Q253:3
கேள்வி (1915)-3- உயர்வான சமுதாய அந்தஸ்துடைய மனுஷன் ஒருவர் சத்தியத்தின் மீது ஆர்வம் அடைந்தவரானார்; ஆனால் அவர் அர்ப்பணம் பண்ணிடவில்லை. போதிய வசதி வாய்ப்புள்ளவர்களும் மற்றும் இப்போது சத்தியத்தில் இல்லாதவர்களுமான ஒரு சகோதரி மற்றும் அவளது கணவனின் செல்வாக்கினால் இம்மனுஷன் எங்களது சபையின் வழிநடத்துனனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வேறொரு சகோதரன் அவ்வளவுக்கு அறிவுடையவராக இராதபடியினால், அவரைச் சபையார் தேர்ந்தெடுக்கவில்லை. எங்கள் சபையில் இதன் தாக்கமானது அடிக்கடி உணரப்படுகின்றது மற்றும் எங்கள் சபையின் ஒழுங்கானது, வேதாகம பாடங்களினுடைய ஆறாம் தொகுதியினுடைய காரியங்கள்படியாக இல்லை. இதற்கு உங்களது ஆலோசனை என்ன?
பதில் – அன்பார்ந்த நண்பர்களே, ஆறாம் தொகுதியானது, வேதாகமத்திற்கு முழு இசைவாகவே உள்ளது என்று நாம் எண்ணுகின்றோம். அது வேதாகமத்திற்கு இசைவாய்க் காணப்படுகின்றது என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்றால், வேதவசனத்தின் அடிப்படையிலான அந்த யோசனைகளை நடைமுறைப்படுத்துவது உங்களது கடமையாக இருக்கும். கர்த்தருக்கு முழுமையாய் அர்ப்பணித்துள்ளதாகத் தன்னைக் குறித்து அறிக்கைப் பண்ணிக் கொள்ளாத ஒரு நபரைப் போதிக்கும் பொறுப்புடைய எந்த ஓர் ஊழியத்திற்கும் மூப்பராகவோ அல்லது உதவிக்காரராகவோ தேர்ந்தெடுப்பது என்பது சரியான ஒழுங்காய் நிச்சயமாக இருக்காது என்பது என்னுடைய கணிப்பாய் இருக்கின்றது. அவர் கிறிஸ்துவினுடைய சபையின் அங்கத்தினனே அல்ல; ஆகையால் அவரால் சபையில் எந்த மேற்பார்வை ஊழியத்தினையும் செய்திட முடியாது மற்றும் அவரை இத்தகைய ஊழியத்தில் வைப்பது என்பது வசனத்தினுடைய ஆவிக்கு முரணான காரியமாய் இருக்கும் மற்றும் சபையாரும் இப்படிச்செய்வது தவறாகும். அடுத்த தேர்ந்தெடுத்தலின்போது சபையார் என்ன செய்திட வேண்டும்? அவர்கள் இம்மனுஷனுக்கு வாக்குக் (vote) கொடுத்திடக்கூடாது.
யாரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரியாது; ஆனால் ஒருவேளை அது நானாக இருந்தாலும்சரி, எனக்கும் இப்படியே செய்யப்படவேண்டும். இம்மாதிரியான சந்தர்ப்பத்தில், நான் எவ்வளவுதான் செல்வாக்குடையவனாக இருப்பினும், சபையார் என்னைத் தேர்ந்தெடுக்கக்கூடாது என்று நான் எண்ணிடுவேன். இவ்விஷயமானது வேறொரு மூப்பனைத் தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாய்க் சபையாருக்குக் கருத்து வேறுபாட்டினை உண்டாக்குகிறதென வைத்துக்கொள்ளுங்கள். அப்படியென்றால் இவ்விஷயம் சபையாரைப் கருத்து வேறுபாட்டிற்குள்ளாக்கட்டும். சபையானது கருத்து வேறுபாட்டிற்குளாவதைக் குறித்து நாம் அக்கறையற்று இருக்க வேண்டுமென்றும், மற்றவர்களுடைய உணர்வுகளைக் குறித்து நாம் அக்கறையற்று இருக்கவேண்டுமென்றும் நான் சொல்லவில்லை மாறாக காரியம் முழுமையாகச் சபையாருக்கு முன்வைக்கப்பட்ட பிற்பாடு, சரியான வழிமுறையைக் காண்பவர்கள், தேவனுடைய பிள்ளை என்று தன்னைக் குறித்து அறிக்கைப்பண்ணுகின்ற ஒருவரைத்தவிர, வேறு எவரும் எந்த ஊழியமும் செய்திடக்கூடாது என்றும், முழுமையாய் அர்ப்பணம் பண்ணாதவர்கள் தவிர மற்றபடி யாரும் வாக்களிக்கக்கூடாது என்றுமுள்ள உண்மைக்காக நின்றிடவேண்டும். ஒருவேளை இக்கருத்தானது சபையாருடைய கருத்தாகக் கொண்டுவரப்பட முடியவில்லை, உண்மையுள்ளவர்களாய் இருப்பவர்கள் பின்வாங்கிட வேண்டும் மற்றும் வேதாகம ஏற்பாட்டின்படி, அவர்கள் ஒரு மகத்தான ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்வார்கள் என்று நான் எண்ணுகின்றேன்.