Q162:1
கேள்வி (1908)-1- பெரோயா வகுப்புகளிலோ அல்லது வேறு ஏதேனும் வேதாகம வகுப்புகளிலோ, வழிநடத்துபவரிடமிருந்தோ அல்லது வேறு யாரிடமிருந்தோ வேதவாக்கியங்களுக்கு முரணானது என்று அறியப்பட்டிருக்கிற குழப்பமான கருத்துகள் வருகையில் மற்றும் அவைகள் கிறிஸ்துவுக்குள்ளான குழந்தைகளினால் சத்தியமென ஏற்றுக்கொள்ளப்படும்போது – சத்தியத்தில் உறுதியடைந்திருப்பவர்கள், ஆனால் நியாயந்தீர்க்கவோ அல்லது விமர்சிக்கவோ விருப்பமில்லாதவர்களாய் இருப்பவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அவர்கள் அமைதியுடன் காணப்படவேண்டுமா அல்லது சத்தியத்தினை வெளிக்கொண்டுவரத்தக்கதாக ஏதேனும் சில கேள்விகள் கேட்க வேண்டுமா? ஒருவேளை சத்தியமானது, யாரேனும் ஐக்கியத்தினின்று ஒதுங்கிவிடுவதற்குக் காரணமாகும் பட்சத்தில், அர்ப்பணிக்கப்பட்டவர்கள் எப்படி அணுகிட வேண்டும்?
பதில் – அன்பான நண்பர்களே, என்னுடைய பதில் என்னவெனில்… சில முக்கியத்துவமற்றக் காரியங்கள் இருக்கின்றன – ஒரு விதத்தில் பார்க்கும்போது, எந்தச் சத்தியமும் முக்கியத்துவமற்றதல்ல – ஆனாலும் சில சத்தியங்களானது, வேறு சில சத்தியங்களின் அளவுக்கு முக்கியமானவைகளல்ல மற்றும் அவைகள் ஒருவேளை கொஞ்சம் மீறப்பட்டாலும், கண்டுகொள்ளாமல் விடப்படலாம். சபையார் மத்தியில் பேசிக்கொண்டிருக்கும் சகோதரனோ அல்லது சகோதரியோ அல்லது பேசுவது யாராயினும், சத்தியம் தொடர்பான அவனது அல்லது அவளது கண்ணோட்டத்தினை முன்வைப்பவர்களாய் இருப்பார்கள் மற்றும் அது அவன் அல்லது அவள் கண்ணோட்டமெனச் சபையாரால் புரிந்துகொள்ளப்பட வேண்டும் மற்றும் பேசும் நபரும், தான் தேவ ஏவுதலால் பேசுவதாகவோ அல்லது தவறிழைக்காத தன்மையுடையவராக இருப்பதாகவோ உரிமைப்பாராட்டுவதில்லை மாறாக அவன் அக்காரியம் தொடர்பான தனது கண்ணோட்டத்தினைத் தெரிவிப்பதாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்; மேலும் ஒவ்வொருவனும் அக்காரியம் தொடர்பான அவனது அல்லது அவளது கண்ணோட்டத்தினைத் தெரிவித்திடலாம் என்று சபையாரால் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஒருவேளை இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளது போன்றதொரு சந்தர்ப்பத்தில் நான் காணப்படுவேனாகில், அக்காரியத்தினை சரியான விதத்தில் கேள்வியாக வைக்கத்தக்கதான நிலைமையில் சபையார் காணப்படுவார்கள் என்று நான் நம்புவேன் மற்றும் நான் எதிர்த்துப் போராடும் விதத்தில், “இல்லை, நீங்கள் கூறும் கருத்திற்கு எனக்கு உடன்பாடில்லை என்று கூறிடுவதற்கு முயலமாட்டேன். காரியங்களைக் கவனத்திற்குக் கொண்டுவருவதற்குப் பல்வேறு வழிகள் காணப்படுகின்றன. நீங்கள்: “சகோதரனே, அக்காரியத்தினை இந்த ஒரு கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளலாமல்லவா? கருத்தில் எடுத்துக் கொள்வதற்கு இது முரண்பாடற்றக் கண்ணோட்டமாய் இருக்கின்றதல்லவா? சரியாய் இருக்குமென நான் எண்ணுகின்ற கண்ணோட்டத்தினை இதோ விவரிக்கின்றேன் என்று கூறிடலாம். பின்னர் உங்கள் கண்ணோட்டத்தினைத் தெரிவியுங்கள்; அவர் தனது கண்ணோட்டத்தினைக் கூறிவிட்டார் மற்றும் உங்களது கண்ணோட்டமானது சுருக்கமாயும், அன்பான விதத்திலும் கொடுக்கப்பட்டிருந்தால், உங்கள் கண்ணோட்டத்தினை நீங்கள் கூறிடுவதற்கு அவர் மறுப்புத்தெரிவிக்க முடியாது. நீங்கள் உங்கள் கடமையினைச் செய்து முடித்துவிட்டீர்கள் மற்றும் அக்காரியத்தில் நீங்கள் சண்டையிட அவசியமில்லை மற்றும் கருத்தில் சிறு வேறுபாடு இருப்பதன் நிமித்தம் ஒருவர் ஒதுக்கிவைக்கப்பட வேண்டுமென முடிவெடுப்பதற்கும் அவசியமில்லை. அவர் காரியம் குறித்த தன்னுடைய புரிந்துகொள்ளுதலைத் தெரிவித்திடுவதற்குரிய தனது வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டு அதைத் தெரிவித்துள்ளார்; சத்தியமானது, அதிலும் விசேஷமாக ஒருவேளை அது ஏதேனும் முக்கியமான காரியமாய் இருக்கும் பட்சத்தில், சத்தியமானது எப்போதும் தெரிவிக்கப்படுகின்றதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்; ஆனால் ஒருவேளை அது அதிகம் வித்தியாசமற்றவைகளாக இருக்குமானால், அதைக் கவனித்திட வேண்டாம். இப்பொழுது எனக்கு ஒரு சகோதரன் ஞாபகத்திற்கு வருகின்றார்; அவர் மிகவும் நல்ல இருதயம் கொண்ட சகோதரன் ஆவார் என்பதில் எனக்கு நிச்சயமே ஆனால் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டால், அக்கருத்தோ அல்லது மற்றக் கருத்தோ, இரண்டில் ஒன்று உறுதியற்றுப் போகுமளவும் போராடிட வேண்டும் எனும் தவறான எண்ணம் கொண்டவராய் இருந்தார். அன்புக்குரிய நண்பர்களே இது தவறான எண்ணமாகும். நண்பர்கள் அனைவருமே தங்கள் சொந்த மனதில் பகுத்தறிந்திட வேண்டும் மற்றும் நீங்களும் சரி, நானும் சரி, நம்முடைய கண்ணோட்டத்தினைக் குறித்துத் தெரிவித்ததில் மிக்க மனநிறைவு கொள்ள வேண்டும் மற்றும் மற்றவர்கள் எதை விரும்புகின்றார்களோ, அக்கண்ணோட்டத்தினை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். இதைத்தானே நாம் நடைமுறையில் செய்துகொண்டிருக்கின்றோம்? வாட்ச் டவர் வெளியீட்டில் நீங்கள் சில கண்ணோட்டத்தினைப் பெற்றுக்கொள்கின்றீர்கள்; நீங்கள் அதை நம்பவேண்டும் என்ற கட்டாயம் உங்களுக்கில்லை மேலும் நீங்கள் அதை நம்பவில்லை என்றால், அதற்காக நான் உங்களிடத்தில் கோபம் கொள்வதில்லை. அது உங்கள் சார்பிலான காரியமாய் இருக்கின்றது. அடுத்த வாட்ச் டவர் வெளியீட்டில் நான் தொடர்ந்து, மறுபடியுமாக எண்ணுவதை நான் தெரிவித்திடுவேன் மற்றும் நீங்கள் எனக்குக் கடிதம் எழுதிடுவதற்கும், நீங்கள் அதை நம்பவில்லை என்று கடிதத்தில் குறிப்பிடுவதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு மற்றும் நானும், “சரி நீங்கள் நம்பவேண்டிய கட்டாயம் உங்களுக்கு இல்லை என்று சொல்லிடுவேன்.