Q379:2
கேள்வி (1909)-2- எந்த வழிமுறையினால் தேவன் யூதர்களைக் கையாளுவார்?
பதில் – என்னுடைய யூகத்தை மாத்திரம் உங்களுக்குப் பதிலாகத் தெரிவிக்க முடியும், அதென்னவெனில்: மகா உபத்திரவ காலத்தினுடைய முடிவில், யூதர்களும் சரி, மீதமுள்ள மனுக்குலத்தாரும் சரி மகா துன்பத்திலும், பொதுவான பெருந்துயரத்திலும் காணப்படுவார்கள்; மேலும் உபத்திரவத்தின் முடிவு காலத்தில், முற்பிதாக்கள் யூதர்கள் மத்தியில் தோன்றுவார்கள்; நம்பிக்கையற்ற யூதர்கள் மத்தியில் அல்ல; ஏனெனில் உண்மையிலேயே வாஞ்சையுள்ள சில யூதர்கள் காணப்படுகின்றனர்; இவர்கள் மேசியாவிற்காக ஏங்கி, காத்திருப்பவர்கள் ஆவார்கள். இம்மாதிரியானவர்களிடத்திலேயே அவர் தம்மை வெளிப்படுத்துவார் என்று நான் யூகிக்கின்றேன்; இவர்களிடத்தில் அவர் தம்மை வெளிப்படுத்துகையில், இவர்கள் விசுவாசிப்பார்கள்; அடுத்து ஓர் அயலான் வருவான்; பின்னர் மற்ற யூதர்கள் இவர்களிடத்தில் சேருவார்கள். அநேகம் அவிசுவாசியான யூதர்கள், புறஜாதிகளுடன் காணப்படுகின்றார்கள்; இவர்கள் இஸ்ரயேல் மீது ஆசீர்வாதம் வருவதைக் காண்கையில், அந்த ஆசீர்வாதத்தைத் தாங்களும் பெற வேண்டுமென விரும்புவார்கள். தேவனுடன் இணக்கத்தில் காணப்படுபவர்கள் மீது, அவரது ஆசீர்வாதங்கள் யாவும் காணப்படும்.