தேர்ந்தெடுத்தல் – தேர்ந்தெடுத்தலுக்கான சதவீதம்

அட்டவணை
Q8:1 விளம்பரக்காரியங்கள் - மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் நடக்கை
Q11:1 முற்பிதாக்கள் - இரண்டாம் மரணம் தொடர்பாக
Q11:2 முற்பிதாக்கள் எப்படி ஆவிக்குரிய ஜீவன் பெற்றுக்கொள்வார்கள்?
Q11:3 முற்பிதாக்களின் பரீட்சை
Q12:1 முற்பிதாக்கள் ஜீவனுக்கான பரீட்சையின்கீழ்க் காணப்பட்டார்களா?
Q13:1 ஆயிர வருஷ யுகத்தின்போது தேவனோடுள்ள முற்பிதாக்களின் உறவு
Q14:1 முற்பிதாக்கள் - ஆவிக்குரிய சுபாவம் தொடர்பாக
Q14:2 முற்பிதாக்கள் - ஆவிக்குரிய தளமா அல்லது இரண்டாம் மரணமா?
Q14:3 முற்பிதாக்கள் - உடன்படிக்கை உறவுமுறை தொடர்பாக
Q14:4 முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல்
Q15:1 முற்பிதாக்கள் பிராகாரத்தில் அடையாளம் காட்டப்படவில்லை
Q15:2 முற்பிதாக்கள் - நீதிமான்களுடைய ஆவி பூரணராக்கப்படுதல்
Q15:3 முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல்
Q16:1 முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல்
Q30:1 பின்வாங்கிப் போனவர்களை - எப்படியாக வரவேற்பது?
Q43:3 ஆயிர வருஷ காலத்தில் வேதாகமம் யாரால் பயன்படுத்தப்படும்?
Q50:1 குணலட்சணம் - கிரீடம் எப்போது நம்முடையதாகும்
Q54:1 பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 பிள்ளைகள் - கல்வி
Q58:1 பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்
Q59:1 அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q101:1 சபை - கீழ்ப்படிதல் விஷயத்தில் மனசாட்சித் தவிர்க்கப்படுதல் / அடக்கிக்கொள்ளப்படுதல்
Q102:1 சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
Q103:1 சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்
Q103:2 சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை
Q104:1 சபை - சபையில் எதிர்ப்பு
Q119:2 சபை – சபையில் கனம்பெறுவதற்கான தகுதியான அடிப்படை
Q125:1 சபை – சிலர் யாரையும் சார்ந்திராமல் செயல்படுதல்
Q129:6 தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q144:1 அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q148:1 அர்ப்பணம் - பிற்ப்பாடு வெளியே இருப்பவர்களிடத்தில் ஐக்கியமாயிருத்தல்
Q152:1 பரம அழைப்பின் முடிவிற்குப் பின் அர்ப்பணித்தல்
Q152:2 அர்ப்பணம் - பிற்பாடு ஆவிக்குரிய சுபாவம் பெறுவதற்குரிய வாய்ப்பு
Q152:3 அர்ப்பணம் - ஜெநிப்பிக்கப்படாதவர்களுக்குரிய வெகுமதி
Q161:1 மாநாடுகள் - நீங்கள் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமை மாநாடுகளுக்கு ஒப்புதலளிக்கின்றீர்களா?
Q162:1 திருத்தங்கள் - எப்படிச் செய்யப்பட வேண்டும்?
Q175:1 உடன்படிக்கைகள் - கலந்தாய்விற்குப் பின் கருத்துப்பிரிவினை
Q200:1 பெண் உதவிக்கார்களின் (Deaconess) - தேர்ந்தெடுத்தல்
Q209:1 மரணம் - ஆதாமின் நிமித்தமான மரணம் எப்போது நின்றுபோகும்?
Q213:1 இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட பின் ஆதாமின் நிமித்தமான மரணம்
Q226:3 பிரிவினைகள் - ஒழுங்கில்லாதவர்கள் மற்றும் குழம்பியிருப்பவர்கள்
Q232:3 மூப்பர்கள் - சபையில் அதிகாரம்
Q233:1 மூப்பர்கள் - சபையின் நலன்களுக்கடுத்தவைகளைக்குறித்துப் பேசுவதற்குக் கூட்டம் நடத்துதல்
Q234:1 மூப்பர் - (Presiding Elder ) தலைமை மூப்பரின் வேலை
Q234:2 மூப்பராகத் தேர்ந்தெடுக்கப்படாததால், ஒருவர் வேறு இடங்களுக்கும் தகுதியற்றவராகிடுவாரா?
Q235:1 மூப்பர்கள் - ஏன் மூப்பர்கள் கவனமாகத் தெரிந்தெடுக்கப்பட வேண்டும்?
Q235:2 தேர்ந்தெடுத்தல் - சபையில் பெண் போதகர்கள்
Q236:1 தேர்ந்தெடுத்தல் – கூட்டத்தலைவர் / chairman
Q236:2 தேர்ந்தெடுத்தல் - வேதவாக்கியங்களின் அடிப்படையிலான தகுதிகள்
Q236:3 தேர்ந்தெடுத்தல் - தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மூப்பர்களின் எண்ணிக்கை
Q237:1 தேர்ந்தெடுத்தல் - கர்த்தருடைய சித்தம் வெளிப்படுத்தப்படுகின்றது
Q237:2 தேர்ந்தெடுத்தல் - கூட்டத்தலைவியை நியமித்தல்
Q238:1 தேர்ந்தெடுத்தல் - அர்ப்பணம் பண்ணினவர்களும், நீதிமான்களாக்கப்பட்டவர்களும் வாக்குகள் (vote) அளிக்கலாமா?
Q238:2 தேர்ந்தெடுத்தல் - தொகுதிகள் (volumes) விநியோகம் பண்ணுபவர்கள் வாக்களித்தல் (vote)
Q238:3 தேர்ந்தெடுத்தல் - சபையைச் சந்திக்க வரும் சகோதர சகோதரிகள் வாக்கு (vote) அளித்தல்
Q239:1 தேர்ந்தெடுத்தல் - மூப்பர்களின் நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்படாத பட்சத்தில்
Q239:2 தேர்ந்தெடுத்தல் - முன்மொழிதல்
Q240:1 தேர்ந்தெடுத்தல் - சீட்டு மூலம் வாக்களித்தல்
Q240:2 தேர்ந்தெடுத்தல் - முன்மொழியப்பட்ட வரைக் குறித்துக் கருத்துப்பரிமாறுதல் (discuss)
Q242:1 தேர்ந்தெடுத்தல் - வாக்களிக்காதவர்கள் குறித்துப் பதிவு செய்தல்
Q242:2 தேர்ந்தெடுத்தல் - ஏழு பேரைத் தேர்ந்தெடுக்கும் அப்போஸ்தலர்களின் வழக்கத்தைப் பின்பற்றுதல்
Q242:3 தேர்ந்தெடுத்தல் - தகுதியுடையவர், ஆனால் ஞானஸ்நானம் பெறாதவர்
Q243:1 தேர்ந்தெடுத்தல் - எப்போது வேண்டுமானாலும் நடத்தப்படலாம் விசேஷமான நாளென்று ஒன்றில்லை
Q243:2 தேர்ந்தெடுத்தல் - நியமிக்காமல் ஊழியம் செய்தல்
Q244:1 தேர்ந்தெடுத்தல் - மீண்டும் வாக்குச் (vote) செலுத்துதல்
Q245:1 தேர்ந்தெடுத்தல் - (ஏகமன நியதி) ஜூரி விதி
Q245:2 தேர்ந்தெடுத்தல் - வர இயலாதிருக்கும் அங்கத்தினர்கள் கடிதம் மூலம் வாக்குப்பதிவு செய்தல்
Q246:1 தேர்ந்தெடுத்தல் - ஆங்கில மொழிக் கூடுகைகளுக்காக வெளிநாட்டுச் சகோதரர்கள்
Q246:2 தேர்ந்தெடுத்தல் - தகுதியற்றவர்கள் தொடர்பாக
Q247:1 தேர்ந்தெடுத்தல் - யார் வாக்களிக்கலாம்?
Q247:2 தேர்ந்தெடுத்தல் - மூப்பர்க்ள் மற்றும் உதவிக்காராக்ளைத் தேர்ந்தெடுத்தல்
Q248:1 தேர்ந்தெடுத்தல் - பதிலாள் மூலம் வாக்கு
Q249:1 தேர்ந்தெடுத்தல் - தேர்ந்தெடுத்தலுக்கான சதவீதம்
Q250:1 தேர்ந்தெடுத்தல் - முன்மொழிதல்களை நிறைவுசெய்தல்
Q253:1 கூட்டங்களில் கலந்துகொள்ளாத மூப்பர்களின் தேர்ந்தெடுத்தல்
Q253:2 தேர்ந்தெடுத்தல் - குழப்பத்திலிருக்கும்போது வாக்களிக்காமல் இருப்பது தவறா?
Q253:3 தேர்ந்தெடுத்தல் - சபைக்கான தகுதியான ஊழியர்கள்
Q254:1 தேர்ந்தெடுத்தல் - வாக்குறுதி (vote) தொடர்பாக
Q255:1 தேர்ந்தெடுத்தல் - மூப்பர்களையும், உதவிக்காரர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகள்
Q256:1 தேர்ந்தெடுத்தல் - மற்றச் சபையார் மத்தியிலிருந்து மூப்பர்களைத் தேர்ந்தெடுத்தல்
Q256:2 தேர்ந்தெடுத்தல் - சதவீதம் தொடர்பாக
Q260:1 எலிசா வகுப்பாரில் யார் காணப்படுவார்கள்?
Q286:3 பொன்னான பிரமாணம் - தவறான விளக்கம்
Q298:1 திரள் கூட்டத்தார் – உலகத்தின் பாவங்களை ரத்து செய்தல் தொடர்பாக
Q305:2 திரள்கூட்டத்தினர் பூரண அன்பிற்கான இலக்கினின்று விழுந்துபோகுதல்
Q372:2 இயேசு - ஜீவ-உரிமைகள்
Q373:1 இயேசு ஜீவ-உரிமைகளைக் கொடுத்தல்
Q379:2 யூதர்களைத் தேவன் எவ்வாறு கையாளுவார்
Q398:1 நீதிமானாக்கப்படுதல் - முற்பிதாக்கள் மற்றும் சுவிசேஷ யுகத்தில் நீதிமானாக்கப்பட்டவர்கள்
Q404:1 நீதிமானாக்கப்படுதல் மீதான இன்றைய பார்வை
Q429:1 இராஜ்யம் - இராஜ்யத்தின் சுதந்திரர்கள்
Q444:1 ஜீவ-உரிமைகளுக்கான தேவை
Q445:1 ஜீவ-உரிமைகளானது இயேசுவினால் சபைக்குச் சாற்றப்பட்டுள்ளதா?
Q446:1 ஆதாம் ஜீவ-உரிமைகள் எதையேனும் பெற்றிருக்கின்றாரா?
Q446:4 ஜீவ-உரிமைகள் -- ஜீவிப்பதற்கான உரிமை
Q449:1 அன்பு பூரண அன்பிற்கான இலக்கை அடைதல்
Q454:1 இலக்கு - திரள்கூட்டம் மற்றும் சிறுமந்தை
Q455:1 இலக்கினின்று விழுந்துபோய்த் திரள்கூட்டத்தினராகுதல்
Q455:2 இலக்கு அல்லது பந்தய சாலை - போராடுவதற்கு முன்னதாகவே முடித்தல்
Q459:1 விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q459:2 விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q469:2 கூட்டங்கள் - பயண ஊழியர்களின் கூட்டங்கள், விளம்பரங்கள் முதலானவைகள்
Q470:1 கூட்டங்கள் - சிறு எண்ணிக்கையுள்ள வகுப்புத் தொடர்பாக
Q471:1 கூட்டங்களுக்கான ஒழுங்கு
Q471:2 கூட்டங்கள் - சாட்சிக்கூட்டங்கள்
Q472:1 கூட்டங்கள் - சகோதரர்கள் இல்லாதபோது நடத்துவதற்கான வழிமுறை
Q472:2 கூட்டங்கள் - சந்திக்க வந்திருக்கும் சகோதரர் சபையாருக்குக் கூட்டத்தை நடத்துதல்
Q473:1 கூட்டங்கள் - மூப்பர்கள் அல்லாமல், மற்றவர்கள் கூட்டங்களை நடத்துதல்
Q473:2 சிறிய எண்ணிக்கையுள்ள சபையாருக்கு மிகவும் முக்கியமான கூட்டங்கள்
Q476:1 கூட்டங்கள் -Extension work / புதிய வகுப்புகள் உருவாக்கிடும் வேலைக்கான எண்ணிக்கை
Q477:1 கூட்டங்கள் - புரூக்கிளினிலுள்ள மூப்பர்கள் கூட்டங்களை நடத்துவதற்கென உதவிக்காரர்களை நியமித்தல் தொடர்பாக
Q477:2 உதவிக்காரர்கள் கூட்டங்களை நடத்திடலாமா?
Q478:1 கூட்டங்கள் - போதகர்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கப்படுதல்
Q478:2 கூட்டங்கள் - உதவிக்காரர்கள் கூட்டங்களை நடத்திடலாமா?
Q479:1 கூட்டங்கள் - மூப்பர்கள் விசாரணை சங்கத்தில் அமர்தல்
Q480:1 கூட்டங்கள் - மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் கடமைகள்
Q480:2 கூட்டங்களுக்கான ஏற்பாடுகள்
Q482:1 கூட்டங்கள் - உதவிக்காரர்கள் வாக்களித்தல் (voting)
Q482:2 கூட்டங்கள் - துணைவிதிகளைப் பயன்படுத்துதல்
Q483:1 கூட்டங்களின் வகை
Q483:2 கூட்டங்களின் எண்ணிக்கை
Q486:1 நினைவுகூருதல் இராப்போஜனம் - ஏன் நாம் பங்கெடுக்கின்றோம்
Q486:2 நினைவுகூருதல் இராப்போஜனம் - (Wine) புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்பத்துதல்
Q486:3 பஸ்கா மற்றும் பாவநிவாரண நாள் - எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது?
Q497:2 பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q514:1 உண்மையான ஏற்படுத்துதல் (ordination)
Q515:1 ஏற்படுத்துதலுக்கான (ordination) அதிகாரம்
Q517:1 ஏற்படுத்துதல் (ordination) - கைகளை வைத்தல்
Q518:2 ஏற்படுத்துதல் (ordination) - சொசைட்டியின் கேள்விப்பட்டியலுக்கான நோக்கம்
Q519:1 தற்காலத்தில் ஊழியர்களின் ஏற்படுத்துதல் (ordination)
Q520:1 ஏற்படுத்துதல் (ordination) - V D M தலைப்பு
Q520:2 ஏற்படுத்துதலை (ordination) - சொசைட்டி நீக்குதல்
Q520:3 ஏற்படுத்துதல் (ordination) - பயண ஊழியரின் ஏறபடுத்துதலை நீக்குதல்
Q520:4 ஏற்படுத்துதல் (ordination) - Watch Tower Bible and Tract Society -இன் ஊழியர்கள்
Q521:1 ஏற்படுத்துதல் (ordination) - மனிதர்களால் அல்ல
Q521:2 மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் ஏற்படுத்துதல் (ordination)
Q524:2 பஸ்கா - எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது?
Q524:3 பஸ்கா - முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்பத்துகின்றனர்?
Q524:4 பஸ்கா - பஸ்காவுக்கும், பாவநிவாரண நாளுக்கும் தொடர்பு
Q525:2 மேய்ப்பர் - நீங்கள் சபையை வந்து சந்திக்க இயலாதிருக்கும் நிலையிலிருக்க, உங்களைத் தேர்ந்தெடுத்தல்
Q525:3 Pastoral work / மேய்ப்பரது வேலை - மூப்பர்கள் இதைக் கண்காணிப்பவர்களல்ல
Q526:1 Pastoral work / மேய்ப்பரது வேலையில் - மூப்பர்கள் மற்றும் சகோதரிகளின் ஒத்துழைப்பு
Q527:1 Pastoral work / மேய்ப்பரது வேலை - சகோதரர்களுக்குரியது அல்ல
Q530:2 ஒரு பணம் குறிப்பது என்ன?
Q532:1 ஆயிர வருட யுகத்தில் - பூரணம்
Q534:3 பயண ஊழியர்கள் - உள்ளூர் பயண ஊழியர்களின் வேலை
Q535:2 பயண ஊழியர்களை உபசரித்தில் முதலானவைகளுக்கான சரியான வழிமுறை
Q538:1 ஜெபத்தில் சகோதரிகள் வழிநடத்துதல்
Q538:3 ஜெபம் - சாட்சிக்கூட்டம்
Q541:1 ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q556:1 உயிரூட்டப்படுதல் (Quickening) மற்றும் இலக்கு
Q568:2 மீட்கும்பொருள் - எங்கே provided/ஏற்பாடு பண்ணப்பட்டது ?
Q568:4 மீட்கும்பொருள் கல்வாரியில் paid/செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?
Q569:1 மீட்கும்பொருள் - கடந்த காலத்தில் தற்காலத்தில் - எதிர்க்காலத்தில்
Q569:2 மீட்கும்பொருள் இயேசுவினால் எப்போது (dispose) பகிர்ந்தளிக்கப்படும்?
Q574:2 மீட்கும்பொருள் - ஜீவ-உரிமைகள் என்பதன் அர்த்தம்
Q584:3 திரள்கூட்டத்தார் மற்றும் முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல் வரிசை
Q587:1 உயிர்த்தெழுதல்
Q632:1 போக்காட்டிற்குப் பாவநிவாரண பலியில் எப்பங்குமில்லை
Q648:2 துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q660:1 ஆறாம் தொகுதியில் சகோதரிகளுக்கான கட்டுப்பாடுகள்
Q660:2 சகோதரிகள் ஜெபக்கூட்டங்களில் பங்கெடுத்தல்
Q661:1 சகோதரிகள் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளாமல் போதித்தல்
Q661:2 சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q662:1 சகோதரிகள் வேதாகம ஆராய்ச்சியில் பங்கெடுத்தல்
Q662:2 சகோதரிகள் ஜெபத்திற்கு நேராய் நடத்துதல்
Q663:1 சகோதரிகள் கேட்டுக்கொள்ளப்படாமலேயே கேள்விகளுக்குப் பதில் அளித்தல்
Q673:2 உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்
Q685:1 ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q704:1 போதித்தல் - ஸ்திரீகள் அமைதியாய் இருத்தல்
Q704:2 போதித்தல் -ஆரோக்கியமற்றப் போதனைகளைச் சகித்துகொண்டிருத்தல்
Q709:2 சாட்சியம் - குறைவான சத்தமுடைய சகோதரர்கள் சாட்சியைக் கூறலாமா?
Q710:1 சாட்சி பகர்தல் - புத்திமதி கூறுவதற்கல்ல
Q803:2; Q825:2 திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்

Q249:1

Q249:1 தேர்ந்தெடுத்தல் - தேர்ந்தெடுத்தலுக்கான சதவீதம்

ELECTION--Percentage to Elect

கேள்வி (1913)-1- சபையின் தேர்ந்தெடுத்தல் விஷயத்தில், தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றதான வாக்குச் சதவீதத்தில், சபையாரால் பின்பற்றப்படும் அந்த விதிகளானது, உதவிக்காரராக முன்மொழியப்பட்டிருக்கின்ற சகோதரனுக்கான வாக்குகள் விஷயத்திலும் பொருந்துமென நாம் புரிந்துகொள்ள வேண்டுமா?

பதில் – நிச்சயமாக. சபையின் காரியங்களை நிர்வகிப்பது தொடர்புடையதான வேதாகம ஏற்பாடானது, அனைத்துப் பொறுப்பினையும் சபையார் மீதே வைக்கின்றது. நான் பொதுவான அர்த்தத்திலுள்ள சபையாரைக் குறிப்பிடவில்லை, மாறாக சபையை, கிறிஸ்துவின் சரீரமாகிய கூட்டத்தாரை, அதாவது அர்ப்பணிக்கப்பட்டவர்களைக் குறிப்பிடுகின்றேன். ஒவ்வொரு காரியத்தினையும் நிர்வகிக்கும் திட்டவட்டமான விதிகளைக் கர்த்தர் கொடுக்காததால், கர்த்தருடைய திருவசனத்தைக் கொண்டும் மற்றும் வேதவாக்கியங்களிலுள்ள மாதிரிகள் மற்றும் உதாரணங்களையும் கொண்டும், மகா பரிசுத்தமான விசுவாசத்தில் கட்டியெழுப்பப்படும்படி நாடிடுவதற்கான பொறுப்பு ஒட்டுமொத்த சபையின் மீது விடப்பட்டுள்ளது. ஒருவேளை கர்த்தர் காரியத்தினை மிக எளிமையாயும் மற்றும் தெளிவாயும், அவரது ஜனங்களுடைய கைகளில் விட்டிருப்பாரானால், அதை ஏதோ ஒரு தனிப்பட்ட நபரின் அல்லது குருமார் வகுப்பாரின் கைகளுக்குத் திசைமாற்றிட நீங்களோ அல்லது நானோ முற்படுவது என்பது முற்றிலும் தவறான காரியமாய் இருக்கும். இதற்கு வேதாகமத்தில் எந்த அதிகாரமும் இல்லை. நிர்வாகங்கள் தவறிடுவதுபோல, ஜனங்களும் தவறிடுவது சாதாரண காரியமாய் இருக்கின்றது. உதாரணத்திற்குச், சில தீவுகளில் காணப்படும் ஜனங்கள் தாங்களாகவே நிர்வகித்துக்கொள்வதற்குப் பதிலாக, சில நிர்வாகங்களானது தங்களால் அத்தீவுகளை நன்கு நிர்வகிக்க முடியும் என்று எண்ணுகின்றனர். ஆகையால் ஒருவேளை ஜனங்கள், அதற்கு அடிபணிந்திடுவார்களானால், குருமார் என்று அழைக்கப்படுகின்றதான ஒரு குறிப்பிட்ட வகுப்பார், தங்களுக்கென அதிகாரத்தினை தகாத விதத்தில் உரிமைகொண்டாடி, சட்டங்களையும், விதிகளையும் இயற்றிவிடுகின்றனர். ஆனால் இதற்கான எளிமையான காரணம் – சபையார் தங்கள் கைகளில் கர்த்தர் அதிகாரத்தைக் கொடுத்துள்ளார் என்பதையும், ஒருபோதும் எந்த ஒரு குருமார் வகுப்பாரை அவர் அங்கீகரித்ததில்லை என்பதையும் அறியாமல் இருப்பதேயாகும். கர்த்தர்தாமே போதகராய் இருப்பார் – நீங்கள் அனைவரும் சகோதரராய் இருக்கின்றீர்கள். கர்த்தருடைய ஜனங்கள் அடங்கின ஒரு கூட்டத்தாரெனச் சபையாரால் அடையாளம் கண்டுகொள்ளப்படும் வேற்றுமை தவிர, மற்றபடி சகோதரர்கள் மத்தியில் எந்த வேற்றுமையும் காணப்படக்கூடாது மற்றும் சில குறிப்பிட்ட நபர்களை மூப்பர்களாகத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்களெனில், பொறுப்புச் சபையாரிடத்திலேயே இருக்கும். சபையாரிலுள்ள ஒவ்வொரு தனிப்பட்ட நபரும், மிகுந்த பகுத்துணர்தலையும் மற்றும் விவேகத்தினையும் பயன்படுத்திட வேண்டும் மற்றும் இவ்விஷயத்தில் தாங்கள் கர்த்தருக்காக வாக்களிப்பதாகவும், செயல்படுவதாகவும் நினைவில்கொள்ள வேண்டும். சபையார் தங்களது வழிநடத்துபவர்கள் முதலானவைகள் தொடர்பாக எடுக்கும் தீர்மானம், அக்காரியத்தில் இறுதி தீர்மானமாக இருக்கும் என்பதினால் சபையில் ஒழுங்குமுறைக்குரிய சரியான முறைமை தொடர்பாக, வேதவாக்கியங்களினால் முன்வைக்கப்படுபவைகளை ஆறாம் தொகுதியில் – பிரமாணமாக இல்லாமல், யோசனைகளாகச் சுட்டிக்காட்டிடுவதற்கு நாங்கள் முயற்சித்துள்ளோம்; சதவீதம் குறித்துச் சிலவற்றை நாங்கள் யோசனையாகக் கூறியிருந்தோம்; சதவீதங்கள் குறித்து எதுவும் வேதவாக்கியங்களில் கூறப்படவில்லை எனினும் உலக ஜனங்களுடைய ஒரு சாதாரணமான கூட்டத்தில், உதாரணத்திற்கு ஒரு விஷயத்திற்கென வாக்கெடுக்கப்படுகிறதெனில், ஓர் எண்ணிக்கையில் பெரும்பான்மையாய் இருப்பவர்கள், காரியத்தைத் தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள்; 100 பேர்க் கொண்ட சபையார் என்று வைத்துக்கொள்ளுங்கள், இதில் 51-பேர்கள் தீர்மானிப்பவர்களாய் இருப்பார்களானால், மற்ற 49-பேரும் பிரதிநிதி என்று யாரும் இல்லாமல் விடப்படுவார்கள்; இது கர்த்தருடைய ஆவியல்ல என்பது நம்முடைய கருத்தாய் இருக்கின்றது. முழுச்சபையுமே நலனுக்கடுத்த விருப்பங்களில் ஏகத்துவத்தினை / ஒற்றுமையினை உணர்வதே கர்த்தருடைய ஆவியாய் இருக்கின்றது. ஆனால் ஒருவேளை பெரும்பான்மையினராய்க் காணப்படும் 51-பேரும் பின்வருமாறு: “ஆம், இது எங்கள் விருப்பம்; இந்தச் சகோதரனை மூப்பராய்ப் பார்த்திடுவதற்கு நாங்கள் விரும்புகின்றோம்; இவர் நன்கு தகுதியுடையவராகக் காணப்படுகின்றார் என்று நாங்கள் எண்ணுகின்றோம்; மேலும் எங்கள் சகோதரரிலுள்ள 49-பேரின் விருப்பங்கள் என்னவாக இருப்பினும், அதற்கு நாங்கள் கவனம் கொடுக்கமாட்டோம் என்று கூறுவார்களானால்,இது அன்பின் ஆவியாய்க் காணப்படாது. 51-பேருக்கு மாத்திரமல்லாமல், சிறுபான்மையினராகக் காணப்படும் 49-பேருக்கும் பொருத்தமான பிரயாசம் எடுக்கப்பட வேண்டுமென்று நாங்கள் யோசனை கூறுகின்றோம்; ஒவ்வொருவனும் தனக்கு விருப்பமானதை மாத்திரம் செய்கிறவனாய் இராமல், மாறாக ஒருவர் இன்னொருவரின் உணர்வுகளை மதிக்கவும், ஒருவரையொருவர் மதிக்கவும், ஒருவரிலொருவர் அக்கறை கொள்ளவும் முயற்சித்திட வேண்டும். ஒருவேளை 100-பேர் எண்ணிக்கையுள்ள சபையாரில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையானது, உதவிக்காரர்களின் ஸ்தானத்திற்கு ஒருவரைத் தகுதியாக்கிடும் என்று தீர்மானிக்கப்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். சகோதரர்கள் A, B மற்றும் C என்பவர்கள், சகோதரர்கள் D, E மற்றும் F – ஐ விட நன்கு தகுதியானவர் என்ற மிகவும் தெளிவான கருத்தினை, சபையாரில் ஒருவனாகிய நான் கொண்டிருக்கலாம் மற்றும் அந்த மூவருக்கும் வாக்கு அளிப்பதற்கு எனக்கு உரிமையும் காணப்படுகின்றது; பின்னர் ஒருவேளை யாரோ ஒருவர் சகோதரர்கள் D, E மற்றும் F – ஐ குறித்து நல்லெண்ணம் கொண்டுள்ளாரெனில், நானோ: ஆம்! அந்தச் சகோதரன் இந்த மற்றச் சகோதரர்களை விரும்புகின்றார்; இச்சகோதரர்களுக்கு எதிராக உண்மையில் ஏதாகிலும் எனக்குத் தெரியுமா? என்று எனக்குள்ளாகக் கேட்டிடுவேன். ஒருவேளை இவர்களுக்கு எதிராய் நான் எதையும் அறியேனாகில் மற்றும் மற்றச் சகோதரரில் அநேகர் இச்சகோதரர்களை விரும்புகிற காரியமானது, மற்றச் சகோதரர்கள் இச்சகோதரர்களைப் பெற்றுக்கொள்வதை நான் காண விரும்பிடுவதற்கு நல்ல காரணமாய் அமைந்திடும். ஒருவேளை நான் மூப்பனாகப் போகிறேன் என்றால், mere majority / வெறும் பெரும்பான்மையினர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராக இருப்பதைக் காட்டிலும், முழுச்சபையாரினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராக இருப்பதே நலமாயிருக்கும். சபையார் யாவரும் தங்கள் மனங்களில் திருப்தியும், மனநிறைவும், மனரம்மியமும் அடைந்திட நான் விரும்பிடுவேன். நான் என்னை அவர்களுடைய இடங்களில் வைத்துப் பார்த்திட விரும்புகின்றேன். எனக்குச் சிறுபான்மையினர் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகின்றேனோ, அதையே நானும் சிறுபான்மையினருக்குச் செய்திட வேண்டுமெனப் பொன்னான பிரமாணமானது எதிர்ப்பார்க்கின்றது. ஒருவேளை நான் சிறுபான்மையினரில் ஒருவராகக் காணப்பட்டு, அவர்கள் பெரும்பான்மையானவர்களாகக் காணப்பட்டிருந்திருப்பார்களானால், என்னைக் குறித்து அவர்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளும்படிக்கு நான் எவ்வளவாய் விரும்பிடுவேன்! நான் கவனிக்கப்படும்படிக்கும்கூட விரும்பிடுவேன். அப்படியானால் நாம் மற்றவர்களைப்போன்று சமமாய்ப் பெருந்தன்மையுடன் காணப்பட வேண்டும். இது உண்மையில் முக்கியமாயுள்ள ஏதாகிலும் காரியத்தைக் குறித்து நாம் கவனம் குறைவாகவோ அல்லது அக்கறையற்றோ காணப்பட வேண்டும் என்று குறிப்பதாய் இராது. ஒருவேளை ஒருவர் மோசமான மனுஷனாகவோ அல்லது அர்ப்பணிக்கப்படாத மனுஷனாகவோ அல்லது ஏதேனும் விதத்தில் மூப்பனாகுவதற்கு முற்றிலுமாய்த் தகுதியற்றவராய் இருப்பாரெனில், அப்பொழுது நான் முகமுகமாய் எதிர்த்துநின்று, குறிப்பிட்ட காரணங்களினால் என்னால் இந்தச் சகோதரனுக்கு வாக்களிக்க முடியாது என்று கூறிடுவேன். காரணங்களைத் தெரிவிப்பதை என்னால் முடிந்தமட்டும் நான் தவிர்த்துக்கொள்வேன்; ஆனால் ஒருவேளை காரணங்களைத் தெரிவிப்பது அவசியமாகுமானால், அதை என்னால் முடிந்த மட்டிலுமான அன்பான விதத்தில் செய்திடுவேன். நான் எந்தச் சகோதரனைக் குறித்துமான அன்பற்ற வார்த்தையைக் கூறிடவோ அல்லது தீமை பேசவோ மாட்டேன் என்று சகோதர சகோதரிகள் அறிந்திருக்குமளவுக்கும் மற்றும் முழுமையான அவசியம் காரணமாகத்தான் ஒரு சகோதரனை எதிர்க்கும் கடமையினை – அதாவது தேவனுக்கான மற்றும் சபையிடத்திலுமுள்ள இப்படிப்பட்ட கடமையினை நான் செய்கின்றேன் என்று சகோதர சகோதரிகள் அறிந்திருக்குமளவுக்கும், அனைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நிலைமையினை நான் அடைந்திட முற்காலங்களில் பிரயாசம் எடுத்திடுவேன். நாம் ஒருவரிலொருவர் அந்த நம்பிக்கையினை அடைவோமானால், நாம் சொல்லுகிற எதற்கும், அனைத்து மதிப்பும், முக்கியத்துவமும் இருக்கும்.