Q30:1
கேள்வி (1909)-1- சபையை விட்டுவிட்டு, நம்மைப் பாபிலோனைக்காட்டிலும் மோசமானவர்கள் என்று அழைக்கின்றவர்களை நாம் எப்படி வரவேற்பது? இப்படியானவர்கள் நம்முடைய கூட்டங்களில் கடந்துவரும்போது, இவர்களை நாம் மனமார வரவேற்றிட வேண்டுமா?
பதில் – இல்லை என்று நான் எண்ணுகின்றேன்; ஏன் நீங்கள் அப்படிச் செய்திட வேண்டும்? என் அருமை மீட்பர் போன்று விசேஷமாய்க் காணப்படு பவர்களிடம், என் மீட்பருடைய குணலட்சணத்திற்கு ஒத்திருக்கும் குணலட்சணங்களை உடையவர்களிடம் நான் விசேஷித்த அன்பார்ந்த விதத்தில் காணப்படுவேன். சபையை விட்டுப் பிரிந்துசென்றவர்கள், வித்தியாசத்தை உணரத்தக்கதாக நான் அவர்களிடம் மிகவும் அன்பார்ந்த விதத்தில் காணப்படமாட்டேன். இல்லாவிடில், சபையார் மத்தியிலுள்ள மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் தாங்கள் மேலானவர்கள்போன்று எண்ணிவிட நேரிடும்; ஏனெனில் இவர்கள் ஏதோ வகையில் ஒழுங்கில்லாதவர்களாகியுள்ளனர். இப்படிப்பட்டவர்கள் – “பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் எனும் அப்போஸ்தலனுடைய வார்த்தைகளுக்கு ஏற்பவே நடத்தப்பட வேண்டும். பிரிவினை உண்டாக்குகிறவர்களைக் கவனித்துக்கொண்டு, அப்படியானவர்களை உங்களது ஆத்துமக் கூட்டாளிகளாக்காதிருங்கள், மூப்பரகளாகத் தேர்ந்தெடுக்காதிருங்கள்; ஏனெனில் அது தவறாகும். சண்டையிடும் தன்மை உடையவர்கள் எவரையும் ஊக்கமூட்டாதீர்கள். அப்படியானவனைத் தள்ளிவைத்து விடுங்கள் மற்றும் அவன் அவனோடே சண்டையிட்டுக்கொள்ளட்டும். இவர்களது ஆவியில் எதையேனும், நம்முடைய சொந்த இருதயங்களில் நாம் விருத்திச்செய்யாதபடிக்கு ஜாக்கிரதையாய் இருப்போமாக. நாம் சாந்தமாய், ஆனால் உறுதியாய் இருப்போமாக. இப்படியானவர் என்னண்டை வருகையில், நான் அவரோடு கைக்குலுக்கிக்கொள்வேன்.உன்னோடு கைக்குலுக்கிக் கொள்வதில்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனாலும் அந்நபரை என்னுடைய பிராண கூட்டாளியாக்கிக் கொள்வதில்லை. ஆதிதிருச்சபையில் அப்போஸ்தலர்கள் குறித்து, “அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்று கூறப்பட்டதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். நமது கர்த்தர் இயேசுவை நம்முடைய பிராண துணைவராக்கிக்கொள்ள வேண்டும். நாம் இயேசுவோடுகூட இருக்கவேண்டும் மற்றும் அவருடைய குணலட்சணத்திற்கு ஒத்த குணலட்சணத்தைப் பெருமளவில் கொண்டிருப்பவர்கள், அவரைப்போன்று பெருமளவில் காணப்படுவார்கள். இவர்களே கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிருப்பவர்களாய் இருப்பார்கள். தம்முடைய ஆவியை அதிகளவில் பெற்றிருப்பவர்கள் மத்தியிலிருந்து பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் – ஆகியோர் தம்மோடு நெருக்கமாய்க் காணப்பட வேண்டும் என்று இயேசு தேர்ந்தெடுத்தார் மற்றும் அவர்களோடு அதிக நேரம் செலவிட்டார். இந்த மூவருந்தான் அவரோடுகூட மறுரூப மலையில் காணப்பட்டார்கள் மற்றும் கெத்செமனே தோட்டத்திலும் அவருக்கு அருகாமையில் காணப்பட்டனர். கர்த்தருடைய ஆவியைப் பெற்றிருப்பவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் வைத்துக்கொள்ளுங்கள்.