Q15:3
கேள்வி (1914)-3- திரள்கூட்டத்தாருடைய கடைசி அங்கத்தினன் திரைக்கப்பால் கடந்துபோவதற்கு முன்னதாக, சகோதரர் ரசல் அவர்களே, முற்பிதாக்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்களா?
பதில் – அப்படி நான் எண்ணுகிறதில்லை. ஆனால் எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. திரள்கூட்டத்தார் திரைக்கப்பால் கடந்துபோவதற்கு முன்னதாக முற்பிதாக்கள் உயிர்த்தெழுவார்களென நான் எதிர்ப்பார்க்காததற்கான காரணம் பின்வருமாறு: சிறுமந்தையாகிய ஆசாரிய வகுப்பாரையும், திரள்கூட்டத்தாரையும் உள்ளடக்கியுள்ள முதற்பேறானவர்களின் முழுச்சபையும் – அதாவது இவர்கள் அனைவரும் முதற்பலன்களாகவும், கிறிஸ்துவினுடைய புண்ணியத்தினைத் தரிப்பிக்கப் பெற்றவர்களாகவும் காணப்படுகின்றனர்; மேலும் என்னுடைய கணிப்பின்படி, முழுச்சபையாருக்கும் புண்ணியமானது விசேஷமாய்த் தரிப்பிக்கப்படும் விஷயம் அதன் பலனைக்கொடுத்து, அனைவரும் திரைக்கப்பால் கூட்டிச்சேர்க்கப்பட்டுப் போவதற்கு முன்புவரை, உலகத்தின் பாவங்களுக்காகக் கிறிஸ்துவின் புண்ணியம் செயல்படுத்தப்படும் காரியமானது நிகழாது. இதுவே எனது கருத்தாகும்.