Q152:1
கேள்வி (1911)-1- பரம அழைப்பிற்கான கதவு மூடின பிற்பாடு அர்ப்பணம்பண்ணுபவர்கள், ஆவிக்குரிய தளத்தில் உயிர்த்தெழுதலை அடைவார்கள் என்பது உங்களது கருத்தாக இருக்கின்றதா?
பதில் – இல்லை! பரம அழைப்பிற்குரிய முடிவு வந்த பின்னர், ஆவியில் ஜெநிப்பித்தல் நிகழ்வதில்லை; ஆவியில் ஜெநிப்பித்தல் இல்லையெனில், ஆவியில் பிறத்தலும் இருப்பதில்லை. இது தொடர்புடையதாக நாம் பெற்றிருக்கும் ஒரே ஒரு கருத்தினை நாங்கள் சற்று முன்பு பகிர்ந்துகொண்டோம்; அதென்னவெனில்: உபத்திரவ காலத்தின்போது கர்த்தருக்காக தாங்கள் பாராட்டும் உண்மையினால், தங்களது ஜீவியங்களை ஒப்புக்கொடுக்கும் சிலர், முற்பிதாக்கள் வகுப்பாருக்குள் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்றும், ஆயிர வருஷங்களின் முடிவில் முற்பிதாக்கள் வகுப்பாருக்கு ஆவிக்குரிய சுபாவம் ஒருவேளை அளிக்கப்படுகையில், இவர்களும் இவ்வகுப்பாரில் உள்ளவர்களாய் இருப்பதினால், ஆவிக்குரிய சுபாவத்தை அடையும் வாய்ப்பினைப் பெறலாம் என்றுமுள்ள கருத்துகளேயாகும்.