Q11:1
கேள்வி (1907)-1- முற்பிதாக்களில் யாரேனும் இரண்டாம் மரணத்திற்குள் கடந்துபோயிருக்க வாய்ப்பிருக்கின்றதா?
“பதில் – இல்லை என்று நான் எண்ணுகின்றேன். முற்பிதாக்களுடைய காலப்பகுதியில், தேவன் உலகத்திற்கு எந்த ஒரு வாய்ப்பையும் முன்வைக்கவே இல்லை; மேலும் இவர்கள் ஆதாமின் மரணத்தினின்று விடுதலைப்பண்ணப்படாததால், இவர்கள் இரண்டாம் மரணத்திற்குள் கடந்துபோக வாய்ப்பில்லை. ஆகையால் கிறிஸ்து ஆதாமின் பாவத்திற்காக மரிக்காதது வரையிலும், மரணத்திலிருந்து அவர் மரித்தோருக்கும், உயிரோடிருப்பவர்களுக்கும் நியாயாதிபதியாக இருக்கும்படி உயிர்த்தெழாதது வரையிலும், யார் ஒருவராலும் ஆதாமின் நிமித்தமான மரணத்தினின்று வெளிவர இயலாது; ஆதாமின் மரணத்தினின்று வெளிவராதது வரையிலும், ஒருவரால் இரண்டாம் மரணத்திற்குள் கடந்துசெல்ல முடியாது.
“