Q568:4
கேள்வி (1916-Z5879)-4- மீட்கும்பொருளானது கல்வாரியில் paid/செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?
பதில் – இதைக்குறித்து நாம் ஏற்கெனவே விவரித்திருக்கின்றோம்; அதாவது மீட்கும்பொருளானது கல்வாரியில் (laid down) கொடுக்கப்பட்டது மற்றும் பிற்பாடு நீதியின் கரங்களில் வைக்கப்பட்டுள்ளது; ஆனால் ஒப்பந்தத்தை முடிக்கும் விதத்தில் அது இன்னமும் paid over/செலுத்தித் தீர்க்கப்படவில்லை அது எதிர்க்காலத்திற்கென்று வைக்கப்பட்டுள்ளது. “பிதாவே உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்று இயேசு கூறினபோது, மீட்கும்பொருளானது சிலுவையில் (laid down) கொடுத்து வைக்கப்பட்டது. இப்படியாக இயேசு மீட்கும்பொருள் விலைக்கிரயத்தினைப் பயன்படுத்திடாமல், அதைச் சேமிப்பாக/வைப்பாக (deposit) வைத்துவிட்டார்.