Q482:1
கேள்வி (1916)-1- இத்தகைய (அலுவல்) கூட்டங்களில், கேள்விகளின் விஷயத்தில், உதவிக்காரர்கள் வாக்களிப்பது சரியா? அல்லது இது மேற்பார்வையாளர்களாகிய மூப்பர்களிடத்தில் விட்டுவிடப்படவேண்டுமா? ஒருவேளை மூப்பர்களைக்காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உதவிக்காரர்கள் இருக்கையில் மற்றும் அனைவரும் வாக்களிக்க வேண்டுமானால், பின்னர் மூப்பர்களுக்குப் பதிலாக உதவிக்காரர்கள் சபையினுடைய அலுவல் காரியங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கலாமா?
பதில் – மூப்பர்கள் ஆவிக்குரிய காரியங்களைப்பார்க்க வேண்டியவர்களாகவும், வாக்களிக்க வேண்டியவர்களாகவும் (vote) இருக்கின்றனர்; ஆனால் கூட்டங்களின் எண்ணிக்கையைச் சபையார் தீர்மானிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றனர். சரியாய் நடத்தப்படுவதற்கும், கலந்துகொள்ளப்படுவதற்கும் ஏதுவான எண்ணிக்கையிலுள்ள கூட்டங்களைப் பெற்றிடுங்கள். இன்னொரு கூட்டத்தைக்கூடக் கூட்டிக்கொள்ளும் விஷயத்தில், ஒப்புதலளிக்க விருப்பம் இல்லாதவர்களாய்ச் சிலர் காணப்படலாம்; ஆனால் மற்றவர்களுடைய சௌகரியத்தையும், வளர்ச்சியையும் கருத்தில் எடுத்துக்கொள்வது நலமாயிருக்கும். கூடுதலாக ஒரு கூட்டத்தைப் பெற்றிடுவது உங்களுக்கு அவசியம் இல்லாமல் காணப்படலாம், ஆனால் அது அவர்களுக்கு அவசியமாய் இருக்கும். ஆகவே சபையாருடைய நபர்களின் வளர்ச்சிக்கு அவசியமானது என்று சபையாரால் கருதப்படும் எண்ணிக்கையிலான கூட்டங்களைப் பெற்றிருப்பதற்கு ஒப்புதலளிப்பது நலமானதாய் இருக்கும்.
புரூக்கிளினில் ஒருவேளை கூடுதலாகக் கூட்டம் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு விருப்பம் ஏற்பட்டால், அது குறித்தத் தகவல் சில சமயங்களில் எனக்கும் மற்றும் சில சமயங்களில் மற்றவர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விஷயத்தினைக் கருத்தில் எடுத்துக்கொண்டு, எத்தனை பேர் அக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று அறிந்துகொள்ள முற்படுவோம். கலந்துகொள்வதற்குப் போதுமான எண்ணிக்கையானவர்கள் காணப்படாதது வரையிலும் நாம் கூட்டத்தினைக்குறித்துப் பரிந்துரைக்க மாட்டோம். கலந்துகொள்வதற்கென ஏழு அல்லது எட்டுப் பேர் இல்லாததுவரையிலும் ஒரு புதியக் கூட்டத்தினைக் குறித்துப் பரிந்துரைப்பதற்கு நாம் சிந்திப்பது இல்லை மற்றும் இப்படியாகக் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை பதினைந்தாக உயரும் என்றும் நாம் எதிர்ப்பார்ப்போம். ஆனால் ஒருவேளை எண்ணிக்கை முப்பதை எட்டும்போது, ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் நன்கு வளர்ச்சியடையத்தக்கதாகக் கூட்டத்தினை இரண்டாகப் பிரித்திடுவது குறித்து நாம் சிந்திப்போம். இயல்பாகவே மந்த நிலையில் காணப்படுபவர்களாகக் கர்த்தருடைய ஜனங்களில் சிலர் காணப்படுகின்றனர் மற்றும் அதிக எண்ணிக்கையானவர்கள் காணப்படுகையில் இத்தகையவர்கள் கவனிக்கப்படாமல் காணப்படுவார்கள்; ஆனால் குறைவான எண்ணிக்கையில் காணப்படும் போது இத்தகையவர்கள் மிகுந்த கவனத்தைப் பெற்றுக்கொள்வார்கள் மற்றும் இது அவர்களது வளர்ச்சிக்கு ஏதுவானதாய்க் காணப்படும்.