Q520:2
கேள்வி (1916 – Z.5939)-2- சொசைட்டியின் ஏற்படுத்துதல் அல்லது நியமித்தலானது நீக்கப்படுதல் என்பது, இப்படியாகக் சொசைட்டியினுடைய ஊழியத்தினின்று தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ள பயண ஊழியக்காரன், அதன் பிறகு பிரசங்கம்பண்ணிடுவதற்கு உரிமையற்றவர் என்பதைக் குறிக்குமா?
பதில் – நிச்சயமாக இல்லை! பயண ஊழியக்காரனிடமிருந்து சொசைட்டியானது அதன் நியமனத்தை நீக்கிடுதல் என்பது, ஏதோ சில காரணங்களினால் அந்தப் பயண ஊழியக்காரன் இனிமேல் சொசைட்டியின் பிரதிநிதியாக இருப்பதில்லை என்பதை, அவருக்கோ அல்லது அவரது போதனைகளுக்கோ அல்லது அவரது நடத்தைக்கோ அல்லது வாழ்க்கை பராமரிப்பிற்கோ இனிமேல் சொசைட்டி பொறுப்பாய் இருக்காது என்பதை மாத்திரம் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும். பயண ஊழியக்காரர்களுடைய பட்டியலினின்று இப்படியாக நீக்கப்பட்டுள்ளதான அந்தப் பயண ஊழியச் சகோதரன், தொடர்ந்து சகோதரனாகவே காணப்படுவார் மற்றும் இப்படியாகவே சொசைட்டியினாலும் கருதப்படுவார்; ஆனாலும் – குணலட்சணத்தினுடைய சில பெலவீனங்களை வெளிப்படுத்துவதன் காரணமாகவோ அல்லது போதகசமர்த்துவத்தில் சில குறைபாடுகளின் காரணமாகவோ அல்லது ஊக்குவிக்கப்படக் கூடாது என்று சொசைட்டியானது எண்ணுகிற சில காரணங்களுக்காகவோ அல்லது சொசைட்டி பொறுப்பேற்க விரும்பிடாத சில விஷயங்களுக்காகவோ அல்லது பலதரப்பட்ட காரணங்களுக்காகவோ, நோய் முதலானவைகள் என்ற காரணங்களுக்காகவோ – அச்சகோதரன் இனிமேல் சொசைட்டியினுடைய பிரதிநிதியாய் இருப்பதற்குப் பொருத்தமான நபராகக் கருதப்படுவதில்லை.