Q254:1
கேள்வி (1915 – Z.5793)-1- நம்மில் அநேகர் மிகவும் உதவிகரமாக உள்ளது என்று கண்டுகொண்டுள்ளதும் மற்றும் அனைவருக்கும் பரிந்துரைக்கப்பட்டதுமான விசேஷித்த வாக்குறுதியை (vow) எடுத்துக்கொள்ளாதவர்கள் சபைக்கான ஊழியக்காரராகத் தேர்ந்தெடுக்கப்படலாமா?
பதில் – கர்த்தர் தாமே விசேஷமாய் அதை இந்தக் காலக்கட்டத்தில் கொண்டு வந்துள்ளார் என்றும், அது ஓரளவுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள் மத்தியில் பரீட்சையாக விளங்கும்படிக்கு நோக்கம் கொண்டுள்ளார் என்றும் நாம் நம்பினாலும், வாக்குறுதியைச் சகோதரத்துவத்திற்கான பரீட்சையாக நாம் ஆக்கிவிட முடியாது; அதைச் சகோதரத்துவத்திற்கான பரீட்சையாக்குவதற்கு வேதமும் நமக்கு அதிகாரம் வழங்கிடவில்லை. மூப்பர்களுக்கான தகுதிகளின் மத்தியில் குறிப்பிடப்படவில்லை எங்கிறபோதிலும், முன்மொழியப்படும் சகோதரனுடைய விநோதமான பாணிகள் அல்லது சரியற்ற ஆங்கில மொழிப்பேச்சானது கவனிக்கப்படப் பாத்திரமானவைகளாய் இருப்பதுபோன்று, வாக்குறுதியும் தெய்வீகக் கட்டளையின் காரியமாய் இராமல், மாறாக பகுத்துணரும் காரியமாய்க் காணப்படுகின்றது.
எங்குமுள்ள கர்த்தருடைய ஜனங்கள் மத்தியிலுள்ள அன்புக்குரிய மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்கள் அனைவருமே – வாக்குறுதி நியாயமான ஒன்று என்றும், அது தெய்வீக வார்த்தைகளுடனும், நம்முடைய அர்ப்பணிப்பின் வாக்குறுதியுடனும் இசைவாய் இருப்பதையும் மற்றும் இவைகளை நிறைவுப்படுத்தும் இளநீல தொங்கல்களாக அது இருக்கின்றது என்றுமுள்ள ஒருமித்தக் கருத்தில் பார்க்கின்றார்கள் என்று நாம் அறிவோமானால், இதனிமித்தம் நாம் பெரிதும் களிகூருவோம். அந்த வாக்குறுதிக்குக் கிறிஸ்தவ சகோதரன் அல்லது சகோதரி என்ன மறுப்புத் தெரிவிக்கக்கூடும் என்று யோசிக்காமல் யாராலும் இருக்க முடியாது. அவர்களின் மறுப்பானது, அவர்களின் இருதயத்தினுடைய நோக்கங்களில் ஏதேனும் தவறு காணப்படக்கூடும் அல்லது அவர்களது புரிந்து கொள்ளுதலில் ஏதேனும் குறைபாடு இருக்ககூடும் என்று சுட்டிக்காட்டுகின்றது என்று நம்மில் சிலருக்குத் தோன்றலாம். எனினும் மிகவும் நன்றாய் நியாயந்தீர்ப்பதற்கு நாம் வல்லவர்களல்ல. “மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் என்று ஆண்டவர் கூறியுள்ளார்.
வாக்குறுதியை எடுத்துக்கொண்டுள்ளவர்களுக்கும், அதுகுறித்த ஒருமித்த கருத்தினைக் கொண்டிருப்பவர்களுக்கும், மூப்பர்கள் அல்லது உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் முன்னுரிமைக் கொடுக்கப்படலாம் என்பது எங்களுடைய கருத்தாய் இருக்கின்றது. எனினும் ஒருவேளை சபையாரை வழிநடத்துவதற்குத் திறமிக்கவர்களாய் இருக்கும் சகோதரர்கள், மற்ற அனைத்து விதங்களிலும் ஏற்கத்தகுந்தவர்களாகவும், வாக்குறுதியினை எதிர்க்காதவர்களாகவும் இருப்பார்களானால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். இப்படியாகவே – தங்களால் முடிந்தமட்டும், வாக்குறுதி உள்ளடக்கியுள்ள காரியங்கள் அனைத்திற்கும் இசைவாக தாங்கள் வாழ்வதாகக் கூறிக்கொண்டு, அந்த எளிமையான வாக்குறுதி மற்றவர்களுக்கு உதவியாக இருக்க, அந்த வாக்குறுதியைத் தாங்கள் எடுப்பது என்பது ஏதேனும் விதத்தில் தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தினால், அதை எடுக்க மறுக்கிறவர்களாக மாத்திரம் காணப்படுபவர்களுக்கும் பொருந்தும். நம்மால் ஒருவேளை அவர்கள் இருதயங்களினுடைய எண்ணத்தினையோ, அவர்களது மனதின் விவாதங்களையோ புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம், எனினும் இம்மாதிரியான தருணங்களில் நம்மால் புரிந்துகொள்ள அல்லது உணர்ந்துகொள்ள முடியாதவைகளை விட்டுவிடலாம்.