Q472:1
கேள்வி (1910)-1- ஒரு சிறிய சபையார் மத்தியில் தலைமைத்தாங்க சகோதரர் யாரும் இல்லையெனில், பெரோயா ஆராய்ச்சி வகுப்புகளில் அல்லது ஆசரிப்புக்கூடார ஆராய்ச்சி வகுப்புகளில் போதிப்பதற்காகக் கையாளப்பட வேண்டிய வழிமுறை என்ன? அதாவது சபையாருக்கு வழிநடத்தும் சகோதரர் யாருமில்லாத ஒரு சந்தர்ப்பத்தில் ஆகும்.
பதில் – சபையாருக்கு வழிநடத்தும் சகோதரன் யாருமில்லை என்று கூறுவதன் அர்த்தம் என்ன?
கேள்வி – சகோதரர்கள் இல்லாமல் சகோதரிகள் மாத்திரமே காணப்படுகின்ற வகுப்பாய் இருக்கின்றதானால், என்ன செய்ய வேண்டும்?
பதில் – சகோதரன் இல்லாமல் அதைச் செய்ய வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன். சகோதரர் அவர்களே இம்மாதிரியான கேள்வி ஒன்றிற்கு ஆறாம் தொகுதியில் நான் ஏற்கெனவே யோசனையாகத் தெரிவித்திருப்பது என்னவெனில், அவர்கள் விரும்புவார்களானால் தொகுதியின் ஆசிரியர் அத்தொகுதியினால் அங்கு அவர்களோடுகூடக் காணப்படுவதாகக் கருதிக்கொள்ளப்படலாம்.
கேள்வி-2- ஒரு சகோதரி கேள்விக் கேட்பது தகுதியானதா?
பதில் – நிச்சயமாக. சகோதரிகள் தொடர்பான ஒரே கருத்து என்னவெனில்: இது ஒரு சகோதரி, சகோதரிகளுக்குக் கற்பிக்கக்கூடாது என்று சொல்லுகிறதில்லை, மாறாக பவுலோ: “உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரம் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை என்று கூறுகின்றார். இது அவள் குழந்தைகளுக்கும், சகோதரிகளுக்கும் போதிக்கக்கூடாது என்று சொல்லுகிறதில்லை, மாறாக கிறிஸ்துவின் சபையில் புருஷர்களும், ஸ்திரீகளும் காணப்படுகையில் அவள் போதிப்பது என்பது தகுதியற்றதாகவும், தலையாய் இருக்கிற கிறிஸ்து புருஷனால் அடையாளப் படுத்தப்படுகிறதும் மற்றும் சரீரமாகிய சபை ஸ்திரீயானவளில் அடையாளப் படுத்தப்படுகிறதுமான காட்சிக்கும், நிழலுக்கும் இசைவற்றதாய் இருக்கும் என்றும், ஸ்திரீயானவள் போதிப்பது என்பது சபையானவள் கிறிஸ்துவுக்குப் போதிக்கிறதைக் குறிப்பதாக இருக்கும் என்பதினால் தகுதியற்றதாய் இருக்கும் என்றும் அப்போஸ்தலன் கூறுகின்றார். ஆகையால் இதைத் தெய்வீகச் சித்தம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் மற்றும் நாம் அதைக் கடைப்பிடிக்கின்றோம். ஆனால் ஒரு சகோதரி கேள்விக் கேட்டுக் கூட்டத்தைத் துவக்கி, ஜெபம் ஏறெடுப்பதும் நிச்சயமாகவே முற்றிலும் சரியானவைகளாக இருக்கின்றன.