Q245:1
கேள்வி (1911)-1- வேதாகம பாடங்களினுடைய ஆறாம் தொகுதியில், சபையில் மூப்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திற்குப் பெரும்பான்மையானது போதுமாயிராது, மாறாக (ஏகமன நியதி / Jury rule ) ஜூரி விதி நிலவ வேண்டுமென்று நாம் வாசிக்கின்றோம். அப்படியானால், அதுவே உதவிக்காரர்கள் தேர்ந்தெடுக்கப் படுகையிலும் பின்பற்றப்பட வேண்டிய ஞானமான வழிமுறையாய் இருக்குமல்லவா?
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்கள் இருவரின் தேர்ந்தெடுத்தலில் ஒரே ஒழுங்குமுறை நிலவ வேண்டுமென நாம் தொகுதியில் / volume வாசிக்கின்றோமே.
பதில் – இந்தக் காரியத்தில், சட்டம் ஒன்றை முன்வைத்திட நாம் நாடுகிறதில்லை சட்டம் ஒன்றினை இயற்ற நமக்கு உரிமை இல்லை சபைக்கு ஞானமான வழிமுறையாகக் காணப்படும் என்று நாம் நம்புகிறவற்றை நாம் யோசனையாக வழங்க மாத்திரமே செய்கின்றோம். உதாரணத்திற்கு ஒரு சபையில், (bare majority) குறைந்தளவு எண்ணிக்கையில் / வித்தியாசத்தில் பெரும்பான்மையினராகினவர்கள், காரியங்களை நிர்ணயிக்க அனுமதிக்கப்படுவார்களாகில், மிகப்பெரிய எண்ணிக்கையிலுள்ள, அதாவது பெரும்பான்மையினரைப் போன்று கிட்டத்தட்ட எண்ணிக்கையில் பெரியதாகக் காணப்படும் சிறுபான்மையினர் முழுக்க அதிருப்திக்குள்ளாவார்கள்; மற்றும் ஒரு எண்ணிக்கையில் பெரும்பான்மையினராகினவர்கள் அச்சபையை மிகவும் நியாயமற்ற விதத்தில் நடத்துபவர்களாய் இருப்பர்கள். ஆகையால் சபையார் தங்கள் வாக்குகளைச் சரிப்படுத்த முயற்சித்திட வேண்டும் மற்றும் கூடுமானால் சபையிலுள்ள அனைவரையும் பிரியப்படுத்தவும், திருப்திப்படுத்தவும்தக்கதாக மூப்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது எங்கள் யோசனையாக இருக்கின்றது. இப்படியாக முடிந்தமட்டும் mere majority / வெறும் பெரும்பான்மை விதியானது புறக்கணிக்கப்பட வேண்டும் மற்றும் முடிந்தமட்டும் (ஏகமன நியதியானது) ஜூரி விதியானது அடையப்பெறவேண்டும் – அது ஏகமன நியதியாக இருக்க வேண்டும் என்று நாம் சொல்லாமல், மாறாக முடிந்தமட்டும் சபையில் கருத்து வேறுபாடின்மையானது அடையப்பெற வேண்டும் என்று சொல்லுகின்றோம். ஒரு சபையில் யார் உதவிக்காரராக அல்லது மூப்பராக இருக்க வேண்டும் என்பது தொடர்பான காரியத்தில், முழுச்சபையாரும் ஒன்றையே சிந்திக்கும் நிலையினை அடைவது எப்போதும் சாத்தியமல்ல; ஆனால் என்ன விதி கைக்கொள்ளப்பட்டாலும், அது மூப்பர்கள் விஷயத்தில் கைக்கொள்ளப்படுவது பொருத்தமாய் இருப்பதுபோன்று, உதவிக்காரர்கள் விஷயத்திலும் கைக்கொள்ளப் படுவது பொருத்தமானதாகவே இருக்கும். எந்த ஓர் ஊழியத்திற்கும், யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், சபையாருக்கு ஊழியக்காரர்களாய்க் காணப்படப் போகிறவர்களிடத்தில், சபையார் அனைவரையும் திருப்தியும், பிரியமும் கொண்ட நிலையில் பெற்றிருக்க நாடும்படியாக, கொள்கைகள் சம்பந்தப்படாதவைகளில் சபையார் ஒருவருக்கொருவர் சிறு சிறு காரியங்களில் முடிந்தமட்டும் விட்டுக்கொடுக்கத்தக்கதாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.