Q535:2
கேள்வி (1913 -Z.5161)-2- சபையின் மூப்பராக இருந்தும், வாக்குறுதியோடும் (vow), சொசைட்டியின் (society) ஊழியங்களோடும் உடன்பாடு கொண்டிராத ஒருவரால், பிரயாணம் மேற்கொண்டுள்ள பயண ஊழியர் வரவேற்கப்பட்டு, உபசரிக்கப்படுவது ஞானமான அல்லது சரியான காரியமாய் இருக்குமா?
பதில் – மிகவும் உறுதியாய் இல்லை என்பதே பதில். இன்னுமாக இப்படியான மூப்பர் ஒருவரைத் தேர்ந்தெடுத்ததில் சபையார் பெரிதும் தவறுசெய்துள்ளனர் என்று சபையாருக்குப் பயண ஊழியர் தெளிவுபடுத்திட வேண்டும் மற்றும் முடிந்தமட்டிலும் விரைவாய்த் தவறைச் சரிசெய்திடுவதற்கு அவர்களுக்கு உதவிட வேண்டும்.
சொசைட்டியினுடைய ஊழியங்களின் மீது உடன்பாடில்லாத அந்த மூப்பரை ஒருவேளை தொடர்ந்து சபையார் விரும்புவார்களானால், சபையார் பயண ஊழியர்களின் ஊழியத்திற்காக சொசைட்டியிடம் வேண்டிக்கொள்ளக்கூடாது. கர்த்தருடைய அருமையான செம்மறியாடுகளில் சிலர் மிகவும் மதியீனமாய்க் காணப்படுகின்றனர். சாந்தமும், தயவும் பாராட்டத்தகுந்தவைகளே; ஆனால் சிலசமயங்களில் இப்படிச் சாந்தத்தோடும், தயவோடும் காணப்படுவது என்பது தேவனுக்கு நேர்மையற்றிருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும்.