Q236:3
கேள்வி (1910)-3- நாங்கள் சபையாராக ஆறாம் தொகுதியின் காரியங்களின்படி தேர்ந்தெடுத்தல் செய்ய முற்பட்டுள்ளோம். ஆனால் எங்கள் அனைவராலும் ஒன்றுபோல் புரிந்துகொள்ள முடியவில்லை. மூப்பர்களுக்குத் தகுதியுள்ள அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது போல் ஓரிடத்திலும், வேறொரு இடத்தில் சபையின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் மூப்பர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பது போலவும் காணப்படுகின்றது. எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது; மேலும் அதைக் குறித்து உங்களுக்கு நாங்கள் எழுதினோம். ஏன் பிரச்சனை எழும்பினது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதைத் தெரிவித்தீர்கள். சிலர் புரிந்துகொண்டவிதமே பிரச்சனையாகும்; அதென்னவெனில்: சபையில் மூப்பருக்கான சமநிலை தகுதியுடன் ஆறு பேர் காணப்படுகின்றார்கள் என்றால், அனைவரையும் நாம் தேர்ந்தெடுக்கலாம்; ஒருவேளை சபையாரின் எண்ணிக்கை பன்னிரண்டாக அல்லது இருபத்திநான்காகக் காணப்படுமாயின், சபையாரின் எண்ணிக்கையைப் பொறுத்து மாத்திரம் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சிலர் புரிந்திருக்கின்றனர். உதாரணத்திற்கு, ஒருவேளை சபையாரின் எண்ணிக்கை பத்து என்றால், நாம் ஒரு மூப்பரைத்;; தேர்ந்தெடுக்கலாம். ஒருவேளை சபையாரின் எண்ணிக்கை இருபத்தைந்து என்றால், நாம் இருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று சிலர் புரிந்திருக்கின்றனர்.
பதில் – மூப்பர்களைத் தேர்ந்தெடுக்கும் இவ்விஷயத்தைக் குறித்து என்ன சொல்லலாம்? மூப்பருக்கான தகுதிகளுடைய அனைவரும் தேர்ந்தெடுக்கப்படலாமா அல்லது சபையாரின் எண்ணிக்கையில் பத்துச் சதவிகிதமாகத் தேர்ந்தெடுக்கப்படலாமா? ஒருவேளை சபையாரின் எண்ணிக்கை ஐம்பது என்று வைத்துக்கொள்வோமானால், இவர்களில் பத்துச் சதவிகிதம் என்பது ஐந்து போராக இருக்கும். மேலும் ஒருவேளை சபையாரின் எண்ணிக்கை நூறு என்று வைத்துக்கொள்வோமானால், இவர்களில் பத்துச் சதவிகிதம் என்பது பத்துப் பேராக இருக்கும். என்னுடைய பதில் இதுவே: நான் புரிந்துகொண்ட வரையிலும், மூப்பருக்கான தகுதிகளை வெளிப்படுத்தும் அனைவரும் மூப்பர்களாகத் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆகவே ஒருவேளை ஆறு என்ற எண்ணிக்கையைக் கொண்டுள்ள சபையில், ஆறு பேரும் மூப்பர்களாகப் பணிபுரிய சமநிலையான தகுதியுடையவர்களாக இருப்பார்களானால், நான் அவர்கள் ஆறு பேரையும் தேர்ந்தெடுப்பேன். பின்னர் அவர்கள் பணிபுரிவதற்கு turns / சுழற்சி முறையில் செயல்படும்போது, வெளியே செல்வதற்கும், கூட்டங்கள் நடத்துவதற்கும் வாய்ப்புகள் உண்டாகும். தேவன் அவர்களை ஆசீர்வதிக்கட்டும் – அதிகமான மூப்பர்கள் இருக்கும் இடம் சிறப்பாய் இருக்கும்! ஆனால் ஆறு பேர் எண்ணிக்கையுள்ள சபையில், ஆறு பேரும் மூப்பருக்கான தகுதியோடு இருப்பார்கள் என்று சொல்ல முடியாது என்று நான் எண்ணுகின்றேன். ஆனால் ஒருவேளை ஆறு பேர் இருப்பார்களானால், அதிலும் ஆறு பேரும் ஊழியம் புரிய தகுதியுடையவர்களாய் இருப்பார்களானால், அவர்கள் ஆறு பேரும் ஊழியம் புரிவதையே நான் விரும்புகின்றேன். பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பெற்றுள்ள ஒவ்வொருவரும், போதிப்பதற்காக அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளனர் என்பது தேவனுடைய சித்தமாய் இருக்கின்றது என்று நான் புரிந்திருக்கின்றேன். நமது கர்த்தர் இயேசு குறித்த தீர்க்கதரிசனத்தின் வார்த்தைகளை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள் – கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என் மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார். இப்பொழுது யாரெல்லாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கின்றார்களோ, அவர்கள் போதிப்பதற்கெனப் பிதாவிடமிருந்து அபிஷேகம் பெற்றிருக்கின்றனர். இதற்காகவே அபிஷேகம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே போதகம் பண்ணுவதற்கென அவர் கொடுத்த அதிகாரமாகும். இதுவே போதிப்பதற்கான, அவரது ordination / ஏற்படுத்துதலாகும். ஒருவேளை அவனுக்கு நல்ல குரல் வளம் இருக்கின்றது என்றால், அதுவும் இன்னொரு நல்ல விஷயந்தான். ஒருவேளை அவனுக்கு நல்ல ஞாபகசக்தி இருக்கின்றது என்றால், அதுவும் இன்னொரு நல்ல விஷயந்தான். ஒருவேளை இவைகளுக்கு இசைவாக அவனிடத்தில் இன்னும் வேறே விஷயங்கள் இருக்குமாயின், இவைகள் அனைத்தும் அவனுக்கு உதவியாக இருக்கும். மேலும் அவனுடைய தாலந்திற்கேற்ப போதகம் பண்ண அவனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது சகோதரிகளின் விஷயத்தில் பார்க்கும்போது சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஒரு சகோதரி பொதுவில் போதிக்கக்கூடாது. ஆயினும் போதிப்பதற்கான மற்றப் பல்வேறு வழிகள் ஒரு சகோதரிக்கு உண்டு. நற்செய்தியை அறிவிப்பதற்கும், உதவிகரமாய் இருப்பதற்குமான அநேக வாய்ப்புகள் அவளுக்கு இருக்கின்றன. மேடைகளில் பிரசங்கம் பண்ணுவதற்கான வாய்ப்புடையவர்கள் மாத்திரமல்ல – நாம் அனைவருமே நம்முடைய அன்றாட ஜீவியத்தின் வாயிலாகப் பிரசங்கிக்க முடியும்; ஏனெனில் நாம் அவனைவரும் பிரசங்கிமார்களாய் இருக்கின்றோம் மற்றும் அனைவரும் பிரசங்கிக்கின்றார்கள் என நான் நம்புகின்றேன்.
“உங்களிடம் எத்தனை பிரசங்கிமார்கள் இருக்கின்றனர்? என்று ஒருமுறை ஒருவர் என்னிடம் கேட்டார். நானோ: “இருபதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் நம்மிடத்தில் இருக்கின்றார்கள் என்று கூறினேன். அவரோ: “ஆச்சரியமாயிருக்கே!” என்றார். நானோ: “சகோதரரே, நீர் தவறாய்ப் புரிந்துகொள்ள வேண்டாம். என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் பிரசங்கம் பண்ணும்படி அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளனர். சிலசமயம் நாங்கள் பொதுவில் பிரசங்கிப்போம் மற்றும் சிலசமயம் தனியே சந்தித்துப் பிரசங்கம் பண்ணுவோம். சிலசமயம் நாங்கள் ஒரு நபருக்கு மாத்திரமே பிரசங்கம் பண்ணுவோம். மேலும் சிலசமயம் இருறூறு பேரைக் கொண்ட சபையாருக்குப் பிரசங்கம் பண்ணுவோம். மேலும் சிலசமயம் பத்தாயிரம் பேரைக் கொண்ட சபையாருக்கும் பிரசங்கம் பண்ணுவோம் என்றேன்.