Q473:1
கேள்வி (1910)-1- சபையில் மூப்பர்கள் அல்லாத வேறே சகோதரர்கள் கொஞ்சம் தலைமை தாங்கி நடத்துவதற்கு நீங்கள் பரிந்துரைப்பீர்களா?
பதில் – சபையே இதைத் தீர்மானித்திட வேண்டும். இக்காரியம் சபையினிடத்திற்கே விட்டுவிடப்பட வேண்டும். ஒரே ஒரு மூப்பரை ஒருவேளை சபைதான் தெரிந்துகொண்டுள்ளதென்றால், அப்பொழுது அது சபையினுடைய பொறுப்பாகின்றது; அதாவது இது மூப்பர்களுக்கான தகுதியுடையவர்களென வேறு எவரையும் சபை கண்டுபிடிக்கவில்லை என்பதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. ஆனால் மூப்பரோ தனக்குச் சபையாரைக் காட்டிலும் நன்கு தெரியும் என்று கூறி, யாரையாகிலும் நியமிப்பது என்பது, சபையின் கணிப்பைக் குறைத்து மதிப்பிடுவதாக இருந்துவிடும், ஏனெனில் மூப்பருக்கான தகுதியுடையவர்களென வேறு எவரும் இருப்பதாகக் கண்டுபிடிக்கவில்லையென்றே சபை கூறியுள்ளது. அந்த ஒரு மூப்பரை மாத்திரம் தேர்ந்தெடுத்தபோது, சபை இப்படியாகக் கூறியிருந்தது. ஆனால் சபையானது, நாங்கள் ஒரு மூப்பரை மாத்திரமே தேர்ந்தெடுப்போம், ஆனால் அந்த மூப்பனார் தனது கணிப்பைப் பயன்படுத்தி, சபையிலிருந்து மற்றச் சில சகோதரர்களை அவர் முன்கொண்டுவருவதற்கும், அவர்களைப் பல்வேறுவிதங்களில் அவர் பயன்படுத்துவதற்கும் (அ) அவர்கள் திறமைக்கு ஏற்ப ஊழியம் புரிந்திடுவதற்கு அவர் அழைப்பதற்கும் நாங்கள் விரும்புகின்றோம் என்று கூறியிருந்ததானால், இத்தகைய ஒரு பொறுப்பை, சபையே அந்த மூப்பனாருக்குக் கொடுத்தவர்களாய் இருக்கின்றார்கள் மற்றும் சபை தனக்குக்கொடுத்துள்ளதை மாத்திரமே அந்த மூப்பனார் பயன்படுத்தலாம் மற்றும் இதற்கு மேலாக எதையும் செய்யக்கூடாது. இம்மாதிரியான சூழ்நிலையில் சபையார் மற்றவர்களை உதவிக்காரர்களாய்த் தெரிந்துகொண்டு, சபையின் மூப்பரை நோக்கி: உங்களால் முடிந்தமட்டும் இந்த உதவிக்காரர்கள் முன்னுக்குக் கொண்டுவரப்பட வேண்டியவர்களாய் இருக்கின்றனர் என்பதாகத் தயவுகூர்ந்து கருதுங்கள், ஏனெனில் இவர்கள் முன்னுக்குக் கொண்டுவரப்படுவதற்கும், ஒருவேளை போகப்போக சபையின் சில முக்கியமான ஊழியங்களுக்குக் கொண்டுவரப்படுவதற்குமெனச் சில தகுதிகள் இவர்களிடத்தில் காணப்படுவதை எங்களால் பார்க்க முடிகின்றதாக நாங்கள் எண்ணியே, இவர்களை உதவிக்காரர்களாகத் தேர்ந்தெடுத்தோம் என்று கூறுவதும் தகுதியாயிருக்கும். உதவிக்காரருடைய ஊழியத்தை உண்மையாய்ச் செய்பவர்கள், தங்களுக்கு நல்ல நிலையைச் சம்பாதித்துக்கொள்கின்றார்கள் என்று பரிசுத்தவானாகிய பவுல் கூறுகின்றார்; அதாவது உதவிக்காரர்களென அல்லது உணவின் விஷயத்திலோ (அ) வேறு ஏதாகிலும் விஷயத்திலோ விசாரிப்பதிலும், சேவிப்பதிலும் ஊழியர்களென உண்மையாய் இருப்பதன் மூலம் இவர்கள் சபைக்கடுத்த ஊழியம் புரிவதற்குரிய சரியான ஆவியை வெளிப்படுத்துகிறவர்களாகவும், இன்னும் மற்ற ஊழியங்களுக்கான பொறுப்புத்தங்களிடத்தில் நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்படலாம் என்பதையும் வெளிப்படுத்துகின்றவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் பழங்களையோ (அ) பாலையோ அல்லது வேறு ஏதாகிலும் உணவையோ பரிமாறுவதன் மூலம், சபையாருக்கு ஊழியம் புரிந்திட ஓர் உதவிக்காரர் வெட்கப்படுவாரானால், அவர் உதவிக்காராய் இருப்பதற்குத் தகுதியற்றவர் மற்றும் மூப்பராய் இருப்பதற்கு ஆபத்தானவராகவும் இருப்பார்.