Q709:2
கேள்வி (1915)-2- அனைவருக்கும் கேட்கும் விதத்தில் சத்தமாய்ப் பேசுவதற்கு விருப்பத்துடன் மற்றவர்கள் காணப்பட்டிருக்க, கேட்கும் விதத்தில் சத்தமாய்ப் பேச முடியாத ஒரு சகோதரன் அல்லது சகோதரி சாட்சிக்கூட்டத்தில் சாட்சியைச் சொல்லுவதற்காக நேரம் எடுத்துக்கொள்வது சுயநலமான காரியமாய் இருக்குமா? (இக்கேள்விக்கு அனைவரும் சிரித்தனர்).
பதில் – அதிகம் சத்தமாய்ப் பேசமுடியாதவர்கள் விஷயத்தில் கொஞ்சம் கடிந்துகொள்ளுதல் அவசியப்படுகின்றது. இப்படியாகத்தான் இக்காரியத்தினைப் பேசுவதே சரியென்று நான் எண்ணுகின்றேன். எழும்பி நின்று நீண்ட நேரம் சாட்சியினை மெல்லிய குரலில் கிசுகிசுவென்று சொல்வது, அதுவும் இது ஒரு சிலருக்கு மாத்திரமே கேட்கின்றதாகவும் மற்றும் அநேகமாக யாருக்குமே கேட்காததாகவும் இருக்கும் விதத்தில் சொல்வது கொஞ்சம் சுயநலமென்றே நாம் கருதிட வேண்டும். ஆசீர்வாதத்தினை அடையத்தக்கதாக நாட்டினுடைய பல்வேறு பாகங்கள் அனைத்திலிருந்தும் அதிகம் செலவு செய்து அருமையான நண்பர்கள் ஒன்றுகூடி வருகையில், நேரத்தினை வீணடிப்பது என்பது மிகவும் மோசமான காரியமாகும். இதே கொள்கையானது வீட்டுக்கூட்டங்களிலும் பொருந்துகின்றதாய் இருக்கின்றது. கேட்குமளவுக்குப் பேசிட முடியாதவர்களுக்கு நாம் அனுதாபங் கொள்ளுகின்றோம், ஆனால் அவர்கள் கர்த்தருடன் தனித்திருக்கையில் மெல்லிய குரலில் பேசிடுவது நலமாயிருக்கும்; இதனால் அவர்களுக்கும் பிரயோஜனமாயிருக்கும். யாருக்கும் புரியாத அந்நிய பாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதைவிட, மற்றவர்களுக்குப் புரியும் வண்ணமான ஐந்து வார்த்தைகளைப் பேசுவதே தனக்கு விருப்பம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறியுள்ளதை நீங்கள் அறிவீர்கள் (1 கொரிந்தியர் 14:19). இது ஒரு நல்ல படிப்பினையாகும். புரியப்படும் மொழியில் நாம் பேசிட வேண்டும் மற்றும் அனைவரும் தங்கள் குரலை எக்காளமென உயர்த்திக்கொள்வதற்குக் கற்றுக்கொள்ள முயற்சிப்பதற்கு நாம் யோசனை கூறுகின்றோம். சிலருக்கு மூன்று அல்லது நான்கு எக்காளங்கள் அளவு உயர்த்திட வேண்டியுள்ளது.
ஆனால் அன்பான சகோதரர்களே, உங்களில் யாரையாகிலும் சோர்வுக்குள்ளாக்க வேண்டுமென்று இது எதையும் நாங்கள் கூறிடவில்லை ஏனெனில் சாட்சி பகிரப்படுவதினால் கர்த்தருடைய ஜனங்களுக்கு ஒரு மாபெரும் ஆசீர்வாதம் கடந்து வருகின்றது என்று நாம் நம்புகின்றோம். ஆகையால் ஒவ்வொருவரும் சாட்சி பகருவதற்கான சில வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வார்கள் என்பது எங்களுடைய எதிர்ப்பார்ப்பாய் இருக்கின்றது. ஆனால் ஒருவேளை உங்களால் அனைவருக்கும் கேட்குமளவுக்குச் சத்தமாய்ப் பேசமுடியாதென்றால், சுமார் ஆறு வார்த்தைகளைப் பேசிவிட்டு, அமர்ந்து கொள்ளுங்கள் என்பது எங்களது அறிவுரையாக இருக்கின்றது. இப்படியாகக் கிறிஸ்துவுக்காய் எழுந்து நிற்பதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வீர்கள் மற்றும் ஓர் ஆசீர்வாதத்தினையும் பெற்றுக்கொள்வீர்கள் மற்றும் நீங்கள் யாருக்கும் இடையூறு பண்ணவில்லை என்பதையும் அறிந்துகொள்வீர்கள். உங்களது சாட்சியினைச் சுருக்கமாய்ப் பகிர்ந்து கொள்ளுங்கள்.