Q16:1
கேள்வி (1915)-1- பாவநிவிர்த்திக்கான ஏற்பாடானது, சபையினுடைய உயிர்த்தெழுதல் நிகழ்வதற்கு முன்பாக, முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல் நிகழும்படி அனுமதிக்குமா?
பதில் – சபை நிறைவடைவதுவரையிலும் முற்பிதாக்கள் பூரணராக முடியாது என்று நான் எண்ணுகின்றேன். கிறிஸ்துவின் சரீரமானது, முற்பிதாக்களில் யாரேனும் விழித்தெழுப்பப்படுவதற்கு முன்னதாகத் திரைக்கப்பால் நிச்சயமாய்ப் போயாக வேண்டும். இது தொடர்பான அப்போஸ்தலனுடைய வார்த்தைகள் மிகவும் அழுத்தம் திருத்தமாக உள்ளது: “அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்” (எபிரெயர் 11:40); இது சபை பூரணப்படுவது முதலாவது நிகழும் என்று சுட்டிக்காண்பிக்கின்றது. இதே கருத்தானது வேறு இடங்களிலும் காணப்படுகின்றது. கிறிஸ்துவின் சரீரமானது முதலாம் அல்லது பிரதான உயிர்த்தெழுதலை அடையப்போவதாகப் பேசப்பட்டுள்ளது (1 கொரிந்தியர் 15:23; வெளிப்படுத்தல் 20:4-6); ஸ்தானத்தில் மாத்திரம் முதலாவதாக இராமல், கால வரிசையிலும் இவர்கள் முதலாவது வருபவர்கள் ஆவார்கள் – “கிறிஸ்து முதற்பலன்கள்” ஆவார்கள். இப்பொழுது இந்தக் கிறிஸ்துவின் புண்ணியத்தினைத் தரிப்பிக்கப்பெற்றவர்கள் அனைவரும் (சபையின் இரு வகுப்பாரும்), தங்களது ஓட்டத்தை நிறைவுசெய்வதற்கு முன்னாக, மற்ற யாருக்கேனும் செயல்படுத்தப்படத்தக்கதாக அப்புண்ணியமானது விடுவிக்கப்படமாட்டாது என்று நாங்கள் புரிந்திருக்கின்றோம்.