Q662:1
கேள்வி (1910)-1- நீங்கள் பரிந்துரைத்திருக்கும் அதிகாரம் மற்றும் வசனம் ரீதியான வேதாகம ஆராய்ச்சியில் சகோதரிகள் பங்கெடுக்கலாமா?
பதில் – ஒருவேளை இதுகுறித்து ஆறாம் தொகுதியில் நீங்கள் எதையேனும் காண்பீர்களானால் அதில் எழுதியிருப்பவைகளில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை என்பதைத் தெரியப்படுத்துகின்றேன். அப்போஸ்தலனுடைய கட்டளைக்குப் பின்பாக இருக்கும் பொதுவான கருத்து என்று நான் எண்ணுகிறது என்னவெனில்….. சபையில் ஆண்கள் தலைக்கு அடையாளமாய்க் காணப்படுகின்றனர் மற்றும் இதனால் சபையின் தலையாகிய கிறிஸ்துவுக்கு ஒரு நிழலாய்க் காணப்படுகின்றனர். சபை கிறிஸ்துவுக்குப் போதிக்கக்கூடாது; மாறாக கிறிஸ்துவே சபைக்குப் போதிக்க வேண்டும்; இப்படியாகவே ஆண், பெண் விஷயத்திலும், ஸ்திரீயானவள் புருஷனுக்கு உபதேசிக்கக்கூடாது. இதையே அப்போஸ்தலன் அறிவுறுத்துவதாகத் தெரிகின்றது. இதற்கு மிஞ்சி செல்வது என்பது தவறாக இருக்கும்; அதாவது நண்பர்களில் சிலர் இது பள்ளிக்கூடங்களில் கற்பித்துக்கொடுக்கிறதையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது என்று கூறுவது தவறாகும். அப்போஸ்தலன் சபை பற்றிப் பேசுகின்றாரே ஒழிய குடும்பத்தைப் பற்றியல்ல. தாயானவள் குடும்பத்திற்குப் போதிப்பது சரியான காரியமாகும் மற்றும் அது செய்யப்படவும் வேண்டும் மற்றும் அப்போஸ்தலன் கூறியது எதுவும் இதற்கு முரண்படுகிறதாக என் மனதிற்குத் தோன்றவில்லை சபையில் “உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள் என்று அப்போஸ்தலன்தான் கூறியுள்ளாரே ஒழிய, நான் இப்படிக் கூறவில்லை. நண்பர்களில் சிலர் நான்தான் இப்படிக் கூறுவதாக எண்ணுகின்றனர். நான் இப்படிச் சொல்லவில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகின்றேன். நான் மறுஎல்லைக்குச் செல்வதற்கும், அவர்களுக்கு அதிகப்படியான சுயாதீனம் கொடுப்பதற்கும் விரும்புபவனாக இருந்திருப்பேன். இவ்விஷயத்தில் எனக்கும் சரி, எனது சகோதரனே அல்லது சகோதரியே – உங்களுக்கும் சரி, நமது விருப்பத்தின்படி முடிவு எடுக்க முடியாது. ஒருவேளை நான் ஒரு சகோதரியுடைய இடத்தில் காணப்பட்டிருப்பேனாகில், அவருடைய சித்தம் செய்ய நான் விரும்பிடுவேன் மற்றும் நான் அவர் சித்தம் செய்யும்பட்சத்தில் அவரும் பிரியம் கொள்வார். ஆகையால் சபையில் நடைபெறும் பொதுவான கூடுகைகளில் சகோதரிகள் இரண்டாம் இடத்தை எடுத்துக்கொள்வதும், அமைதலாய் இருப்பதும் நலமாய் இருக்கும் என்று நான் எண்ணுகின்றேன். ஒரு சிறு கூட்டத்தில், அதுவும் கேள்விகள் சுற்றிக்கேட்கப்பட்டு வரும் ஒரு கூட்டத்தில் ஒரு சகோதரி கேள்வி ஒன்றினைக் கேட்பது தவறாய் இராது என்று புரிந்திருக்கின்றேன். ஒருவேளை நான் ஒரு சகோதரியாக இருந்திருந்தால் மற்றும் கேள்விக் கேட்க அனுமதிக்கப்பட்டிருந்தால், ஒருவேளை வெளிக்கொணர்வதற்குச் சத்தியம் எதையேனும் நான் பெற்றிருக்கும் பட்சத்தில், அதை வெளிக்கொணர்வதற்கு ஏதுவான அத்தகைய கேள்விகளைச் சகஜமாய்க் கேட்டுக்கொள்வேன். ஒருவேளை பல்வேறு சபை பிரிவுகளிலுள்ள நம்முடைய நண்பர்கள் அவர்களது கூட்டங்கள் சிலவற்றிற்குள் வருவதற்கு என்னையும், உங்களையும் அனுமதிப்பார்களானால் மற்றும் சில கேள்விகளை அவர்களிடம் கேட்பதற்கு நாம் அனுமதிக்கப்படுவோமானால், அவர்கள் நமக்கு இறையியல் கருத்துகளை மாத்திரம் கூறிடுவார்கள்.