Q59:1
கேள்வி (1911)-1- அர்ப்பணம்பண்ணியுள்ளதான ஜனங்களின் பிள்ளைகள் இறுதியில் ஆவிக்குரிய சுபாவத்தினை அடைவார்கள் என்பது உங்கள் கருத்தாக இருக்கின்றதா?
பதில் – இல்லை அவிசுவாசியான கணவன் விசுவாசியான மனைவியினால் பரிசுத்தமாக்கப்படுகின்றான், அவிசுவாசியான மனைவி, விசுவாசியான கணவனால் பரிசுத்தமாக்கப்படுகின்றாள், இல்லையேல் அவர்கள் பிள்ளைகள் அசுத்தமாய் இருப்பார்கள்; ஆனால் அவர்கள் இப்பொழுது சுத்தமாயிருக்கின்றார்கள் என்று அப்போஸ்தலன் பேசுகையில், அவர் ஆவிக்குரிய சுபாவத்தைக் குறித்துப் பேசிடாமல், மாறாக பெற்றோரினால் தன் பிள்ளைக்குக் கொடுக்கமுடிகிற அந்தக் காரியத்தைக்குறித்து மாத்திரமே குறிப்பிடுகின்றார் – அதாவது பிள்ளையானவன் சிந்திக்கும் பருவமடைந்து, தானாய்ச் செயல்படும் வயதை அடைவதுவரையிலும், தற்காலிகமாய் நீதிமானாக்கப்பட்டுத் தேவனுடன் பெற்றிருக்கும் உறவுகுறித்து மாத்திரமே குறிப்பிடுகின்றார். ஆகையால் அர்ப்பணம்பண்ணாதவர்களின் பிள்ளைகள் பெற்றிராத விசேஷித்த மேற்பார்வையினையும், திவ்விய பராமரிப்பினையும், விசுவாசிகளான பெற்றோர்களின் பிள்ளைகள் அனைவரும் பெற்றிருப்பார்கள். ஆனால் இது பிள்ளைகள் ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுவதாகாது. தேவனால் நியமிக்கப்பட்ட படிகள்மூலமே அல்லாமல், மற்றப்படி ஒருவராலும் ஆவியினால் ஜெநிப்பித்தலை அடையமுடியாது; மேலும் அந்தப் படிகள் பலியின் படிகளாக, உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலிகளாக ஏறெடுப்பதாகும். அனுக்கிரக காலங்கள் முடிவடைவதற்கு முன்னதாகத் தங்களையே இப்படியாக இயேசுவின் நாமத்தில் அல்லது புண்ணியத்தில் பலியாகச் சமர்பிக்கும் பிள்ளைகள் அனைவரும் – ஒருவேளை அவர்கள் தங்களையே இப்படி அர்ப்பணிப்பதற்குப் போதுமான வயதுள்ளவர்களாய் இருப்பார்களானால், அவர்கள் ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுவார்கள். தான் என்ன செய்கின்றான் என்பதை முழுமையாய் அறிந்துகொள்ள முடிவதற்குரிய போதுமான வயதில் பிள்ளைக் காணப்படுவானானால், அப்பிள்ளையைத் தேவன் மறுப்பார் என்ற எண்ணம் எங்களுக்கில்லை.