Q-1
யாக்கோபு 1:4 – “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாய் இருக்கும்படி, “பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.”
R3090 (col.1 P2)
“நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, “பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.” ஆம், இந்தப் பொறுமையானது சகல நல்ல குணங்களுக்கும் எளிதாக வழிவகுக்கும். ஏனெனில், மற்ற அனைத்து குணங்களையும், பொறுமையின் கிரியைகள் தொடர்ச்சியான சுயக்கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தின் மூலமே வளர்ச்சியடைய முடியும். பொறுமையை செயலாற்றாமல் கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் ஒரு அடிக்கூட முன்னேற முடியாது. இந்த ஒரு குணமானது கிறிஸ்தவ குணலட்சணங்களுக்கு அழகு சேர்ப்பதாகவும், உலக மக்களின் நம்பிக்கையை ஜெயிக்ககூடியதாகவும், தேவனுடைய சத்தியத்தினால் ஊக்குவிக்கப்பட்டு கிருபை நிறைந்த அவரை மகிமைப்படுத்துகிறது. மனிதனுடைய அபூரணத்தைப் பூரணப்படுத்தவும், பலவீனங்களை மேற்கொள்ளவும் தெய்வீகக் குணங்களைப் பெற்றுக்கொள்ள நாம் படும் வேதனைகளைச் சகிக்கவும், நீடிய பொறுமையோடு கூடிய தாழ்மை மிக அவசியமானது. இது கோபங்களைத் தனித்து, இரக்கத்தைப் பெருகச்செய்யும். நீதி மற்றும் சத்தியத்தின் பாதையில் செல்ல தீவிரிக்கும். தன்னுடைய அபூரணத்தை உணர்ந்து மற்றவர்களுடைய குறைகளையும் அபூரணமானக் குணங்களையும் இரக்கத்தோடு மன்னிக்க நம்மை பக்குவப்படுத்தும்.
R3059 (col.2 P3)
பொறுமையைக் குறித்து தேவனுடைய வார்த்தை அல்லது செய்தி என்னவெனில், “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.” (யாக்கோபு 1:4) – தேவனுடைய இந்த வார்த்தை அவருடைய வாயிலிருந்து புறப்பட்டதன் நிமித்தம், இந்தத் தெய்வீக ஆலோசனை நாம் பூரணப்படுவதற்கு எவ்வளவு முக்கியமாக இருக்கிறது. தேவன் நமக்கு விதித்திருக்கும் அளவுகோலை எட்டிப்பிடித்து நம்முடைய விசுவாசத்தை நிரூபிப்பதற்கு முன்னமே ஆண்டவரிடத்தில் நாம் வைத்திருக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்தத் தேவையான சோதனைகளைப் பெற்றதாகக் கற்பனை செய்யலாம். ஆகவே நமக்குள் பொறுமை எவ்வளவு தேவை என்பதை தேவன் தெளிவாக விவரிக்கிறார் – “உங்களை சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்” (1 பேதுரு 4:12) நாம் காணக்கூடிய மற்றும் அனுபவிக்கும் பிரச்சனைகளில் பொறுமையாக இருக்கும் பட்சத்தில், சுவிசேஷ யுகத்தில் சபையாக அழைக்கப்படுபவர்களுக்குத் தேவன் கொடுக்கும் மகிமை, கனம் மற்றும் அழியாமையைப் பெறும் அளவிற்கு நம்மில் வளரக்கூடிய கிருபை, ஞானம் மற்றும் புரிந்துகொள்ளும் திறனை அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்தத் தகுதியை அனுபவிக்கும் ஒவ்வொருவரும், கட்டாயமாகப் பரிசோதிக்கப்பட்டு. முயற்சி செய்து தேவனிடத்தில் தங்களுடைய முழுக் கீழ்ப்படிதலையும் நீதியின் கோட்பாடுகளாகிய – நியாயம், சத்தியம், அன்பு மற்றும் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட சகலத்திலும் தங்களை நிரூபித்துக் காட்டுவது மிக அவசியமானதொன்றாகும். நம்முடைய இரட்சிப்பின் அதிபதியோடு இராஜ்யத்தைப் பகிர்ந்துக் கொண்டு, சகலத்தையும் “ஜெயித்து” அனைத்தையும் சுதந்தரிக்கும் முன் நம்முடைய குணநலன்கள் மேற்கூறிய கோட்பாடுகளில் மிக உறுதிப்பட்டு, நிலைக்கவேண்டும். இரட்சிப்பின் அதிபதியைப் பூரணப்படுத்துவதற்கு சோதிக்கப்பட்டு, பாடுபட்டு நிரூபிக்க வேண்டியது அவசியமானால், கோபாக்கினையின் பிள்ளைகளாக அவருடைய சுத்த கிருபையினால் மட்டுமே நீதிமானாக்கப்பட்ட நாம் நிச்சயமாக தேவனுக்கு முன் நம்முடைய குணலட்சணங்களை நிரூபிக்க வேண்டியவர்களாகயிருக்கிறோம்.
R2793 (col.1 P4)
வரவிருக்கும் மகிமை அல்லது நம்முடைய குணலட்சணங்களின் நம்பிக்கை அனைத்தும் தேவனுடைய வாக்குறுதிகளை அஸ்திபாரமாகக் கொண்டிருக்கிறது. நாம் இந்தச் சத்தியத்தின் பரிட்சையை எந்தச் சூழ்நிலையிலும், எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காமல், சத்தியத்தை வார்த்தையினால் மட்டும் அல்ல, ஆவியினாலும் அன்பினாலும் பற்றிக்கொள்ளக்கடவோம். ஏனெனில், இதுவே உண்மை. மேலும் இது அற்புதமும் மகிமையும் கூட. இந்தச் சத்தியத்தை நாம் பற்றிக்கொள்ளும் பொழுது யாரும் நம்மை திசைத் திருப்பிவிடாதபடிக்கும், நாம் அதை பற்றிக்கொள்ள தடை செய்பவர்களுக்கும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மேலும் தேவனுடைய வார்த்தைகளை நாம் பயன்படுத்தும் போது, நாம் வஞ்சிக்கப்பட்டு, நம்மை நாம் குருடாக்கிக்கொண்டு, நாமே நமக்கு தடை விதிக்காதபடிக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நீடிய பொறுமையினால், நாம் கிறிஸ்துவின் குணலட்சணங்களை அப்பியாசப்படுத்துவது மட்டும் அல்ல, நாம் எதிர்நோக்கும் துன்பங்கள், சோதனைகள், வேதனைகள் அனைத்தையும் சந்தோஷத்துடன் சகிக்க வேண்டும். இதுவே நம்முடைய இறுதி பரிட்சைக்கு அனுமதிக்கும் தகுதியாகும். இதன் மூலம் நம்முடைய குணலட்சணங்கள் வளர்ச்சி அடையும் என்பதை நம்முடைய ஆண்டவர் மலைப் பிரசங்கத்திலே குறிப்பிடுகிறார். பொறுமையின்றி பூரண அன்பைப் பெற்றுக்கொள்ளவும், அதை தக்கவைத்துக் கொள்ளவும் முடியாது.