Q235:1
கேள்வி (1916 – Z )-1- ஏன் மூப்பர்கள் கவனமாய்த் தெரிந்தெடுக்கப்பட வேண்டும்?
பதில் – ஏனெனில் ஊழியம் புரிவதற்கான ஆவி, கிறிஸ்துவின் சபையினுடைய மூப்பர்களின் அல்லது பயண ஊழியர்களின் ஆவியாக மாத்திரம் இராமல், சபையின் ஒவ்வொரு அங்கத்தினருடைய ஆவியாகவும் கூட இருக்கின்றது; காரணம் நம்மில் ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய இருதயங்களில் தேவனுடைய கிருபைக் குறித்த செய்தியை எழுதும் விஷயத்தில், ஊழியக்காரனாக அல்லது வேலைக்காரனாக இருப்பதற்கான சிலாக்கியம் பெற்றிருக்கின்றோம். நம்முடைய சொந்த இருதயங்களில் ஏற்கெனவே எழுதப்படாத விஷயங்களை, மற்றவருடைய இருதயங்களில் எப்படி எழுத வேண்டும் என்பதை நாம் அறியாதவர்களாய் இருப்போம் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். எனவேதான் மூப்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் – ஏற்கெனவே தங்களுடைய இருதயங்களில் கர்த்தருடைய காரியங்களை எழுதப்பெற்றவர்களைக் கண்டுபிடிப்பதில் மற்றும் இதன் காரணமாக வளர்ந்துவரும் சகோதர சகோதரிகளுடைய இருதயங்களில் பரிசுத்த ஆவியினுடைய வழிநடத்துதலினால் கர்த்தருக்கு ஒத்த குணலட்சணங்களை எழுதுவதற்குத் தகுதியுள்ள உதவியாளர்களாக இருக்கக்கூடியவர்களைக் கண்டுபிடிப்பதில் மிகுந்த கவனம் அவசியமாயுள்ளது.
நம்முடைய இருதயங்களில் பல்வேறு பிரதிநிதிகள் மூலம் பரிசுத்த ஆவியினால் எழுதப்பட வேண்டியுள்ள செய்தி யாது? நிருபம் யாது? அது காலக்கணக்குப்பற்றின சத்தியமா? அது நிழல்கள் குறித்த தெளிவான காரியங்களா? அது வேறு விதமாய்ப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள வேதவாக்கியப் பதிவுகள் தொடர்பான விஷயத்தில், கடினமான இறையியல் கோட்பாடுகளை உடைக்கும் காரியமா? அது யூதர்களின் வரலாறு, உலகத்தின் வரலாறு, சபையின் வரலாறு குறித்த அறிவா? அது கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் வரவிருக்கின்ற காலத்தில் இருக்கும் பல்வேறு உடன்படிக்கைகள் குறித்த புரிந்துகொள்ளுதல் மற்றும் உணர்ந்துகொள்ளுதலா? இல்லை, அது இவைகளில் ஒன்றுமேயில்லை. ஆண்டவருடைய பண்பு இயல்புகளை நம்முடைய இருதயதங்களில் ஆழமாகப் பதியப் பெற்றிருப்போமாகில், “நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய இராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் நமக்கு நிறைவாக அருளப்படும் – 2 பேதுரு 1:8,11.
இந்த அனைத்துப் பாடங்களும் ஏறக்குறைய முக்கியத்துவம் வாய்ந்தவைகள்தான். மேலும் இப்பாடங்கள், கர்த்தர் தம்முடைய ஜனங்களுடைய இருதயங்களில் எழுதப்பட வேண்டியவைகள் தொடர்பாக ஏறக்குறைய பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கிறிஸ்துவின் நிருபத்தை எழுதுவது என்பது – ஆண்டவருடைய ஜனங்களின் இருதயங்களில் அவருடைய குணலட்சணத்திற்கு ஒத்த தடத்தைப் பதிப்பது, எழுதுவது என்பது – அதாவது அவருடைய சாந்தம், அவருடைய நற்பண்புகள், அவருடைய பொறுமை, அவருடைய நீடிய பொறுமை, அவருடைய சகோதர சிநேகம், அவருடைய அன்பு, அவருடைய சந்தோஷம், அவருடைய சமாதானம் குறித்து எழுதுவது என்பது வித்தியாசமான காரியமாகும்.
காலக்கணக்கு மற்றும் வரலாறு தொடர்பான அறிவை நாம் அனைவரும் பெற்றிருக்கலாம்; வேதாகமத்தின் ஒவ்வொரு வசனத்தையும் நம்மால் மேற்கோளிட்டுக் கூறமுடியலாம் மற்றும் வசனம் எங்குள்ளது என்றும்கூடக் கூறமுடியலாம்; ஆனாலும் கிறிஸ்துவின் நிருபத்தை நம்முடைய இருதயங்களில் எழுதப்பெறாமலும்கூட இருக்க வாய்ப்புண்டு. இந்த நிருபத்தைக் குறித்துதான் அப்போஸ்தலனாகிய பேதுரு, “இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் (சோம்பேறி, பயனற்றவர்) கனியற்றவர்களுமாய் இருக்க வொட்டாது என்று கூறியுள்ளார்; ஏனெனில் அறிவானது அது செய்ய வேண்டியதைச் செய்திடும்.