந்திருக்கலாம். மேலும், அறியாமையில் உள்ளவர்கள். அறிவைப் பெற்றவர்கள், தரித்திரர்கள், ஐசுவரியவான்கள் மற்றும் அனைவருமே தங்களுடைய மாம்ச சிந்தையில் மேட்டிமையான எண்ணங்கள் கொண்டு விடுவார்கள் என்பதையும் மறந்துவிட்டார்கள். “ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்” (கலா 6:3) விசேஷமாக கிறிஸ்துவ குணலட்சனங்கள் குறைவுப்படும் இடங்களில், இப்படிப்பட்ட வஞ்சனைகள் நடைபெறலாம். சத்தியத்தின் அறிவினால் ஆசீர்வதிக்கப்பட்ட ஐசுவரியவான்களானாலும் சரி தரித்திரரானாலும் சரி “இவர்களுக்குள் “மனமேட்டிமையும்” வளருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதினால், தாழ்மையையும், சாந்தத்தையும் தங்களுக்குள் வளர்த்துக் கொள்ளவேண்டும். மேலும் “எதிர்பேசுபவர்களை சத்தியத்தை அறியும்படி” மனத்தாழ்மையுள்ளவர்களாகவும், சாந்தத்தோடும் மிக பொறுமையுடனும் நடந்துகொள்ளவேண்டும். (எபே 4:2. 11தீமோ 2:25)
ஆகவே எல்லாவற்றிற்கும் மேலாக நாம் நம்முடைய பணிவை காத்துக்கொள்ளவேண்டும். நாம் நம்முடைய பார்வையில் சிறியவர்களாக தோன்றினால் மட்டுமே தேவன் நம்மை பாதுகாப்போடு பயன்படுத்த முடியும், மேலும் நேர்மை மற்றும் விசுவாசத்திற்கான எல்லா சோதனைகளுக்கும் தேவன் நம்மை மறைத்து கொள்வதில்லை.
ஆகவே இன்றைக்கு நீங்கள் செய்த கிரியைக்கு தேவன் உங்களை சற்று உயர்த்தினால் அல்லது உங்களது பணியில் பெற்ற வெற்றிக்கு கொஞ்சம் ஊக்கம் அளித்தால் – இதற்கு நீங்கள் அபாத்திரர் என்றும், தேவனால் அங்கீகரிப்பதற்கு உங்கள் வேலை அபூரணமானது என்பதையும் முழுமையாக மனதில் கொண்டு அதை சந்தோஷத்துடனும், மனத்தாழ்மையுடனும் பெற்றுக்கொண்டு தடுமாறக்கூடிய உங்கள் மாம்ச பலவீனத்தை சீராக்கிக்கொள்ள. நாளைய தினத்திற்கு தேவைப்பட்ட மனத்தாழ்மையையும், தன்னடக்கத்தையும் பெற்றுக்கொள்ள ஆயத்தப்பட வேண்டும். நேற்றைய தினத்தில் பெற்ற வெற்றி, இன்றைய தினம் உங்களை கோபத்திற்குள்ளாக்காதபடி எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் நீங்கள் இந்நாள் வரைக்கும், ஆவிக்குரிய வகையில் முழுமையாக வளர்ச்சியடையவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. சத்தியத்தின் எக்காளம் நமக்குள் எவ்வளவாக இருந்தாலும், மாயையின் மத்தியில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. ஆகவே அப்போஸ்தலனாகிய பவுலின் அனுபவங்களை நாமும் பொறுமையோடே பெற்றுக்கொள்ளுவோம். “என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை, ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்பதியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” – பிலி 4:11-13.
தம்முடைய ஜனங்கள் பெருமை கொள்ளாதபடியும், சுயநலமற்றவர்களாக இருக்கும்படி தேவன் மிகுந்த ஜாக்கிரதையோடு அவருடைய ஜனங்களை வழிநடத்துவதை நாம் காணலாம். தேவன் இஸ்ரயேலரை அவருடைய விசேஷித்த ஜனங்களாக தெரிந்துக்கொண்டபின் அவர்களை நானூறு வருடங்கள் அடிமையாக அனுமதித்தார். அதற்குப் பின் அவருடைய பலத்த கரத்தால் அவர்களை மீட்டு, வாக்குத்தத்தம் செய்த தேசத்திற்கு அழைத்து வந்தார். தேவனால் தேர்வு செய்யப்பட்ட இரட்சகராம் மோசே, பிறப்பினால் மிக எளியவராக இருந்தார். அவர் திக்கு வாயனாக இருந்தபடியால் ஆரோன் அவருக்கு உதவ வேண்டியதாக இருந்தது. அதே போல் பவுல் மூன்றுமுறை ஜெபித்த போதும் தேவன் அவருடைய பலவீனத்தை போக்காமல், மாம்சத்தில் அதை அனுமதித்து “என் கிருபை உனக்கு போதும், உன் பலவீனத்தில் என் பலம் பூரணமாக விளங்கும்” என்று தேவன் பதில் அளித்தார். (அதாவது, அவருடைய பலம், அபூரணமான மண்பாண்டத்தில் கிரியை செய்யும் போது, நிச்சயமாக இது தேவனுடைய செயல் என்று மனிதர்களால் உணரமுடியும். ஒரு வேளை பவுல் எல்லாவற்றிலும் திறமை வாய்ந்தவராக இருந்திருந்தால், நிச்சயமாக அனைவரும் பவுலின் திறமையைக் குறித்தே புகழ்ந்திருப்பார்கள். அதே நேரத்தில் தேவனுடைய வல்லமை – பவுலின் வழியாக செயல்படும் போது தேவனுடைய கிரியைகள் மகிமைப்படுத்தப்பட்டு, அவருடைய கிருபைக்கான சாட்சி அதிக கனம் பெறும். இப்படியாக, தேவன் தம்முடைய கிருபையையும், மகிமையையும் விளங்கச் செய்வதற்கு, பலவீனமும், மனத்தாழ்மையுமாக தங்களையே முழுமையாக அர்ப்பணிப்பவர்களை பயன்படுத்துகிறார்.)
R 2700 [ col. 1 last P]
இது இயல்பான மனிதனுக்கு மட்டும் அல்ல, தேவனோடு நல்லுறவு கொள்ள விரும்பும் யாவருக்கும் பொருந்தும். மேலும் “புது சிருஷ்டிகளுக்கு” தங்களுடைய முழு வாழ்க்கை பயணத்திற்கும் இந்தப்பாடம் மிகவும் அவசியம். பெருமைக்காகவும், சுயநலத்திற்காகவும் அல்ல மாறாக மிகுந்த மனத்தாழ்மையினால் மட்டுமே தெய்வீக கிருபைகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். தேவன் பெருமையுள்ளவர்களுக்கும், தங்களைக் குறித்து மேன்மை பாராட்டுபவர்களுக்கும் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார். தேவனுடைய கிருபையை மனத்தாழ்மையுள்ளவர்கள் மட்டுமே பெற முடியும் என்ற முக்கியத்துவத்தை யாக்கோபு இங்கு வலியுறுத்துகிறார். தேவனிடத்தில் அனுகுவதற்கு இதை தவிர வேறு வழி இல்லை என்பதையும் உறுதிப்படுத்துகிறார். தேவனுடைய கிருபையையும் இரக்கத்தையும் பெறுவதற்காக மட்டும் அல்ல அவர் ஏற்றக் காலத்தில் நம்மை உயர்த்துவதற்கும் அவருடைய பலத்த கரத்திற்குள் அடங்கி இருக்கவேண்டும் என்று பேதுரு குறிப்பிடுகிறார் -1பேது 5:5,6.