Q244:1
கேள்வி (அவையோரிடமிருந்து எழும்பினது) (1911)-1- ஒரு சகோதரன் எழுபத்தைந்து சதவிகிதமான வாக்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று வாக்குகள் (vote) குறைவாகப் பெற்றிருப்பாரானால், அவர் தேர்ந்தெடுக்கப்படத்தக்கதாகப் போதுமான அளவு வாக்குகள் பெற்றுக்கொள்ளும்படிக்கு, இரண்டாம் விசை அவர் சார்பாக வாக்கெடுப்பது ஞானமான காரியமாக இருக்குமா?
பதில் – இதைச் சபையார் ஏகமனதுடன் செய்தால் கூட இதற்கு நாம் மறுப்புத் தெரிவிப்பதில்லை. காரியம் நடந்தால்போதும் என்று நாம் எண்ணாமல், சபையாரின் கருத்தைப் பெற்றுக்கொள்வதும், சபையாருடைய விருப்பத்தைப் பூர்த்திச் செய்ய வேண்டும் என்பதும்தான் நமக்கு வேண்டிய காரியமாகும். பிணக்கு உண்டு பண்ணுவதற்கு மாத்திரமே ஏதுவான எவ்விஷயமும் கூடுமானமட்டும் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவேளை ஒரு சபையார் தங்களுடைய தேர்ந்தெடுத்தலில் எழுபத்தைந்து சதவிகிதமான விதியை நியமித்தார்களானால், இதே சதவிகிதமான விதிதான் அடுத்த தேர்ந்தெடுத்தலுக்கும் காணப்பட வேண்டுமென்ற கட்டாயமில்லை. மாறாக, அவ்விதி அந்த ஒருமுறைக்கு மாத்திரமே கட்டளையாக இருக்கும். ஒருவேளை அடுத்த தேர்தலிலும் சபையார் அதே எழுபத்தைந்து சதவிகிதம் விதியைத் தெரிந்துகொண்டார்களானால், இன்னுமாக ஒருவர் இந்தச் சதவிகிதமான விதிக்குக் கொஞ்சம் கிட்ட எட்டியும் முழுமைக்கு வரவில்லையெனில், அவர் அடைந்த வாக்குச் சதவிகிதத்தைக் கருத்தில் எடுத்துக்கொண்டு மீண்டும் வாக்கெடுங்கள். மேலும் பின்னர் நியமிக்கப்பட்ட சதவிகிதம் விதி அளவைக் காட்டிலும் அவருக்கு வாக்குகள் அதிகம் கிடைத்திருக்குமாயின், சபையாரின் விருப்பத்திற்கு ஏற்ப சபையார் காரியங்களை முடிவு செய்ய முழு அதிகாரம் உடையவர்களாய் இருக்கின்றார்கள்.