Q673:2
கேள்வி (1910)-2- ஒருவேளை 5000 டாலர் மதிப்புள்ள சொத்து என்னிடம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள். என்னுடைய தொழிலில் நான் தொடர்ந்து நிலைத்திருப்பதற்காக, அந்தச் சொத்தை விற்று, வாடகைக்குப் பணம்கொடுக்கும் அவசியமிருக்க, ஞானமுள்ள உக்கிராணக்காரனென நான் இந்தப் பணத்தை அறுவடை வேலைக்கென்று கொடுத்துவிட கர்த்தர் எதிர்ப்பார்ப்பாரா?
பதில் – இப்பொழுதும் இக்கேள்வியை எழுதியுள்ள அன்பு சகோதரனே, இதைத் தீர்மானிப்பதற்குரிய உரிமையுடையவர் ஆவார். அவர் என்ன செய்ய வேண்டும் என்று நான் தீர்மானித்திட முடியாது; ஏனெனில் அவருடைய சூழ்நிலைமைகள் அனைத்தும் எனக்குத் தெரியாது; ஒருவேளை அவர் சூழ்நிலைமைகள் அனைத்தையும் நான் அறிந்திருந்தாலும்கூட, அவர் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்வது எனக்கடுத்த காரியமல்ல. எதைச் செய்தாலும், அதை அவராகவே மனமுவந்து செய்திட வேண்டும் மற்றும் அவரது பகுத்தறிவே பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு மனுஷன் அவன் மனைவியின், பிள்ளைகளின் மற்றும் அவனுடன் நெருக்கமான உறவுகொண்டிருந்து, ஆதரவிற்காய் அவனைச் சார்ந்து இருக்கும் மற்றவர்களின் தேவைகளைச் சந்திக்க வேண்டும் என்றும், அவனோ அல்லது அவனைச் சார்ந்திருப்பவர்களோ மற்றவர்களின் உதவியை நாடும் அபாயத்திற்குள்ளாகாதபடிக்குத் தன் சொத்தினை அகற்றிப்போடக்கூடாது என்றுமுள்ள என் கருத்தினை நான் ஏற்கெனவே தெரிவித்திருக்கின்றேன். இதைவிட இக்காரியத்தை இன்னும் தெளிவாய் எப்படிக் கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் பிரச்சனை இல்லையெனில் சகோதரன் தன் சொத்தை விற்பதும், ஒரு கடையை வாடகைக்கு எடுப்பதும் ஞானமான காரியமாய் இருக்கலாம். ஒரு சொத்தை சொந்தமாகப் பெற்றிருப்பது என்பது எப்போதும் அநுகூலமான காரியமாய் இராது. சிலசமயம் வாடகைக் கடையைப் பெற்றிருப்பதும் நலமாயிருக்கும். இதை அவர்தான் தீர்மானித்திட வேண்டும்.