Q524:3
கேள்வி. (1912)- 3 – ஆட்டுக்குட்டியினுடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் நிமித்தமாக கடந்துபோகப்பட்டவர்களாகிய முதற்பேறானவர்கள் தலையையும், சரீரமாகிய சபையையுமா (அ) சபையை மாத்திரம் அடையாளப்படுத்துகின்றனரா?
பதில். ஏன்! சபை மாத்திரமே; நமது கர்த்தர் இயேசுவையல்ல. அவர் எதினாலும் கடந்துபோகப்படவில்லை. அவர் மரித்தார். அவரே ஆட்டுக்குட்டியாவார். அவரது இரத்தமே, நம்மை “முதற்பேறானவர்களின் சபையாக்கிற்று.” அவரை நீதிமானாக்குகிற ஆட்டுக்குட்டி யாது? அவருக்கு ஆட்டுக்குட்டி தேவையில்லை. அவர் தம்மாலேயே கடந்துபோனார். மரணம் வரையிலுமான தம்முடைய கீழ்ப்படிதலினாலே அவர் கடந்துபோனார். இது நமக்காகக் கொடுக்கப்பட்டதான அவரது இரத்தத்தின் மூலமாக முதற்பேறானவர்களான சபையென நம்மைக் கடந்துபோகச் செய்ய அவருக்கு ஏதுவாக்கிற்று.