Q662:2
கேள்வி (1911)-2- ஜெபக்கூட்டம் ஒன்றில் ஒரு சகோதரி ஜெபத்தில் நடத்துவது என்பது வேதவாக்கியங்களுக்கு முரணான காரியமா?
பதில் – பொதுவான ஆராதனை கூடுகைகளில் சகோதரர்களுக்கு இருப்பது போன்ற அதே ஒரு தலைமை நிலையைச் சகோதரிகளுக்கு, வேதவாக்கியங்களானது கொடுக்கிறதில்லை. ஸ்திரீயானவள் சபையை அடையாளப்படுத்துகிறவளாக இருக்கிறாள்; புருஷன் கிறிஸ்துவை அடையாளப்படுத்துகிறவனாக இருக்கின்றான்; “அப்போஸ்தலன் கூறுவதுபோல ஸ்திரீக்குப் புருஷன் தலையாய் இருக்கின்றான், புருஷனுக்குக் கிறிஸ்து தலையாய் இருக்கின்றார், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாய் இருக்கின்றார். இந்த வரிசைமுறைமையில் பார்க்கையில் சபைக்கு அடையாளமான ஸ்திரீ, கர்த்தருக்குச் செவிக்கொடுக்க வேண்டுமென்று வேதவாக்கியங்கள் போதிக்கின்றதாய் இருக்கின்றது. வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில் பொது ஊழியங்களில் சகோதரிகளினால் சிறிய அளவில் முதன்மை ஸ்தானங்கள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் இது ஒரு சகோதரி ஜெபத்தில் ஈடுபடக்கூடாது என்பதைக் குறிக்கின்றதாக நான் புரிந்து கொள்ளுகிறதில்லை. இதுபோன்ற ஒரு பொதுக்கூட்டத்தில் ஒரு சகோதரி ஜெபத்திற்கு நேராய் வழிநடத்துவது என்பது மிகவும் தகுதியற்றக் காரியமாய் இருக்கும் என்று நான் எண்ணிடுவேன். ஒருவேளை வீட்டுக்கூடுகையாகவோ அல்லது சிறு கூட்டமாகவோ அல்லது குடும்பக்கூடுகையாகவோ இருக்கையில் ஜெபத்திற்கு நேராக வழிநடத்துவதற்கு அவள் கேட்டுக்கொள்ளப்பட்டால் அது முற்றிலும் சரியான காரியமாக இருக்கின்றது என்று புரிந்துகொள்வேன்; மற்றும் அவள் முக்காடிட்டுக்கொள்ள வேண்டுமா என்று கேள்விக் கேட்கப்பட்டால், அப்போஸ்தலன் “ஆம் என்று பதிலளிக்கின்றார் என்று கூறிடுவேன் – ஒருவேளை அவள் ஜெபம் ஏறெடுத்தால் அவள் தன் தலையின் மீது முக்காடிட்டுக்கொள்ள வேண்டும்; தலைமயிர் அவளுக்கு முக்காடாக இருப்பினும், அவள் அதன்மேலும் முக்காடிட்டுக்கொள்ள வேண்டும். இது அவள், தான் தலை அல்ல என்பதை அடையாளம் கண்டு கொள்வதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும் என்று அப்போஸ்தலன் கூறுகின்றார் மற்றும் இந்த விதத்தில் பேசுபவளாக இல்லாமல், கர்த்தருக்குச் செவிக்கொடுக்கும் சபையை அடையாளப்படுத்துகின்றாள்.