Q101:1
கேள்வி (1909)-1- நம்முடைய கணிப்புகளானது, கீழ்ப்படிதலுடைய கொள்கை சம்பந்தப்பட்ட விஷயத்தில், நம்மால் எந்தமட்டும் தவிர்க்கப்படலாம் / அடக்கி வைத்துக்கொள்ளப்படலாம்?
பதில் – நம்முடைய கணிப்புகளானது அடக்கிவைக்கப்படுவது என்பது ஒரு காரியமாகவும், நம்முடைய மனசாட்சி அடக்கிவைக்கப்படுவது இன்னொரு காரியமாகவும் காணப்படுகின்றது. நம்முடைய மனசாட்சி அல்லது நம்முடைய கணிப்புகள் – இவற்றில் எது அடக்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டால், நம்முடைய கணிப்புகள் அடக்கிவைக்கப்படுவதே நலமானதாய் இருக்குமென நான் பதிலளிப்பேன்; ஏனெனில் நமது மனசாட்சியினை நாம் அடக்கிவைக்கக்கூடாது. ஒருவேளை விஷயம், கணிக்க / பகுத்தறிய வேண்டிய விஷயமாக மாத்திரமே இருக்குமானால், மேலும் அவ்விஷயத்தில் கணிக்க / பகுத்தறிய வேண்டிய பொறுப்பும் நம்மீது கடந்துவராததாய் இருக்குமானால், அதைச் சபையாரிடத் திலேயே விட்டுவிடுங்கள். நீங்கள் கணித்தவைகளை / பகுத்தறிந்தவைகளை மற்றவர்களிடத்தில் ஒப்புவியுங்கள் – உங்கள் கருத்தினை மற்றவர்களுடைய தீர்மானத்திற்கென்று ஒப்புவியுங்கள். மற்றவர்களுடையதைக் காட்டிலும், நீங்கள் பகுத்தறிந்திருப்பவைகள் மேம்பட்டுக் காணப்படும் பட்சத்தில், அதை மற்றவர்களுக்குச் சொல்வதற்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கின்றீர்கள் மற்றும் பிற்பாடு அமைதலாய் இருங்கள். இல்லையேல் நீங்கள் – தான் பார்ப்பதுபோன்று மற்றப் பதினொரு மனிதர்களும் பார்க்கவில்லை என்பதினால், அந்த பதினொரு பேருக்கும் அறிவில்லை என்று சொல்கிற Juryman / முறைகாண் ஆய உறுப்பினர் (நீதிமன்றத்தில் தங்களுக்கு முன்கூறப்பட்ட வழக்கில் முடிவு தெரிவிப்பதாக ஆணையிட்டு அமர்ந்திருக்கும் குழுமத்தின் உறுப்பினர்) போன்று காணப்பட்டு விடுவீர்கள்.