Q43:3
கேள்வி (1908)-3- உலகத்தாரைத் தவிர வேறு யாராவது வேதாகமத்தைப் பயன்படுத்துவார்களா?
பதில் – அக்காலத்தில் முற்பிதாக்களைத் தவிர்த்து காணப்படும் உலக மனுக்குலம் அதைப் பயன்படுத்துபவர்களாய் இருப்பார்கள்; வேறு யாரும் அதைப் பயன்படுத்தமாட்டார்கள். முற்பிதாக்கள் அவ்வப்போது வேதாகமத்தையும், டாண் வெளியீடுகளையும் தகவல் புஸ்தகங்களாகப் பயன்படுத்தலாம்; ஆனால் அவைகள் அவர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பதில்லை, ஏனெனில் முற்பிதாக்கள் ஆவிக்குரிய சபையின் நேரடி மேற்பார்வையின்கீழ்க் காணப்படுவார்கள்; அனைத்துப் போதனைகளும் நேரடியாகச் சபையிடமிருந்து முற்பிதாக்களுக்குக் கடந்துவரும்; மேலும் முற்பிதாக்களிடமிருந்து ஜனங்கள் அனைவருக்கும் கடந்துசெல்லும்; மேலும் அவர்கள் வேதாகமத்தைச் சார்ந்து காணப்படுவதில்லை. ஆனால் பின்வருமாறு அனுமானிக்கலாம்: உதாரணத்திற்கு ஆபிரகாம் ஆதியாகமத்தின் பதிவுகளையும், தீர்க்கத்தரிசனங்களையும் வாசிப்பதில் மிகவும் சந்தோஷம் அடைவார்; தாம் ஆபிரகாமிற்கு முன்பே காணப்பட்டார் என்று இயேசு கூறியுள்ள வார்த்தைகளின் பதிவை புதிய ஏற்பாட்டில் வாசித்தறிவதில், ஆபிரகாம் மிகவும் சந்தோஷம் அடைவார். ஆபிரகாம் அதைப் பார்த்து: இயேசு இப்படிச் சொல்லியிருக்கின்றாரே, இது எத்தனை உண்மை! இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையே! என்று கூறுவார். அவர் டாண் வெளியீடுகளையும், மற்ற அநேக புஸ்தகங்களையும் வாசிக்க விருப்பப்படுவார் – அநேகமாக பிரான்சின் வரலாற்றையும், ஒருவரையொருவர் வெட்டிப்போடுவதை அவர்கள் எப்படி மகிமையானதொரு செயலாகப் பார்த்தார்கள் என்பதையும் வாசித்தறிய விருப்பப்படுவார்; அவர் சில இடங்களுக்குச் சென்று சிலைகளையும், போர் சின்னங்களையும் பார்வையிட்டு…
ஏன் அந்தச் சிலையைச் செய்தார்கள்? என்று வினவுவார்.
இவர் மாமனிதர் என்று பதிலளிக்கப்படும்.
இவர் என்ன செய்தார்? என்று ஆபிரகாம் வினவுவார்.
இந்த மனுஷன் ஒருகூட்ட ஜனங்களை வழிநடத்தினான்; அவர்கள் துப்பாக்கிகளையும், வெடிமருந்துகளையும், குண்டுகளையும் பெற்றிருந்து, அநேகம் ஜனங்களைக் கொன்றுபோட்டார்கள் என்று அவருக்குப் பதிலளிக்கப்படும்.
இந்தக் காரணத்திற்காகவா இவரை மாமனிதர் என்கிறீர்கள் என்று ஆபிரகாம் வினவுவார்.
ஆம்! என்று பதிலளிக்கப்படும்.
ஆகையால் மனித குடும்பத்திற்குள் எத்தகைய ஒரு வெறித்தனம் வந்துள்ளது என்றும், ஒருவரையொருவர் கொல்லும் அளவுக்கு, அதுவும் சில அற்பமான காரணங்களுக்காக அதாவது அவர்கள் மக்களாட்சிக் கோட்பாட்டாளர்களா அல்லது குடியரசுவாதிகளா அல்லது மெத்தடிஸ்ட் (Methodist) குழுவினரா அல்லது பிரெஸ்பைட்டேரியன் (Presbyterian) குழுவினரா என்பது போன்ற அற்பமான விஷயங்களுக்கெல்லாம் ஒருவரையொருவர் கொல்லும் அளவுக்கு ஜனங்கள் எவ்வளவுக்குப் பைத்தியக்காரர்களாகி போனார்கள் என்றும் காண்பதற்காக, எதிர்காலத்தில் முற்பிதாக்கள் யுத்தங்களின் சரித்திரங்களை மிகவும் ஆர்வத்துடன் பார்க்க விருப்பம் காட்டுவார்கள். நாம் தெளிந்த புத்தியுள்ள மனதின் ஆவியைப் பெற்றுக்கொள்ள மாத்திரமே துவங்கியுள்ளோம்; நமக்கு இன்னமும் தெளிந்த புத்தியுள்ள மனம் இல்லை; நாம் தெளிந்த புத்தியுள்ள மனதின் ஆவியை, அதன் பண்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம்; இது நமக்கு ஒவ்வொரு நாளும் அதிகமதிகமாய் வந்துக்கொண்டிருக்கின்றது. அதற்காகத் தேவனுக்கு நன்றி!