Q14:1
கேள்வி (1911)-1- முற்பிதாக்கள் ஆவிக்குரிய சுபாவத்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்பது உங்களது கருத்தாகக் காணப்படுகின்றதா? அப்படியானால் அவர்கள் திரள்கூட்டத்தாரைவிட உயர்வான சுபாவத்தை அடைவார்களா?
பதில் – இது விஷயத்தில் அன்பான நண்பர்களே எனக்கு எந்தத் தனிப்பட்ட கருத்துகளும் இல்லை. இதுகுறித்துக் கர்த்தர் எதுவும் எனக்குத் தெரியப்படுத்தவில்லை. கர்த்தர் தங்களிடம் அநேகம் காரியங்களை வெளிப்படுத்தி பேசிக்கொண்டிருக்கின்றார் என்று எண்ணி, எழுதப்பட்டவைகளைப் புறக்கணிக்கும் ஜனங்கள் எப்போதுமே காணப்படுகின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் அப்படிப்பட்டவர்களில் ஒருவனல்ல. நான் எழுதப்பட்டவைகளை மாத்திரமே அறிந்துள்ள சராசரியான மனுஷன். இத்தலைப்புத் தொடர்பாக நான் அறிந்துள்ளவைகள் அனைத்தையும் உங்களிடம் கூறிவிட்டேன்; அதாவது முற்பிதாக்கள் மேசியாவினுடைய ஆயிர வருஷ ஆளுகையின்போது, பூமி எங்கும் பிரபுக்களாகக் காணப்படத்தக்கதாக, மனித சுபாவத்தில் பூரணமடைந்த மனுஷர்களாக எழுந்துவருவார்கள் என்று தெரிவித்திருந்தேன்; மேலும் அக்காலத்தினுடைய முடிவின்போதுள்ள சில விஷயங்களைக்குறித்து நான் உங்களுக்கு ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருப்பவைகள் மறைமுகமாகச் சொல்லப்பட்டவைகளாய் இருக்கின்றன என்று என் மனதிற்குத் தோன்றுகின்றது. நிச்சயமாக எனக்குத் தெரியவில்லை, ஆனாலும் அப்போது தேவன் அவர்களுக்கு உயர்வான சுபாவம் ஒன்றை வெகுமதியாகக் கொடுப்பார் என்று மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கின்றதாக எண்ணுகின்றேன். இவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும். அது திரள்கூட்டத்தாரைக்காட்டிலும் ஏதேனும் உயர்ந்த சுபாவமா என்பது எனக்குத் தெரியாது; அப்படி இருக்காது என்றுதான் எண்ணுகின்றேன். எனக்குத் தெரியவில்லை. சிலசமயங்கள் “தெரியவில்லை” என்று சொல்ல முடிவது நல்லதுதான். நான் தவறே செய்யாதவன் என்றும், எனக்கு எல்லாமே தெரியும் என்றும் சில ஜனங்கள் என்னைக்குறித்துக் கூறிக்கொள்கின்றனர். ஆனால் இது உண்மையல்ல என்பதற்கு, நீங்கள் அனைவருமே சாட்சிகளாய் இருக்கின்றீர்கள்.