Q-11
“1 பேது 2:20-23 – “”நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள். ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின் வைத்துப் போனார். அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனைக் காணப்படவுமில்லை. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புசெய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.”
R3199 (col.1P3)
இப்படிப்பட்ட எதிர்ப்புகளை, நாம் எதிர்ப்பார்க்க வேண்டியதே, சந்தேகத்திற்கு இடமின்றி நம்முடைய மரணம் வரைக்கும் இவைகள் தொடர்ந்து வரும். இந்த எதிர்ப்புகளுக்கு நாம் பொறுமையோடு ஒப்புக்கொடுத்தால், நம்முடைய இயல்பான உலகப்பிரகாரமான சந்தோஷங்களைப் பலிசெலுத்தி, எந்தப் பிரச்சனைகளின் மத்தியிலும், சத்தியத்தின் நிமித்தம் நல்ல போர்ச் சேவர்களாக உறுதியோடு தேவனுடைய சித்தத்தைச் செய்யவும், வருங்காலத்தில் அவருடைய ராஜ்யத்தில் செய்யவும் நமக்கு வாய்ப்பளிக்கும். நம்முடைய சரீரங்களைத் தெய்வீகப் பணிக்காக ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதன் பொருள் இதுவே. இந்த ஊழியத்தில் உண்மையாக இருப்பதற்கு – முதலில் தேவனுடையத் திட்டத்தைக் கவனமாகப் படித்து புரிந்துகொள்ள வேண்டும். இரண்டாவதாக பரிசுத்த ஆவியைப் பெறவேண்டும். அதன் வழியாக தேவனுடையத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நாம் வைராக்கியம் கொண்டு, எப்படிப்பட்ட உலகப்பிரகாரமானக்காரியங்களைப் பலி செலுத்த வேண்டுமானாலும் அதை செலுத்தி, தேவனுடைய திட்டத்தை நிறைவு செய்ய வேண்டும். இதுவே மூன்றாவது நிலையாகும்.
R1964(col.2 P2)
கிறிஸ்துவோடு துன்பப்படும் யாவரும், எந்த அளவு துன்பங்கள் வந்தாலும், இயேசுவைப்போல அதே பணிவுடனும், மனத்தாழ்மையுணர்வுடனும், இரக்கத்துடனும், பொறுமையுடன் சகித்தால் வரக்கூடிய கடுஞ்சோதனையானக் காலத்திலும் நீடிய பொறுமையோடிருக்க நம்மை பழக்குவிக்கும். இந்த ஒழுக்கக் கேடான இந்த மனுக்குலத்தைப் பொறுத்தவரையில் இயேசு ஆச்சரியப்படவில்லை. ஏனெனில், பாவம் நிறைந்ததும், இருளின் அந்தகார லோகாதிபதியின் உலகத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே அனைத்து விதமான துன்பங்களையும், உபத்திரவங்களையும் அவர் எதிர் நோக்கியிருந்தார். இவையனைத்தையும் மிகுந்த அன்பான இருதயத்தோடும் எதிர் நோக்கினதால், மற்றவர்களுக்காக வைத்திருக்கும் இரக்கமும் மற்றும் பரிவினாலும், அவருடைய துன்பங்களை அவர் பொருள்படுத்தவில்லை. உண்மையில், கிறிஸ்துவைப்போல, நாமும் இப்படியாக நீடிய பொறுமையுடன் பாடுகளை அனுபவிக்கும் ஆவி நமக்குள் இருந்து, குறித்தக் காலத்தில் பரலோகம் செல்வதற்கு மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறோமா? “நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள். ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். அவர் பாவஞ்செய்யவில்லை. அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.” ஆகவே நாம் “இளைப்புள்ளவர்களாய் நம்முடைய ஆத்துமாக்களில் சோர்ந்து போகாதபடிக்கு தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக் கொள்ள வேண்டும்” (1 பேதுரு 2:20-23, எபிரேயர் 12:3) கிறிஸ்து பாடுகளைச் சகித்ததுப் போல நாமும் இரக்கத்தோடும், நம்மை துன்பப்படுத்துபவர்கள் செய்யும் மோசமானத் தவறுகளுக்காக ஜெபித்து, கூடுமானால் அவர்கள் மனம் திரும்ப அவரிடம் விண்ணப்பித்து, அவருடைய ஊழியத்தைச் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும், சகலத்தையும் சகித்து, நல்ல போர்ச் சேவகனாக நாம் தேவன் மேல் வைத்திருக்கும் பக்தியை நிரூபிக்க தேவன் கொடுத்த இப்படிப்பட்ட வாய்ப்புகளுக்கு நன்றி செலுத்தக்கடவோம். “