Q242:2
கேள்வி (1911)-2- சபைக்கான மூப்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நாம் அப்போஸ்தலர்களின் மாதிரியைப் பின்பற்றி ஏழு பேரை நியமிக்கலாமா? ஒருவேளை கூடாது என்றால் ஏன் செய்யக்கூடாது?
பதில் – ஏழு பேரை நியமிக்கும் அப்போஸ்தலரின் எந்த மாதிரியையும் நான் அறியேன். ஒருவேளை அப்படிப்பட்டதான ஏதாகிலும் மாதிரி இருக்குமாயின் அதைக்குறித்த அனைத்தையும் கண்டுபிடிக்கும் விஷயத்தில் மிகவும் மகிழ்ச்சிக்கொள்பவர்கள் மத்தியில் நானும் ஒருவராய் இருப்பேன். ஏழு உதவிக்காரர்களை அப்போஸ்தலர் நியமித்ததைக் குறித்து எனக்கு ஞாபகமுள்ளது. ஏழு மூப்பர்கள் தொடர்பாக நான் ஒருபோதும் கேட்டதில்லை. இது எனக்குப் புதிதாக இருக்கின்றது. ஒருவேளை நாம் உதவிக்காரர்களைக் குறித்துச் சிந்திக்கும்போது அதுவும் ஒவ்வாது. ஏனெனில் சூழ்நிலையின் தேவைக்கு ஏற்ப அவர்கள் அன்று அவ்வளவு உதவிகாரர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஒரு சபையின் எண்ணிக்கை ஆறு என்று வைத்துக்கொள்ளுங்கள், அவர்களால் எப்படி ஏழு மூப்பர்களையும், ஏழு உதவிக்காரர்களையும் நியமிக்கமுடியும்? சபையார் இரண்டு அல்லது மூன்று பேரையுடைய சிறு கூட்டமாக இருப்பார்கள் என்று கர்த்தர் கூறுகின்றார் – “எங்கே என் நாமத்தினிமித்தம் இரண்டு அல்லது மூன்று பேர் கூடுகின்றார்களோ, அங்கே அவர்கள் நடுவில் நான் இருப்பேன். இவ்விஷயம் குறித்ததான நமது கருத்துக்கள் வேதாகமப் பாடங்களின் ஆறாம் தொகுதியில் மிகவும் குறிப்பாக முன்வைக்கப்படுவதை நீங்கள் பார்க்கலாம்.