Q240:1
கேள்வி (1910)-1- முன்மொழிதல் (nomination) எதுவும் பண்ணாமலேயே சீட்டு மூலம் மூப்பர்களைத் தேர்ந்தெடுப்பதும் மற்றும் இதில் பெரும்பான்மையான வாக்குகளை உடையவர்களைத் தேர்ந்தெடுப்பதும் மிகவும் இணக்கமான நிலைக்கு வழிநடத்துவதாய் இருக்குமா?
பதில் – நம்முடைய கருத்து அநேகமாகக் கொஞ்சம் குழப்பமாய்க் காணப்படலாம். இரண்டுவிதத்தில் ஏதாகிலும் ஒன்றிற்கு ஆதரவாக என்னால் கூறமுடியும். ஆனாலும் சீட்டு மூலம் வாக்கு (vote) அளிக்கும் முறையைக் கர்த்தர் ஏற்படுத்தவில்லை என்பதே என் மனதில் உள்ளது. கைகளை மேலே உயர்த்துவதின் மூலமே வாக்குகள் (vote) அளிக்கப்படும்படிக்குக் கர்த்தர் ஏற்பாடு பண்ணியுள்ளார். சீட்டுகள் மூலம் வாக்குகள் அளிப்பது, அதாவது ஒன்றும் கூறாமலும், நீங்கள் வாக்குகள் அளித்தவிதம் குறித்து எவருக்கும் தெரியாமலும் இருப்பது என்பது எளிமையாக இருக்கும் என்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன். ஆனாலும் கர்த்தர் சுட்டிக்காட்டியுள்ள வழியை விட்டுவிடுவது ஞானமான காரியமாக இருக்குமா? ஒருவேளை ஓர் இடத்திலிருக்கும் சபை அங்கங்கள் சீட்டு மூலம் வாக்குகள் (vote) செலுத்த முடிவெடுத்திருந்தால், அவர்கள் விஷயத்தில் தலையிடுவது எனக்கடுத்தக் காரியமல்ல. ஒருவேளை நான் அவர்களுக்கு ஆலோசனை கொடுத்த பிற்பாடும்கூட அவர்கள் ஆலோசனையை ஏற்க மறுத்தால், அவர்கள் விஷயத்தில் தலையிடுவது இன்னமும் எனக்கடுத்தக் காரியமல்ல. மீதி பதினொரு jurors / ஜூரி உறுப்பினர்களும் மிகவும் பிடிவாதக்காரர்கள் என்று நினைக்கும் முறைக்காண் juryman/ ஜூரி உறுப்பினன் போல இருக்க நான் விரும்பவில்லை. நாம் நினைப்பது போன்று மற்றவர்கள் நினைக்கவில்லை என்ற காரணத்திற்காக, மற்றவர்கள் அனைவரும் பிடிவாதக்காரர்கள் என்று நாம் எண்ணக்கூடாது; ஆகவே எல்லாவற்றையும் விளக்கின பிற்பாடு, காரியத்தைச் சபையார் பகுத்தறிவதற்கும் மற்றும் சபையார் வாக்களிப்பதற்கும் (vote) விட்டுவிடுவோமாக மற்றும் முடிவைக் கர்த்தரிடத்தில் விட்டுவிடுவோம். ஒருவேளை தாங்கள் தவறு செய்துள்ளதை அவர்கள் கண்டுகொண்டால், அதை அடுத்தமுறை நினைவுகூர்ந்து, ஜாக்கிரதையாய் இருப்பார்கள் மற்றும் பாடம் ஒன்றைக் கற்றுக்கொண்டவர்களாக இருப்பார்கள். ஒருவேளை நாம் ஞானமாகச் செய்தால், நாம் ஒரு படிப்பினையைக் கற்றுக்கொள்வோம். சகோதர சகோதரிகளே, வேதவாக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முறைக்கு ஆதரவாகவே என்னுடைய செல்வாக்கை நான் எப்பொழுதும் பயன்படுத்துவேன். மேலும் இம்முறையானது, சபையார் சரியான தைரியம் கொண்டிருக்க வேண்டுமென்பதைப் போதிக்கின்றது என்ற இதன் நன்மையும் எடுத்துரைக்கப்பட வேண்டும். ஒரு நபர் ஊழியத்திற்குப் பொருத்தமற்றவராய் இருந்தும்கூட, அவர் எனக்கு உறவினராக இருப்பதினால், அவருக்கு என் கரங்களை உயர்த்துவேனா? இல்லை, என்னுடைய தேவனுக்கு நான் உண்மையாய் இருக்க வேண்டும்.