Q246:1
கேள்வி (1913)-1- குறைவுகளோடு ஆங்கில மொழியைப் பேசுகின்றதான ஜெர்மனிய அல்லது ஸ்வீடிஷ் மொழி பேசும் வெளிநாட்டுச் சகோதரனைப் பொதுப்பேச்சாளராகத் தேர்ந்தெடுப்பதற்கு நீங்கள் பரிந்துரைப்பீர்களா?
பதில் – ஒருவேளை வகுப்பில் அந்த வெளிநாட்டு மொழியைப் பேசுபவர்கள் போதுமான எண்ணிக்கையில் இருப்பார்களானால், அத்தகைய ஒரு பேச்சாளர் விரும்பப்படத்தக்கவராக இருப்பார் மற்றும் அவரைத் தேர்ந்தெடுப்பது முறையாய் இருக்குமென நான் கருத்துத் தெரிவிக்கின்றேன். உதாரணத்திற்கு, புரூக்கிளின் சபையாரில் பிரெஞ்சு மொழியில் வகுப்பினை நடத்திடுவதற்கு நன்கு தகுதிவாய்ந்த பிரஞ்சு சகோதரன் ஒருவரை நாங்கள் பெற்றிருக்கின்றோம். இத்தாலிய மொழியில் வகுப்பினை நடத்திடுவதற்கு நன்கு தகுதிவாய்ந்த இத்தாலிய சகோதரன் ஒருவரை நாங்கள் பெற்றிருக்கின்றோம். ஸ்வீடிஷ் சகோதரன் ஒருவரையும் நாங்கள் பெற்றிருக்கின்றோம். வகுப்பிலுள்ள நண்பர்கள் ஆங்கிலம் புரிந்துகொள்ள முடியாதவர்கள் என்றல்ல, மாறாக இவர்கள் தங்கள் மொழியினைக் கொஞ்சம் விரும்புவதினால், இவர்களது சொந்த மொழியினை நன்கு தெரிந்த ஒருவரைப் பெற்றிருக்க விரும்புகின்றனர். இது மிகவும் சரியே என்று நாம் எண்ணுகின்றோம். இப்படியாகவே ஐரோப்பிய இனமில்லாத சகோதரர்கள் விஷயத்திலும் காணப்படுகின்றது; நாங்கள் வெவ்வேறு தேச வகுப்புகளைப் பெற்றிருக்கின்றோம். சபையார் மத்தியில் எத்தனை வெவ்வேறு இன வகைகளைப் பெற்றிருக்கின்றார்கள் என்பது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.