Q480:1
கேள்வி (1916)-1- அதிகம் எண்ணிக்கையுள்ள சபையில், மூப்பர்கள் ஊழியத்தில் முழுமையாய் ஈடுபட்டிருக்க மற்றும் உதவிக்காரர்கள் அனைவரும் கூடத் தங்கள் வாய்ப்புகளுக்கு ஏற்ப முழுமையாய் ஊழியஞ்செய்துகொண்டிருக்க, (அதே சபையில்) வழிநடத்துகிறவர்கள் இல்லாமல் ஒரு கூட்டமானது இன்னமும் காணப்படுகிறதென்றால், மூன்று மூப்பர்கள் அடங்கின அச்சபையின் வழிநடத்துபவர்களின் குழுவானது / committee, சத்தியத்தில் தெளிவானவராக, வழிநடத்துபவராகச் செயல்படுவதற்குத் தகுதியுடையவராக, குழுவின் அங்கத்தினரால் அறியப்பட்டிருக்கும் ஒரு சகோதரனை, சபையார் மத்தியிலிருந்து, உதவியாளராக (assistant) நியமிப்பது சரியாக இருக்குமா?
பதில் – இம்மாதிரியான சூழ்நிலையின் கீழ் இப்படிச் செய்வது சரியானதாகக் காணப்படும் என்று நான் எண்ண வேண்டியவனாய் இருக்கின்றேன். கூட்டங்களை வழிநடத்துவதற்குத் தகுதியுடைய மூப்பர்களின் எண்ணிக்கையைச் சபையார் முடிவு பண்ணுவது சரியான காரியமாய் இருக்கும். எனினும் போதுமானவர்கள் இல்லையெனில் குழுவானது, அச்சூழ்நிலைக்குத் தகுதியானவர் என்று கருதும் யாரையேனும் தெரிந்தெடுக்க வேண்டியிருக்கும். எனினும் அவசரமான சூழ்நிலைகளைத் தவிர, மற்றபடி சபையார் நிர்ணயித்த எண்ணிக்கையை அவர்கள் தாண்டிவிடக்கூடாது. சாதாரணமான சூழ்நிலைகளில், நியமிக்கப்பட்ட மூப்பர்களே கூட்டங்கள் அனைத்தையும் தலைமை தாங்கி நடத்திட வேண்டும்; ஆனால் சில சந்தர்ப்பங்களில் தகுதியுடைய உதவிக்காரர் ஒருவர் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அவசரமான சந்தர்ப்பத்தின்போது, வழிநடத்துவதற்கு நியமிக்கப்படலாம். ஆனால் தகுதிவாய்ந்த மூப்பர்களின் எண்ணிக்கையைச் சபையாரே நியமித்திட வேண்டும் என்பதும், சாதாரணமான சந்தர்ப்பங்களில் மூப்பர்களே கூடுகைகளை ஒழுங்குப்படுத்திட வேண்டும் என்பதும் நன்கு மனதில் நினைவுகொள்ளப்பட வேண்டும். அவசரமான சந்தர்ப்பங்களே ஒழிய மற்றப்படி, மூப்பர்களே செய்திட வேண்டும்.