Q260:1
கேள்வி (1909)-1-எலிசா வகுப்பாரில் யார் காணப்படுவார்கள்?
பதில் – முதலாவது காரியம், எலிசா வகுப்பார் என்கிற ஒரு வகுப்பார் இருப்பார்களா என்பதை நாம் அறியோம்; ஏனெனில் அப்படி இருப்பார்கள் என்று வேதாகமம் உறுதியாகச் சொல்வதில்லை. இவ்வகுப்பார் இருப்பார்கள் என்று நாம் அனுமானிக்கின்றோமா? ஆம்! எதன் அடிப்படையில் இப்படி அனுமானிக்கின்றோம்? காரணம் என்னவெனில், எலியா வகுப்பார் என்று ஒரு வகுப்பார் இருக்கின்றார்கள்; மேலும் நமது கர்த்தராலும், வெளிப்படுத்தின விசேஷத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள ஓர் எலிசா வகுப்பார் காணப்படுகின்றனர் என்று வேதவாக்கியங்களானது மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றன. எலியாவினுடைய ஊழியத்தின் நிறைவு காலத்தில், இவரோடு எலிசா தன்னை இணைத்துக்கொண்டார் – எலிசா ஓர் ஊழியக்காரனாக இணைந்து கொண்டார், மேலும் இறுதியில் ஒரு மாபெரும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார். ஒருவேளை எலிசாவை ஒரு வகுப்பாருக்கான நிழலாக கருதுவோமானால், அவர் இரண்டு வகுப்பாருக்கு நிழலாகக் காணப்பட வேண்டும். முதலாவதாக அவர் திரள்கூட்டத்தாருக்கு நிழலாவார், ஏனெனில் எலியாவின் சால்வை இவர்மேல் விழுந்தது; இது எலியா வகுப்பார் எடுத்துக் கொள்ளப்பட்ட பிற்பாடு, எலியாவின் வல்லமை அல்லது வேலை எலிசா வகுப்பார் மீது விழுவதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. எலிசா யோர்தான் நதியினிடத்திற்குச் சென்று, சால்வையைக் கொண்டு தண்ணீரை அடித்து, நதியைக் கடந்துபோனதே, அச்சால்வையைக்கொண்டு எலிசா செய்த ஒரே ஒரு காரியமாய் இருக்கின்றது. இது எலியா வகுப்பார் போலவே எலிசா வகுப்பாரும் மரணத்திற்குள் கடந்துசெல்வதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; யோர்தான், மரணத்தை அடையாளப் படுத்துகின்றதாய் இருக்கின்றது. யோர்தானைக் கடந்துபோன பிற்பாடு, அவர் சில சீர்த்திருத்த வேலைகளைச் செய்யத் துவங்கினார். இது திரள்கூட்டத்தாரைக் குறிப்பதில்லை, மாறாக வேறொரு வகுப்பாரைக்குறிப்பதாகத் தோன்றுகின்றது – அதாவது ஆயிர வருஷ யுகத்தில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறும் முற்பிதாக்களின் வேலையை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. இறுதியில் திரள்கூட்டத்தார் போன்று முற்பிதாக்களும் ஒரே தளத்தில் காணப்படுவார்கள் என்றும், அதேபோன்ற மகிமையையும் பெற்றுக்கொள்வார்கள் என்றும் வேதவாக்கியங்கள் காண்பிப்பதாக நாங்கள் நம்புகின்றோம்.