Q685:2
கேள்வி (1912)-2- ஏதேனும் காரணங்களைக்கொண்டு ஞாயிறு பள்ளியின் கோட்பாடானது நியாயப்படுத்தப்படலாம் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா?
பதில் – சகோதர சகோதரிகளே என் கருத்துப் பின்வருமாறு: ஞாயிறு பள்ளிக்கு எதிராகப் போராடும்படிக்குக் கர்த்தர் என்னிடம் கூறவில்லை. நான் சுவிசேஷத்தையே பிரசங்கிக்க வேண்டும். எனினும் ஞாயிறு பள்ளிகளானது கர்த்தர் இயேசுவினாலோ அல்லது அப்போஸ்தலர்களினாலோ ஏற்பாடுபண்ணப்படவில்லை என்று நான் சொல்லிடுவேன். முதலாம் ஞாயிறு பள்ளியானது இலண்டனில், தரித்திர கோலத்தில் காணப்படும் பிள்ளைகளுக்கென்றும், தெருக்களில் காணப்படும் அநாதைப் பிள்ளைகளுக்கென்றும் ஏற்பாடுபண்ணப்பட்டது. இந்தப் பள்ளிகள் தையல் தைப்பதற்கு, நெசவு பின்னல்பண்ணுவதற்கு, எழுதுவதற்கு மற்றும் இதுபோன்றவற்றைக் கற்றுக்கொடுத்தன. இப்படியானவைகளைக் கற்றுக்கொடுப்பதற்கு நாம் இன்று சிறப்பான பள்ளிக்கூடங்களைப் பெற்றிருக்கின்றோம். ஆரம்பத்தில் இந்தப் பள்ளிகளானது ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டன; காரணம் ஆசிரியர்களுக்கு மற்ற நாட்களில் நேரமில்லாமல் இருந்தது; ஆனால் இவ்வகையான பள்ளிகளை இன்று நாம் எல்லா நாட்களிலும் பெற்றிருக்கின்றோம் மற்றும் இவை மாநிலம் மற்றும் அரசாங்கத்தின் கீழ்ச்சிறப்பாய் இயக்கப்பட்டும் வருகின்றது. தங்கள் பிள்ளைகளுக்குப் போதித்திடும் விஷயத்தில், தேவன் பொறுப்பினைப் பெற்றோர்கள்மீதே வைத்திருக்கின்றார் என்று நாம் வேதாகமப் பாடங்களிலிருந்து சுட்டிக்காட்டியிருக்கின்றோம். இது விஷயத்தில் கர்த்தருக்கு ஏதேனும் சுட்டிக்காண்பித்திட நான் நோக்கம்கொண்டிருக்கவில்லை. நான் மறுபடியுமாகச் சொல்லுகின்றேன், எவ்விதமான ஞாயிறு பள்ளிகளும் கர்த்தரினாலோ அல்லது அவரது அப்போஸ்தலர்களினாலோ ஏற்படுத்தப்படவில்லை. அவைகளைப் பெற்றிருப்பதற்கு நலமான காரணங்களை நீங்கள் பெற்றிருக்கலாம், ஆனால் இது என் காரியமல்ல. ஒருவேளை ஞாயிறு பள்ளியைப் பெற்றிருப்பதற்கு நற்காரணங்கள் உண்டு என்று நீங்கள் எண்ணுவீர்களானால், சகோதரர் ரசலாகிய நானும் இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் எதையும் தேடுவதில்லை என்றே கூறுவேன். தேவன் நம்மிடம் பரந்த மனப்பான்மையுடன் நடந்துகொள்கின்றார் மற்றும் நாம் தேவ வசனத்தின் வழிகாட்டுதலுக்கு இசைவாக தெரிவு செய்வதற்குரிய சுதந்தரத்தைப் பெற்றிருக்கின்றோம். வேதவாக்கியங்களில் கொள்கைகள் காணப்படுகின்றன. அவற்றை உங்கள் விருப்பப்படி தளர்வாகவோ அல்லது நெருக்கமாகவோ பின்பற்றிடுங்கள். கர்த்தர் அந்தச் சுயாதீனத்தைக் கொடுத்திருக்கின்றார்; மேலும் கட்டுப்பாடுகள் இல்லாத காரியங்களில் கட்டுப்பாடுகள்பண்ண யாருக்கு உரிமை உண்டு?