Q-6
லூக் 21:19 – “உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.”
R2791 (1P4,5)
நம்முடைய ஆண்டவர் இந்த வார்த்தையை மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் பயன்படுத்தியிருக்கிறார். (லூக் 21:19) சாத்தான் இந்த உலகத்தில் அதிபதியாக இருக்கும் பட்சத்தில், பாவத்தினால் கட்டப்பட்டிருக்கும்போது, இக்காலத்தில், அவருடைய சீஷர்களாக இருப்பதினால் வரும் விளைவுகளைப்பற்றி இயேசு சொல்லிக்கொண்டிருந்தார். இவர்கள் துன்பங்களையும், எல்லா திசைகளிலிருந்தும் வரும் எதிர்ப்புகளை சந்திக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஆனால் இப்படிப்பட்ட துன்பங்களும் சோதனைகளும் அனுமதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு முழுமையான தெய்வீக பாதுகாப்பும், அரவணைப்பும் கொடுக்கப்படும் என்று எந்த ஒரு உறுதியும் கொடுக்கவில்லை. எல்லா சோதனைகளிலும் “உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னார்.
வருங்காலத்தில் நிறைவேறக்கூடிய தேவனுடைய கிருபையான வாக்குத்தத்தங்கள் மேல் நாம் வைத்திருக்கும் விசுவாசமும், நம்பிக்கையும் சாத்தானின் குருடாக்கப்பட்ட ஊழியக்காரர்களும், கள்ள சகோதரர்களும், இந்த உலகத்தில் நமக்கு எதிரிடையானவர்களும் நம்மை எதிர்த்து அவர்கள் வழிக்கு இழுத்துச் செல்லாதபடிக்கு அசைக்க முடியாத அளவுக்கு உறுதியாக இருக்க வேண்டும். தேவன் கட்டிக்கொண்டிருக்கும் மகிமையான ஆலயத்திற்கு ஜீவனுள்ள கற்களாக இருக்கும் நம்மை செதுக்கி, மெருகேற்றி சரியான இடத்தில் பொருத்துவதற்கு அவர் அனுமதிக்கும் சோதனைக்காக நாம் நித்தமும் மகிழுவோம். இந்த ஒரு கோணத்திலிருந்து நாம் நம்முடைய சோதனைகளைக் கண்ணோக்கினால், உண்மையில் நம்முடைய ஆத்துமாவைக் காத்துக்கொண்டு, எல்லாவிதமான உபத்திரவங்களிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆம், நாம் முடிவு பரியந்தம் தேவனிடத்தில் விசுவாசமாக இருந்து, எதையும் எதிர் நோக்கக்கூடிய மனநிலையைப் பெற்றிருந்தால், மாம்சத்தில் படும் பாடுகளும், உபத்திரவங்களும், மனிதர்களின் எதிர்ப்புகளும், இந்த ஆத்துமாவுக்கு தேவன் கொடுத்த அநேக விலையேறப்பெற்ற வாக்குறுதிகளைச் சுதந்தரிக்க என்றுமே தடை செய்யாது என்பதை நாம் முதலில் உணரவேண்டும்.