Q15:2
கேள்வி (1913)-2- எபிரெயர் 12:23 “… பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகள்.” இங்கு பரிசுத்த பவுல் அடிகளார் எந்த வகுப்பாரைக் குறிப்பிடுகின்றார்?
பதில் – இக்காரியத்தினை இரண்டு கண்ணோட்டங்களில் பார்க்க வாய்ப்புள்ளது, ஆனால் நாம் ஒன்றை மாத்திரம் குறிப்பிடப்போகின்றோம்; அதுவே சரியான கண்ணோட்டமும் ஆகும். மாற்று கண்ணோட்டத்தினை எடுப்பவர்களுடன் நாங்கள் சண்டையிடப்போவதில்லை, ஏனெனில் யாரைப் பற்றிக் குறிப்பிடுகின்றார் என்று அப்போஸ்தலன் விவரிக்கவில்லை; ஆனால் அவர் முற்பிதாக்கள் வகுப்பாரையே குறிப்பிட்டுள்ளார் என்று எண்ணுகின்றோம்; இப்படி அவர்களைத்தான் இந்த வசனத்தில் குறிப்பிட்டிருக்கின்றார் என நாங்கள் எண்ணுவதற்கான காரணம் என்னவெனில், அவர் சபை வகுப்பாரைக்குறித்து வேறொரு இடத்தில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகின்றது. அவர் சபையைப் “பரலோகத்தில் பேரெழுதப்பட்டவர்களாகிய முதற்பேரானவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகின்றது. லேவி கோத்திரம் ஒட்டுமொத்தமாக எப்படி ஆசாரியர்களை மாத்திரமல்லாமல், இஸ்ரயேலின் முதற்பேறானவர்களையும் அடையாளப்படுத்துகின்றதோ, அதுபோல முதற்பேறானவர்களின் சபையும் கருதப்படுகின்றது; ஆகையால் “பரலோகத்தில் பேரெழுதப்பட்ட முதற்பேறானவர்களின் சபை” எனும் வரியானது, சபையையும், திரள்கூட்டத்தாரையும் சேர்த்தே உள்ளடக்கியுள்ளது. ஆகையால் இப்படி இருவகுப்பாருமே உள்ளடங்குவார்களானால், மற்ற எந்த வகுப்பாரைக்குறித்து அவர் அவ்வசனத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்? அவர் முற்பிதாக்களையும், அவர்களின் உயிர்த்தெழுதலின்போது அவர்கள் முன்புபோல் அபூரண ஜீவிகளாக இல்லாமல், பரிபூரண ஜீவிகளாக வருகையில், அவர்களது ஜீவன்கள், அவர்களது ஜீவனுக்கான ஆவி பூரணப்படுத்தப்பட்டிருக்கும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் என்பது எங்களது கருத்தாக இருக்கின்றது. பெரும்பாலான மனுக்குலத்தார் படிப்படியாகவே பூரணமாக்கப்படுவார்கள்; மேலும் அப்போது பூரணராக்கப்பட்டிருக்கும் நீதிமான்கள் பொருத்தமட்டில், முந்தைய காலத்திலேயே, அவர்களுடைய இருதயங்கள் ஏற்கெனவே பரீட்சிக்கப்பட்டுள்ளபடியால், அவர்களுக்கே உரிய பிரம்மாண்டமான பங்கினைப் பெற்றுக்கொள்வார்கள்.